காலத்தால் அழியாத காவியம்.
இப்பூவுலகின் உன்னத தலைவன்,
இந்திய மக்களின் கலங்கரை விளக்கம்,
பாரதத் தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன்.
உலகின் நாயகனாக திகழும் அதேவேளையில் பாரதத்தாயின் வெற்றித் திருமகனாகவும் திகழும் ”மோடிஜி” (Modiji) அவர்களின் அளப்பரிய வெற்றிக்கு இச்சிறிய பதிவை காணிக்கையாக்குகிறோம்.
“தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ” ?
– மகாகவி பாரதி
இந்திய அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் அமோக ஆதரவுடனும் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடனும் தொடர்ந்து அரியணை ஏறிவரும் பெருமைமிகு பிரதமர்.
அனைத்துலக மக்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்ட உன்னத தலைவர். மிகச்சிறந்த தேச பற்றாளர். வசீகரிக்கும் தன்மை கொண்ட மிகச்சிறந்த பேச்சாளர். உலகின் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
நம் பாரத தேசத்தின் புல்லுருவிகளான தேச துரோகிகளையும், பிரிவினைவாதிகளையும், வெளிநாட்டு கைக்கூலிகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.
”ஜெய் பாரத் மாதா கி” என்கிற முழக்கத்துடன் இந்தியாவின் உள் கட்டமைப்பை மிக சிறப்பாக மேம்படுத்தி வருபவர்.
இந்தியாவை உலகின் முன்னணி நாடாக கொண்டு வருவதையே தன் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகவும், இலட்சியமாகவும் கொண்டு 2014 முதல் தற்போது வரை பிரதமராக இயங்கி வரும் ஒப்பற்ற தலை சிறந்த நிர்வாகி.
பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திக்காட்டி ஒவ்வொரு இந்தியனையும் கர்வம் கொள்ளச்செய்த பாரதத்தின் ஒப்பற்ற தலைவனின் நல்லாட்சி மேன்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்!
”பாரத் மாதா கி ஜே”