"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Mother.

67 / 100 SEO Score

மத்தவங்க எல்லாம் அருகிருக்க

மனசெல்லாம் நீதானே நிறைஞ்சிருக்க

உன்னை மட்டும் இங்கே காணலையே

எனக்கு வாழ்வதற்கும் ஏனோ தோணலையே

Mother Memorial

தொட்டில் கட்டி தூங்க வச்ச

கட்டில் கட்டி தங்க வச்ச

வட்டில் தட்டில் திங்க வச்ச

இப்போ எட்டி நின்னு ஏங்க வச்ச…

உணர்வும் தந்தாய் – உலகினிலே

வாழ்வதற்கு ஓர் இடமும் தந்தாய்

உக்காந்து அழுவதற்கா பிரிவும் தந்தாய்.

எப்போதும் அரை வயிறு

கஞ்சிதானே நீ குடிப்ப

திங்கள் ஆறாய் அதுகூட

இல்லாம ஏன் படுத்த…

என் பசியை தீக்கத்தானே

பத்த வைச்ச விறகடுப்ப – இப்போ

பட்டினியாய் நானிருக்க

கல்லறைக்குள் ஏன் படுத்த…

இங்கு பித்தளையாய் நானிருக்க

அதை பெத்தவளாய் நீயிருக்க

பெருமை கொள்ளும் வேளையிலே

ஏனோ செத்தவளாய் ஆனாயே.

பேசியும் புரியா உறவுகளுக்கு மத்தியிலே

பேசி ஆவதென்ன என வாய் மூடி நின்றாயோ

கூவி அழைக்க உறவு ஆயிரமே இருந்தாலும்

“சிவனேசா” என்றழைத்தே அமைதி ஆனாயோ!

தருவாயா தாயே நீ எனக்கு ஒரு வரமே – நின்

மணிவயிற்றில் பிறக்க வேண்டும் மீண்டும் ஒரு தரமே.

“மகனே” என அணைக்க வேண்டுமம்மா உன் கரமே!…

பார் புகழ வாழ்த்த வேண்டுமம்மா நின் மனமே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!