Scientific Judgment

ExoMars – எக்ஸோமார்ஸ் 2016
ExoMars – எக்ஸோமார்ஸ் 2016. பூமியில் மனிதன் தோன்றி பலகோடி வருடங்களாகி விட்டன. பலநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்தே மனித இனம் விண்வெளியை கூர்ந்து கவனிக்க தொடங்கியது.

பரந்து விரிந்துள்ள விண்வெளியும், அந்த விண்வெளியுடன் ஒப்பிடும்போது ஒரு தூசி போல மிதந்து கொண்டிருக்கும் பூமியும் மனிதனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

எனவே,… எண்ணிலடங்கா சூரியனையும், கோடானுகோடி கோள்களையும் கொண்ட அண்டவெளியில்..  பூமியில் மட்டுமே உயிரினங்கள் வசிக்கின்றன என்றும் வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் வசிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று சாதிக்கும் சில முட்டாள்களின் கூற்றை ஏற்றுக்கொண்டு அவனால் சமாதானம் அடைய முடியவில்லை.

எனவேதான் பன்னெடுங்காலமாக பூமியை தவிர்த்து வேறு எதாவது கிரகங்களில் நம்மை போல் அறிவார்ந்த உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்கின்ற தேடல் மனித சமுதாயத்திற்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

வேற்றுகிரகங்களின் உயிரினங்களின் வாழ்க்கையை பற்றி அறிய அவன்கொண்ட முயற்சிகள் அவனை பூமியை கடந்து விண்வெளியில் பயணிக்கும் திறமையை வழங்கியுள்ளன.

பூமியின் மிக அருகிலுள்ள துணைக்கோளான நிலவில் கால்பதித்த மனிதன் அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்பதனை அறிந்தவுடன் அவனின் அடுத்த பார்வை பூமிக்கு அருகில் உள்ள கோளான ”செவ்வாய்” மீது விழுந்தது.

செவ்வாய்கிரகத்தின் நில அமைப்பை அறியும் பொருட்டும் அங்கு உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது உயிர்வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதனை அறியும் பொருட்டும் அமெரிக்காவும், ரஸ்யாவும் பல தடவை தங்களுடைய ராக்கெட்டுகளை செவ்வாய் நோக்கி அனுப்பியுள்ளன.

ரஸ்யா  செவ்வாய்கிரகம் செல்ல இதுவரை 19 தடவைக்கும் மேல் முயற்சிகள் மேற்கொண்டன.. ஆனால் அதில் பெரும்பான்மையான முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.

கியூரியாசிட்டி ரோவர் – Curiosity rover

அண்மையில் பூமியிலிருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம் பற்றி அறிய கடந்த 2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி புளோரிடாவிலுள்ள ராக்கட் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ”கியூரியாசிட்டி ரோவர்” என்ற விண்கலம் அமெரிக்காவால் அனுப்பப்பட்டது.

560 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்து 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கியூரியாசிட்டி ரோவர் வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் பலகோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ”மார்டியன் ஏரி” என்று பெயரிடப்பட்டுள்ள ஏரி படுகை ஒன்று உள்ளது.

இந்த ஏரி படுகையயில் ஆய்வு மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் அந்த ஏரியில் ”மீத்தேன் வாயு” (methane) இருப்பதையும். அதன் அளவு அவ்வப்போது மாறுபடுவதையும் கண்டறிந்து அறிவித்தது.

மேலும், ஏரி படுகைக்கு அருகே அமைந்துள்ள பாறைப்பகுதியில் உயிர் மூலக்கூறுகளான ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மூலக்கூறுகள் இருப்பதையும் கண்டறிந்து அறிவித்தது.

கியூரியாசிட்டியால் கிடைக்கப்பெற்ற இந்த தகவல் பூமிக்கு வெளியே உயிர்களை தேடும் விஞ்ஞானிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது.

கியூரியாசிட்டி பூமிக்கு அனுப்பிவைத்த நிழல் படங்களை ஆராய்ந்தபோது செவ்வாயில் எரிமலைகளும், நீண்ட ஆறுபோன்ற பள்ளத்தாக்குகளும் இருப்பதோடு உறைபனிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மீத்தேன் வாயு – Methane

பலகோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமி எப்படி இருந்ததோ அதேவாறு இப்போது செவ்வாய்கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அவர்களின் நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கியூரியாசிட்டி கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த மீத்தேன் வாயு விஞ்ஞானிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் மீத்தேன் வாயு உருவாக வேண்டுமெனில் உயிரினங்கள் அவசியம்.

நம் பூமியில் சதுப்பு நிலங்களிலிருந்து மீத்தேன் வாயு உற்பத்தியானாலும் கூட மரங்களிலிருந்து பெறப்படும் சருகு குப்பைகூளங்களிலிருந்தும், கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் அதிக அளவில் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.

இது பல நேரங்களில் தானாகவே எரியும் தன்மை கொண்டது என்பதால் நாம் இதை  ”கொள்ளி வாயு” என்றும் சதுப்பு நிலங்களில் இது வெளிப்படுவதால் ”சதுப்புநில வாயு” என்றும் பொதுவாக அழைக்கிறோம்.

அது மட்டுமல்ல இது சர்வ சாதாரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் ”இடுகாடு” களில் இறந்த உடல்களிலிருந்து உருவாகி அடிக்கடி வெளிப்படுவதுண்டு.

இந்த மீத்தேன் வாயுதான் இரவு நேரங்களில் இடுகாடுகளில் திடீர் திடீரென நெருப்புடன் வெளிப்பட்டு ”கொள்ளிவாய் பிசாசு” களாக  வந்து நம்ம பக்கத்துவீட்டு மூக்காயி, கருப்பாயி, செல்லாயி முதலானவர்களையெல்லாம் இன்றுவரை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது என்பது தனி கதை.

எனவே, செவ்வாய் கிரகத்திலும் மீத்தேன் வாயு இருப்பது கண்டறியப்படுள்ளதால் இங்கு முன்பு எப்போதாவது மிக சிறிய உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வருகின்றனர்.

அல்லது, இன்றும் நமக்கு தெரியாமல் நுண்ணுயிரிகள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கலாம் அல்லது அங்குள்ள நில அமைப்பில் ஏற்படும் சில வேதி மாற்றங்களால் கூட மீத்தேன் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பல அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்றே அறிய முடிகிறது.

ஆனால்,  சில விஞ்ஞானிகள் செவ்வாயில் உயிரினங்கள் வாழ அதிக அளவில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். இதற்கு அவர்கள் பூமியில் மீத்தேன் மற்றும் அமிலம் செறிந்த சில ஏரிகளில் சிலவகை நுண்ணுயிரிகள் வாழ்வதை மேற்கோள் காட்டுகின்றனர்.

எனவே  இதுபற்றி தெளிவாக ஆய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் மற்றும்  முன்னாள் சோவியத் ஒன்றியமும் இணைந்து அதி நவீன ஆய்வுக்கலம் ஒன்றை உருவாக்கியது.

எக்ஸோமார்ஸ்2016 – EXOMARS 2016

2016 ல் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அந்த ஆய்வுக்கலத்திற்கு ”எக்ஸோமார்ஸ்2016” (exomars 2016) என்று பெயரும் வைக்கப்பட்டது.

இந்த கலம் நெதர்லாந்து நாட்டிலுள்ள ஏரோஸ்பேஸ் மையத்தில் வடிவமைக்கப்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், கனடா மற்றும் ரஷ்ய நாட்டின் கூட்டு தயாரிப்பில் உருவான இந்த எக்ஸோமார்ஸ் விண்கலம் அதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்களிலேயே அதிநவீனம் செறிந்ததாகும்.

செவ்வாயில் உயிரின வாழ்க்கைக்கு தேவையான உயிர் வாயுக்களைப்பற்றி தெளிவாக அறியும் விதத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட ”எக்ஸோமார்ஸ் 2016” (exomars 2016) என்ற அதிநவீன ஆய்வுக்கலத்தை ”ஏரியான் 500” என்ற விண்கலம்  சுமந்து கொண்டு கஜகஸ்தானில் உள்ள ”பைக்காரா” என்னும் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ரஷ்யாவின் ”புரோட்டோன் எம்’‘ ராக்கெட் மூலம் 2016 ம் ஆண்டு மார்ச் 14 தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்த ”ஏரியான் 500” என்னும் விண்கலமானது 4.3 டன் எடை கொண்டது. இதன் ஆயுள் 5 ஆண்டுகள். மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் அதாவது செகன்டிற்கு 5.8 கிலோ மீட்டர் வேகத்தில் 5 கோடி கிலோமீட்டர் ( 5 மில்லியன் கி.மீ) பயணித்து 7 மாதத்திற்குள்ளாக செவ்வாய் கிரகம் அடைய வேண்டும் என்பதே இதன் இலக்கு.

ஏழு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடைந்தாலும் இது உடனே தன்னுடைய ஆய்வை தொடங்காது.

ஏனெனில், இது தன்னை செவ்வாய் கிரகத்தின் சரியான சுற்றுவட்ட பாதையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மேலும் சில மாதங்கள் ஆகும் என்பதால் சரியாக ஒருவருடம் கழித்தே தன் ஆய்வுப்பணியை தொடங்கும்.

அதாவது, 2017 ன்  இறுதியிலேயே செவ்வாய் கிரகத்தை ஆராயும் படி கட்டளையிடப்பட்டிருந்தது .

இதில் ”டிஜிஓ” [TGO] மற்றும் ”ஜியோபரேலி” [Schiaparelli] என்ற இரு ஆய்வுக்கலன்கள் பொருத்தப்பட்டிருந்தன.

டிஜிஓ என்னும் ஆய்வுக்கலம் செவ்வாயை அதன் சுற்றுவட்ட பாதையில் சுற்றிவந்து அந்த கிரகத்தை ஆய்வு செய்யும். புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.

இந்த ஆய்வுக்கலத்திலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஜியோபரேலி என்னும் வட்ட வடிவ ஆய்வுக்கலன் நேரடியாக செவ்வாய்கிரகத்தின் தரைப்பகுதியில் இறங்கி  மீத்தேன் வாயு குறித்து ஆய்வு நடத்தும்.

2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தியதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸோமார்ஸ் (exomars 2016) திட்டமிட்டபடி 7 மாதங்கள் வெற்றிகரமாக தன் பயணத்தை முடித்து அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்க வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டிருந்து.

விண்கலம் முதல் கட்டமாக இரண்டாக பிரிந்து செயற்கைக்கோளை செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும்.

இதை அடுத்து ”ஸ்கைப்பர் அலி” என்ற பகுதி செயற்கை கோளிலிருந்து தனியாக பிரிந்து செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி தரை இறங்க வேண்டும்.

இந்த செயல் திட்டம் மிக சரியாக வெற்றிபெற்றால் செவ்வாய் கிரகம் குறித்து பல உண்மைகள் தெரிய வருவதோடு பூமியின் பரிணாமம் குறித்தும் பல அரிய உண்மைகள் நமக்கு தெரிய வரும்.

செவ்வாய் தோஷத்தால் செயலிழந்த எக்ஸோமார்ஸ்

திட்டமிட்டபடி பூமியில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம் வெற்றிகரமாக 5 கோடி கிலோமீட்டர் பயணித்து செவ்வாய் கிரகத்தை நெருங்கியது.

நாளொன்றுக்கு நான்குமுறை செவ்வாய்கிரகத்தை சுற்றி வலம் வந்த எக்ஸோமார்ஸ் (exomars 2016) செவ்வாய் குறித்த பல புதிய தகவல்களை புகைப்படங்களாகத் தர தொடங்கியது.

செவ்வாய் கிரகத்தில் நீர்வீழ்ச்சி இருப்பது போன்ற படத்தையும் அதே நீர் வீழ்ச்சிகள் கோடைகாலத்தில் மறைந்து போவதையும் படம்பிடித்து அனுப்பியது.

மீத்தேன் வாயு செவ்வாய் கிரகத்தில் எந்த இடத்திலிருந்து கசிந்து வெளியேறுகிறது என்பதனையும் தெளிவாக பூமிக்கு அனுப்பியது.

பயணத்தின் அடுத்த கட்டமாக ”ஸ்கைபர் அலி” தன் பயணத்தை தொடங்க தயாரானது.

இது செயற்கை கோளிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு வெளியேறி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்க தயாரானது.

திட்டமிட்டபடி பாதுகாப்பாக தரை இறங்க அதில் பொறுத்தப்பட்ட பாராசூட்டும் செவ்வனே வேலை செய்தது. சரியான நேரத்தில் வெப்ப தடுப்பும் வெளியேறி தன் கடமையை செய்தது.

ஆனால்,… தொடர்ந்த அடுத்த விநாடியில்தான் சோதனையோடு கூடிய வேதனை ஆரம்பமானது.

ஏனெனில் எக்ஸோமார்ஸ்ன் (exomars 2016) ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து வடிவமைத்த விஞ்ஞானிகள் அதன் ஜாதகத்திலுள்ள ”செவ்வாய் தோஷத்தை” கவனிக்க தவறிவிட்டார்கள்.

விஞ்ஞானிகள் போடும் திட்டம் சரியாக இருந்தாலும் விண்கலத்தின் ”கட்டம்” சரியில்லை என்றால் கஷ்டம்தான் போல..

முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கிணங்க செவ்வாய் தோஷத்தை கவனிக்க தவறியவர்கள் அதற்கான பரிகார பூஜை செய்யவும் தவறியதால் இது தரையை தொடுவதற்கு ஒரு நொடிக்கு முன்பாகவே இதனை இயக்கிய மென்பொருள் அடுத்த கட்டளையை பிறப்பிக்க இதனால் ஸ்கைபர் அலி குழப்பமடைய தொடங்கியது.

ஸ்கைபர் அலி தான் தரை இறங்கியதாக தவறாக நினைத்துக் கொண்டு தரையிலிருந்து சரியாக 2 மீட்டர் தொலைவிலேயே தன் இஞ்சினை நிறுத்தியது.

விளைவு,… ஸ்கைபர் அலி வேகமாக சென்று செவ்வாயில் வாயோடு வாய்வைத்து முத்தமிட்டு தன் கடைசி மூச்சை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் எக்ஸோமார்ஸின் (exomars 2016) ஒருபகுதி வெற்றி.. ஆனால் விதி செய்த சதியால் அதன் மறுபகுதி தோல்வியில் முடிந்தாலும் விஞ்ஞானிகள் அதனை தோல்வியாக நினைக்கவில்லை. இது தங்களுடைய முயற்சிக்கு கிடைத்த ஒரு நல்ல அனுபவ பாடமாகவே எடுத்துக்கொண்டனர்.

எனவே மனம்தளராத நம் விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் 2021 ல் பயணிக்க புதிய அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது ”எக்ஸோமார்ஸ் 2020”. இதன் பயணம் வெற்றிபயணமாக அமைய நாமும் இணைந்தே வாழ்த்துவோம்!!

The post ExoMars – எக்ஸோமார்ஸ் 2016 appeared first on Scientific Judgment.

Science Experiments – Banana
Science Experiments – Banana. வாருங்கள் மாணவ செல்வங்களே!… இனி நாம் அவ்வப்போது உங்கள் அறிவுக்கு வளம் சேர்க்கின்ற “சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்“ன்னு (science experiments) சொல்லப்படுகிற சிலவகையான எளிமையான அறிவியல் பரிசோதனைகளை சொல்லித்தர போகிறோம்.

அத அப்படியே செஞ்சுபாத்து உங்க அறிவை இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்த்துக்கோங்க… சரியா !!.

இது நம்மோட முதல் “எக்ஸ்பிரிமெண்ட்” (science experiments) என்கிறதுனால அங்க இங்க அலையாம சுலபமாக உங்கள் இடத்திலேயே கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை (banana) வைத்தே முதல் பரிசோதனையை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கோம்…

Science Experiments – Banana

பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளும் அளவிற்கு வாழைப்பழத்தில் அப்படி என்ன பேஷாலிட்டி இருக்குதுன்னு கேக்குறீங்களா?

இருக்குங்க… எவ்வளவோ இருக்கு…

வாழைப்பழம் – Banana Experiments

நீங்கெல்லாம் வாழைப்பழத்தை கையில தொட்டு பாத்திருப்பீங்க. மொள்ளமா தோலை உருச்சி வாயில வச்சு பாத்திருப்பீங்க. ஏன் பல நேரங்களில் அதிலிருந்து வெளிப்படும் அந்த ரம்மியம் நிறைந்த இனிமையான நறுமணத்தை ஆசையாக முகர்ந்துகூட பாத்திருப்பீங்க…

ஆனா எப்போதாவது அதனுடைய ரம்மியமான அந்த நறுமணத்திற்கான காரணம் என்ன என யோசிச்சு பார்த்திருக்கீங்களா??…

இதுவரையில் அதுபற்றி யோசிச்சதுகூட இல்லையா… அப்போ இப்போ தெரிச்சுக்கோங்க..

எத்திலீன் வாயு – Ethylene

“எத்திலீன்” (Ethylene) வாயு கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லேனா அதையும் இப்போ தெரிஞ்சுக்கோங்க..

இது ஒரு நிறமற்ற வாயு. எளிதில் தீப்பற்றி எரியக்கூடியது. கூடவே மென்மையான இனிய நறுமணமும் கொண்டது.

வாழைப்பழத்தை கையில புடிச்சு மூக்கு பக்கத்துல கொண்டு போனீங்கன்னா மென்மையா ஒரு வாசம் வரும் பாருங்க… அது இந்த எத்திலீன் வாயுதானுங்க…

எல்லா பழங்களிலும்தான் வாசனை வருது… இத மட்டும் எத்திலீன் வாசம்ன்னு நாங்க எப்படி நம்புறதுன்னு கேக்குறீங்களா?

உங்க டவுட்டும் நியாயம்தானுங்க… உங்க சந்தேகத்தை கிளீயர் பண்ணுறதுக்குத்தான் இந்த வாழைப்பழத்தை வச்சு இப்போ ஒரு “சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்” (science experiments) செய்து பார்க்கப் போறோம்…

இந்த எத்திலீன் வாயுவுக்கு இன்னுமொரு சிறப்பு குணமும் இருக்குங்க.

அது இன்னான்னா.. இது ஒரு தாவர நொதியாக செயல்படுவதால் காய்களை விரைவாக கனியாக மாற்றும் திறன் இதற்கு உள்ளது.

அதாவது ஒரு கலனில் பழுக்காத காய்களை வைத்து அதற்குள் இந்த எத்தலீன் வாயுவை (Ethylene gas) நிரப்பி மூடி வைத்தீர்கள் என்றால் அந்த காய்கள் பிற காய்களைவிட மிக விரைவாக பழுக்க ஆரம்பித்துவிடும்.

எத்தலீனுக்குள்ள இந்த சிறப்பை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் இப்போ உங்களிடமுள்ள வாழைப்பழமானது எத்திலீன் வாயுவை (Ethylene gas) உற்பத்தி செய்கிறதா… இல்லையா… என்பதனைப் பரிசோதிக்கப் போகிறோம்.

வாருங்கள் பரிசோதனையை ஆரம்பிக்கலாம்… ஸ்டார்ட் மியூசிக்…    ♬♫♪♩

ஒரு வாழைப்பழமும் ரெண்டு தக்காளி பழமும்

இப்போ இந்த எக்ஸ்பிரிமெண்ட் – ஐ  செஞ்சுபார்க்க உங்களிடமிருக்கும் அந்த ஒரே ஒரு வாழைப்பழத்துடன் கூடவே இரண்டு “தக்காளி காய்”களும் கூட தேவைப்படலாம்.

இப்போ உங்களிடம் இரண்டு “குண்டு தக்காளி” இருக்குதுன்னு வச்சுக்கோங்க…

(இரண்டு “குண்டு தக்காளி”ன்னு சொன்னவுடனேயே நீங்களாகவே எதையாவது கற்பனைபண்ணி தொலைக்காதுங்கோ… நாம சமையலுக்கு பயன்படுத்துகிறோமில்லையா “தக்காளி பழம்”!!.. அந்த தக்காளி பழத்தைத்தான் சொல்லுறேனுங்கோ!……).

உங்களிடம் இருக்கும் அந்த ரெண்டு குண்டு தக்காளிகளும் இன்னும் பழுக்காமல் காயாகவே இருக்குதுன்னு வச்சுக்கோங்க…

தக்காளி காயாக இருக்கறதுனால அது உங்களுக்கோ அல்லது மத்தவங்களுக்கோ எந்த விதத்திலேயும் பயன்படப் போறது இல்லையல்லவா?…

இப்போ யாருக்கும் பயன்படாமல் இருக்குற அந்த இரண்டு பெங்களூரு தக்காளி காய்களை உங்களிடம் இருக்கும் அந்த ஒரே ஒரு சிங்கிள் வாழைப்பழத்தைக் கொண்டு எப்படி பல்லு படாமல் பழுக்க வச்சு பயன்படுத்துறதுன்னுதான் இப்போ இந்த எக்ஸ்பிரிமெண்ட்டுல பார்க்கப்போறோம்.

இந்த எக்ஸ்பிரிமெண்ட்ட செஞ்சுப்பாக்க உங்களுக்கு தேவை ஒரு இரண்டு பழுக்காத “தக்காளி காய்“… அப்புறமா பழுத்த “வாழைப்பழம்” ஒன்று… இவைகளுடன் “பேப்பர் பேக்” இரண்டு தேவை.

இப்போ உங்களிடம் இரண்டு பழுக்காத பெங்களூரு தக்காளி காய்களும், ஒரு பழுத்த “ரசகதலி” வாழைப்பழமும் இருக்குதில்லையா?…

(அது என்ன மறுபடியும் நமட்டு சிரிப்பு… மனச அங்கிட்டு இங்கிட்டு அலைபாய விடாம பொத்திகிட்டு எக்ஸ்பிரிமெண்ட்ல மட்டும் கவனத்தை வையுங்கோ)

இதனுடன் கூடவே இரண்டு காகிதப்பையையும் எடுத்துக்கிட்டீங்கதானே.

சரி… இனி நாம எக்ஸ்பிரிமெண்ட்ட ஆரம்பிக்கலாம்…

உங்களிடமுள்ள இன்னும் பழுக்காத அந்த இரண்டு தக்காளி பழங்களை ஸாரி… தக்காளி காய்களை கையில எடுத்துக்கோங்க. அதில் ஒரு காயை முதல் காகித பையில் போடுங்க… மற்றொரு காயை இரண்டாவது காகித பையில் போடுங்க…

இப்போ உங்களிடம் உள்ள பழுத்த அந்த ஒரே ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கோங்க. அதை முதல் பையில் போடுங்க…

இனி இரண்டு பைகளையும் காத்து கருப்பு மட்டுமல்லாமல் ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு, நல்ல கண்ணு, நொள்ள கண்ணு இப்படி எந்த கண்ணும் படாம அப்படியே கமுக்கமா மூடி வச்சுக்கோங்க.

இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது என்னென்னா… அந்த இரண்டாவது பைக்குள்ள தக்காளி காய் மட்டுமே உள்ளது என்பதாலும், முக்கியமா “ரசகதலி வாழைப்பழம்” இல்லைங்கிறதால காத்து கருப்பு மட்டுமல்லாமல் நல்ல கண்ணு, நொள்ள கண்ணு என்று எந்த கண்ணும் நோட்டம் விடுறதுக்கு வாய்ப்பில்லை என்றாலும்கூட நம்மோட எக்ஸ்பிரிமெண்ட் ரிசல்ட் சக்ஸஸா வரணும் என்கிறதுனால முதல் பையை போலவே இதையும் மூடியே வையுங்க…

அவ்ளோதாங்க… ரொம்ப சிம்பிள்…

ஆச்சரியம் ஆனால் உண்மை

இனி இரண்டு பைகளையும் ஓரமா ஒரு பக்கம் வச்சுக்கிட்டு ராத்திரி நிம்மதியா படுத்து தூங்குங்க… இனி மீதியை நாளை காலை தூங்கி எழுந்திரிச்ச பின்னாடி பாத்துக்கலாம்.

கொர் … கொர்ர்ர்….

……..கொர்ர்ர்ர்ர்…

கொக்கரக்கோ கோ…

…கொக்கரக்கோ கோ…

கோழி கூவிடுச்சா… பொழுதும் விடிஞ்சுடுச்சா… அவசரப்படாதுங்க… கண்ணை கசக்கிவிட்டுகிட்டு,… கூடவே வேணுமின்னா ஒரு கொட்டாவியும் விட்டுக்கிட்டே மொள்ளமா எழுந்திரிங்க…

ஒவ்வொருநாளும் “கொக்கரக்கோ” சத்தம் கேட்டு தூங்கி எழுந்தவுடன் “பை” ஐ மெதுவா பிரிச்சு நோட்டம் விடுங்க.

பெரும்பாலும் இரண்டாவது நாள் அதிகாலையில்… நீங்கள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டு போவீங்க…

உண்மைதாங்க… ரெண்டு பையிலேயும் உள்ள தக்காளியை பாத்தீங்கண்ணா… அட வக்காளி.. ஒங்க கண்ணை உங்களாலேயே நம்ப முடியாதுன்னா பாத்துக்கோங்களேன்!

ஹைய்யோ… ஆமாங்க, அந்த வாழைப்பழம் இருக்குற பையிலுள்ள அந்த மொழு மொழு பெங்களூரு தக்காளி மட்டும் நல்ல அழகா… சிவப்பா… நாக்குல எச்சில் ஊற வைக்கிற அளவுக்கு பழுத்து இருக்கும்.

வாழைப்பழம் இல்லாத பையிலுள்ள தக்காளி இன்னும் பழுக்காம வெறும் காயாகவே இருக்கும்…

இதிலிருந்து இன்னா தெரியுது ஒங்களுக்கு?…

அந்த ஒரே ஒரு “ரசகதலி” வாழைப்பழம் மட்டும் பிள்ளையாண்டான் உங்களிடம் இல்லேன்னு வச்சிக்கோங்க… உங்ககிட்ட பெங்களூரு தக்காளி இரண்டு இருந்தும்கூட அது எந்த விதத்திலேயும் உங்களுக்கு பயன்பட போறதில்லைன்னு நன்றாகவே தெரியுதில்லீயோ..

சரி இனி மேட்டருக்கு வருவோம் …

மேட்டருன்ன உடனேயே வேறு எதையாவது கற்பனை பண்ணி தொலைச்சுடாதீங்க …

நான் இந்த எத்திலீன் மேட்டரைப் பத்திதான் இவ்ளோ நேரமா பேசிக்கிட்டு இருக்கேன் என்கிறத மட்டும் கவனமா ஞாபகம் வச்சுக்கோங்க சரியா?!….

சரி… இனி இந்த வாழைப்பழம் எப்படி அந்த பெங்களூரு தக்காளிகளை பிஞ்சிலேயே பழுக்க வைக்குதுன்னு பார்ப்போமா…

Ethylene Gas

இதற்கு நாம் ஆரம்பத்தில் சொன்னதுபோல “எத்திலீன்” (ethylene) வாயுதாங்க காரணம்.

அதாவது உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் வாழைப்பழமானது அது எந்த வெரைட்டி வாழைப்பழமாக இருந்தாலும்கூட பழுக்க ஆரம்பித்தவுடன் தூய்மையான சற்றே இனிய மணம்கொண்ட “எத்திலீன்” என்னும் வாயுவை (ethylene gas) வெளியிட தொடங்கிவிடுகின்றன.

இந்த எத்திலீன் வாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆரம்பத்தில் சொன்னதுபோல இது ஒரு நிறமற்ற வாயு. எளிதில் தீப்பற்றி எரியக்கூடியது. கூடவே மென்மையான இனிய நறுமணமும் கொண்டது.

பழுக்காத காய்களாக இருந்தாலும்கூட இந்த எத்திலீன் வாயுவானது அதன் மூலக்கூறுகளில் நொதித்தல் தன்மையை ஏற்படுத்தி மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதின்மூலம் காய்களுக்கு மென்மையையும், இனிப்புத் தன்மையையும் கொடுத்து பழுக்கவைத்துவிடுகிறது.

இந்த “சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்” (science experiments) மூலம் வாழைப்பழம் எத்திலீன் வாயுவை (Ethylene gas) வெளிவிடுகிறது என்பதனை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறதல்லவா…

உங்கள் வீட்டில் தனியாக ஒரு அறையில் நன்கு பழுத்த வாழைப்பழ தார் அதாவது வாழைப்பழ குலையை கட்டி தொங்க விட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அதில் நிறைய பழங்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். குறைந்தது 1 வாரத்திற்கு தேவையான பழங்கள் அதில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

இப்போது சிக்கல் என்னவென்றால் உங்களிடம் மேலும் ஒரு பழுக்காத காய்களை கொண்ட ஒரு வாழைக்குலையும் (வழை தார்) உள்ளதாக வைத்துக்கொள்வோம்.

ஏற்கனவே உள்ள பழுத்த குலையில் உள்ள பழங்களே உங்களுக்கு 1 வாரத்திற்கு வருமென்பதால் இந்த காயானது நான்கைந்து நாட்கள் கழித்து மெதுவாக பழுத்தால் போதும் என்று நீங்கள் விரும்பினால் தயவு செய்து அதனை வேறு ஒரு தனி அறையில் தனியாக கட்டி தொங்க விடுங்கள்….

அதைவிடுத்து ஒரே அறையில் கட்டி தொங்கவிட்டீர்கள் என்றால் ஏற்கனவே பழுத்த பழத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயுவானது (Ethylene gas) அந்த அறை முழுக்க நிரம்பியிருக்குமாதலால் இந்த பழுக்காத காய்களைக்கொண்ட வாழை குலையையும் உங்களுக்கு தேவைப்படும் நாளுக்கு முன்னதாக விரைவாகவே பழுக்கவைத்து உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.

அதுமட்டுமல்ல, சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்ற காய்கறிகளை வாழைப்பழம் வைத்திருக்கும் அறையிலிருந்து விலக்கியே வைக்கவேண்டும்.

ஏனென்றால், வாழைப்பழத்திலிருந்து வெளிப்படும் எத்தலீன் வாயுக்களால் (Ethylene gas) இந்த காய்கறிகளும் விரைவாக பழுக்க ஆரம்பித்துவிடுமாதலால் அவியல், பொரியல், துவையல் வைப்பதற்கு பதிலாக “பழ ஜூஸ்” போடும் நிலை உருவாகிவிடும்.

உங்களிடமிருக்கும் “அந்த” இரண்டு பெங்களூரு தக்காளிகளையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்… ஞாபகம் வச்சுக்கோங்க… தக்காளி பத்திரம்….

இந்த வாழைப்பழ எக்ஸ்பிரிமெண்ட் உங்களுக்கு பயனுடையதாக இருந்ததா!!… அப்படீன்னா இதேபோன்று மீண்டுமொரு “சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்”ல் (science experiments) சந்திபோம்… பை…

The post Science Experiments – Banana appeared first on Scientific Judgment.

Airship – ஆகாயக்கப்பல்
Airship – ஆகாயக்கப்பல்.

“முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா

காலம் நம் தோழன் முஸ்தபா…

டே பை டே… டே பை டே

வாழ்க்கை பயணம் டே பை டே

மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட் ஷிப்பா…”

மேலே ஒலிப்பது நம் ஒவ்வொருவரின் இளமைக்கால நினைவுகளையும் மீட்டெடுக்கும் “காதல் தேசம்” படப்பாடல்.

மூழ்கவே மூழ்காது என்று சொல்லப்பட்ட “டைட்டானிக் ஷிப்பே” (Titanic ship) கடலில் கவிழ்ந்து போனாலும் கூட… உண்மையான “ஃபிரண்ட் ஷிப்” மட்டும் எந்த சூழ்நிலையிலும் நம்மைவிட்டு பிரியாது என்பதனை நமக்கு உணர்த்தும் பாடல்.

ஃபிரண்ட் ஷிப்பைப்போலவே எந்த சூழ்நிலையிலும் கடலில் மூழ்காத இன்னொரு ஷிப்பும் உள்ளது. அந்த அசாதாரண ஷிப் – ஐ பற்றி பார்ப்பதற்கு முன்னால் சாதாரண “ஷிப்” ஐ பற்றியும் சிறிது பார்த்துவிடலாம் வாருங்கள்.

ஃபிரண்ட் ஷிப்பும் – ஏர் ஷிப்பும்

கடல்களில் கப்பல்கள் மிதந்து செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? உங்களில் பலபேர் அதில் பயணித்திருக்கலாம். இந்த கப்பல்கள் சிறியது பெரியது என பல்வேறு அளவு மற்றும் வடிவமைப்புகளில் உருவாக்கப்படுகின்றன.

கப்பல்களில் அதன் பயன்பாடுகளை பொருத்து பலவகை கப்பல்கள்  வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் பிரதான வகைகளாக 8 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன.

அவைகள்…

பயணிகள் கப்பல்

சரக்கு கப்பல்

மீன்பிடி கப்பல்

டேங்கர் கப்பல்

கண்டெய்னர் கப்பல்

பல்க் கேரியர்

போர்க்கப்பல்

நீர்மூழ்கி கப்பல்

மேற்கண்ட 8 பிரிவுகளை தவிர ஒன்பதாவதாக மேலும் ஒரு கப்பலும் உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அதனுடைய பயணம் நீரில் அல்ல ஆகாயத்தில்… ஆம் அதுதான் ஆகாயக்கப்பல் (Airship)…

ஹாட் ஏர் பலூன் – Hot Air Balloon

நீங்கள் ஆகாயத்தை கிழித்துக்கொண்டு செல்லும் விமானத்தை பார்த்திருப்பீர்கள்.. ஹெலிகாப்டர் பார்த்திருப்பீர்கள்.. ஏன் ராக்கெட் கூட பார்த்திருப்பீர்கள்.. ஆனால் ஆகாயக்கப்பல் (Airship) பார்த்திருக்கிறீர்களா!!.

பார்த்திருக்க வாய்ப்பில்லை…

ஏனென்றால் தற்போது இவைகள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இவைகள் மிகவும் பிரபலம்.

குறிப்பாக 1928 முதல் 1937 வரையில் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் வான்வெளியை கடப்பதற்கு இவைகள்தான் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டுவந்தன.

தற்போதும் சிலநாடுகள் தொடர்ந்து இத்தொழில்நுட்பத்தை பல்வேறு வழிகளில் மேம்படுத்தப்படுவதற்கான ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்திவந்தாலும், எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதே உண்மை.

பறவைகளைப்போல ஆகாயத்தில் பறக்கவேண்டும் என ஆசைப்பட்ட மனிதனின் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அவனுடைய முயற்சிக்கு முதலில் கைகொடுத்து வெற்றிப்பாதையை அமைத்துத்தந்தது இந்த பறக்கும் பலூன்கள்தான்.

1782 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “ஜோசப் மைக்கேல்” (Joseph Michel) “ஜாக்யூஸ் மான்ட்கோல்பியர்” (Jacques Montgolfier) ஆகிய இருவரும் ஒரு பெரிய பலூன் போன்ற கூண்டை உருவாக்கி அதற்குள் வெப்பக்காற்றை நிரப்பி அதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான ஒரு சிறிய கூண்டையும் அமைத்து அதன்மூலம் பறந்தனர்.

இதற்கு “ஹாட் ஏர் பலூன்” (Hot Air balloon) என பெயரிட்டனர்.

இதில் மனிதர்கள் பயணிக்க முடியும் என்றாலும் இது பயணிக்கும் வேகம் மிக குறைவாகவே இருந்தது.

காற்றின் ஒட்டத்தை கருத்தில்கொண்டு சுக்கான்களை பயன்படுத்தி இது பறக்கும் உயரத்தையோ வேகத்தையோ ஓரளவு கட்டுப்படுத்தமுடியும்.

ஆனாலும், இது காற்றின் திசையிலேயே பயணித்தது. இது இதிலுள்ள ஒரு பெரிய குறைபாடாகவே இருந்துவந்தது. நாம் விரும்பிய திசையில் இதனை செலுத்த முடியவில்லை.

டிரிஜிபிள் பலூன் – Dirigible Balloon

இதன் வேகத்தினை விரைவுபடுத்தும் பொருட்டும், விரும்பிய திசையில் இதனை செலுத்தும்பொருட்டும் 1852 ம் ஆண்டு “ஹென்றி கிப்பார்டு” (Henri Giffard) என்பவர் உருளை பலூனுக்கு பதிலாக வெப்ப காற்று நிரப்பப்பட்ட  நீள் வடிவம் கொண்ட பலூனை உருவாக்கி அதனுடன் பயணிகள் அமர்ந்துசெல்ல ஒரு கூண்டையும் இணைத்ததோடு கூண்டின் கீழ் நீராவி இன்ஜினையும் இணைத்தார்.

இதனால் நீராவி விசையை பயன்படுத்தி விரும்பிய திசையில் பயணிக்கமுடிந்தது.

இது மணிக்கு 6 மைல் வேகத்தில் பறந்தது. முந்தைய ஹாட் ஏர் பலூனின் வேகத்தைவிட இது பன்மடங்கு அதிகம்தான்.

ஆகாயத்தில் ஹாயாக பயணித்தால் போதுமா? கலனுக்கு பொருத்தமான பெயரை வைக்கவேண்டாமா?.. எனவே இதற்கு “டிரிஜிபிள் பலூன்” (dirigible balloon) என பெயரும் சூட்டி மகிழ்ந்தனர்.

“டிரிஜிபிள்”(dirigible) என்றால் “வழிநடத்தி செல்லக்கூடிய” என்று பொருளாம்.

பொருத்தமான பெயர்தான்.

அதன்பின் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட (நீராவி இஞ்சின்கள்தான்) பலூன்கள் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு நீராவி இன்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட அனைத்து பலூன்களும் “டிரிஜிபிள் – Dirigible” என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டன.

ஆனால் இதில் நிறைய பேர் பயணிக்கமுடியவில்லை.

எனவே, இந்த குறைபாட்டை களைய அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு நீரில் மிதக்கும் கப்பலை போன்றே ஆகாயத்தில் மிதக்கும் ஆகாயக்கப்பலை உருவாக்கும் எண்ணத்துடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் களத்தில் இறங்கினர்.

அவர்களின் எண்ணம்போலவே அதன் வடிவமைப்பும் அமைந்தது. ஆம்,.. ஆகாய கப்பலும் தண்ணீரில் மிதக்கும் கப்பலைப்போன்ற வடிவமைப்பிலேயே உருவானது.

ஆகாயக்கப்பல் – Airship

வெப்ப காற்று நிரப்பப்பட்ட “ஹாட் ஏர்” (Hot Air balloon) பலூனைப்பற்றி முன்பு பார்த்தோமல்லவா.. அந்த அமைப்பின் கீழ்பகுதியில் மனிதர்கள் அமர்ந்து பயணம் செய்வதற்காக ஒரு கூடை போன்ற கலன் அமைக்கப்பட்டிருக்குமல்லவா? அந்த கலன் இந்த ஆகாயகப்பலில் அச்சு அசலாக தண்ணீரில் மிதக்கும் கப்பலின் வடிவமைப்பிலேயே உருவாக்கப்பட்டதால் இதற்கு ஆகாயக்கப்பல் (Airship) என்றே பெயர் வைக்கப்பட்டது.

அதாவது அலுமினியத்தாலான ஒரு பெரிய கலத்துக்குள் “ஹைட்ரஜன்” நிரப்பப்பட்ட ஒரு பெரிய பலூன் வைக்கப்பட்டிருக்கும். இந்த உலோக கலத்தின் அடிப்பகுதியில் பயணிகள் அமர்ந்து பயணிக்கும் கப்பல் போன்ற அமைப்பு  இணைக்கப்பட்டிருக்கும்.

Zeppelin – Ship-like structure.

ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கலன் மிதந்து செல்லும் தருணத்தில் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விசையை உற்பத்தி செய்யும் இன்ஜின் இயக்கப்பட…

பலூனின் கீழ்ப்பகுதியில் பயணிகள் அமர்வதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டுள்ள கப்பல் போன்ற அந்த கலனும் ஒட்டிக்கொண்டு பறப்பதைப்பார்க்கும்போது பிரமிப்பாகவும் அதேவேளையில் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும்.

மேற்கண்ட கலன்களில் “ஹைட்ரஜன்” வாயு பயன்டுத்துவதற்கு காரணம் அது லேசான வாயு என்பதால் கனமான வாயுக்களை கீழே தள்ளி இது எளிதாக மேலெழும்பும் திறனை கொண்டிருப்பதால் ஹைட்ரஜன் வாயுவை பலூன்களில் நிரப்பி எளிதாக இதனை ஆகாயத்தில் மிதக்க வைக்க முடியும்.

ஆனால், இந்த ஹைட்ரஜன் வாயுவிற்கு எளிதாக தீப்பற்றும் திறன் இருப்பதாலும், இதனால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதாலும் தற்போது ஆகாய கப்பல்களில் எளிதில் தீபற்றாத எடைகுறைந்த வாயுவான “ஹீலியம்” வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கிராப் ஜெப்லின் – Graf Zeppelin

படிப்படியாக இந்த ஆகாயகப்பல் தொழில்நுட்பமானது வளர்ச்சியடைய 1875 ம் ஆண்டில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பலை “டபிட்ரி மெண்டலயெல்” என்னும் ரஷ்ய அறிஞர் உருவாக்கினார்.

இக்கப்பலானது சுமார் 11 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சாதனை படைத்தது.

இம்மாதிரியாக கப்பலை உருவாக்க பல நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு முனைப்பு காட்டினாலும் 1928 – ம் ஆண்டில் ஜெர்மனியில்தான் முதன்முதலாக மிகப்பெரிய ஆகாயக்கப்பல் உருவாக்கப்பட்டது.

ஜெர்மனியை சேர்ந்த பெர்டினான்டு ஜெப்பலின் (Ferdinand Von Zeppelin) என்ற தொழில்நுட்ப கலைஞர்தான் 772 அடி நீளத்தையும், 100 அடி அகலத்தையும்கொண்ட பிரமாண்ட ஆகாய கப்பலை (Airship) முதன்முதலில் 1900 ஆம் ஆண்டு உருவாக்கிக்காட்டினார்.

“கிராப் ஜெப்லின்” (Graf Zeppelin) என்று பெயரிடப்பட்ட அதில் 2650 குதிரைசக்தி கொண்ட இஞ்சின் இணைக்கப்பட்டிருந்தது.

இது பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையே பலமுறை தன் பயணங்களை தொடர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது நூற்றுக்கணக்கான பயணிகளையும் ஒருசில டன் எடைகளைக்கொண்ட சரக்குகளையும் சுமந்துகொண்டு சுமார் 80 மைல் வேகத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

கிராப் ஜெப்லின் (Graf Zeppelin) என்று இதற்கு பெயரிடப்பட்டிருந்தாலும் பயணிகள் அமரும் பகுதியானது அச்சு அசலாக கடலில் மிதக்கும் கப்பலைப்போலவே வடிவமைக்கப்பட்டிருந்ததால் மக்களால் இது “ஆகாயக்கப்பல்” (Airship) என்றே அழைக்கப்பட்டுவந்தது.

ரைட் சகோதரர்கள் – Wright Brothers

இந்த மிகப்பெரிய ஏர்ஷிப்பானது 1928 ம் ஆண்டுதான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருந்தது என்றாலும் அதற்கும் 20 வருடங்களுக்கு முன்னதாகவே தற்போது இயக்கத்திலிருக்கும் நவீன விமானத்தின் முன்னோடியான முதல்  விமானத்தை (Aircraft) 1903 ஆண்டு வாக்கிலேயே அமெரிக்க நாட்டை சேர்ந்த “ஆர்வில் ரைட்” (Orville Wright) மற்றும் அவருடைய சகோதரரான “வில்பர் ரைட்” (Wilbur Wright) இருவரும் இணைந்து உருவாக்கியதுடன் அதனை வெற்றிகரமாக இயக்கியும் காண்பித்திருந்தனர்.

1904_Flyer_Flight_Aircraft

ரைட் சகோதரர்கள் உருவாக்கிய Aircraft தொழில்நுட்பமானது எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், அதிக வேகத்தில் பயணம் செய்வதற்கு ஏற்றதாகவும் அமைந்ததால் “ஆகாயவிமானம்” என்னும் Aircraft தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ச்சியடைய “ஆகாயகப்பல்” என்னும் Airship தொழில்நுட்பம் தன்னுடைய இயக்கத்தை படிப்படியாக நிறுத்திக்கொண்டது.

என்றாலும், தற்போது இந்த “Airship” தொழில் நுட்பத்தை மேப்படுத்துவதற்கான முயற்சிகள் பல்வேறு நாடுகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில்கூட நம் அண்டை நாடான சீனா 28 பேர் பயணிக்கக்கூடிய 66 மீட்டர் நீளமுள்ள ஆகாயக்கப்பலை உருவாக்கியுள்ளது.

லித்தியத்தால் ஆன சக்திவாய்ந்த பேட்டரியுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் காற்றாடி விசைகொண்டு இயங்கும் இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம்வரை பறக்கும் திறனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் பயணிகளை சுமந்துகொண்டும் பயணிக்க இருக்கிறதாம்.

ஆனால், இது சீன தயாரிப்பு என்பதால் இதில் பயணிப்பவர்களின் நிலை “நித்திய கண்டம் பூரண ஆயுசு” என்பதற்கு பதிலாக “நித்திய ஆயுசு பரிபூரண கண்டம்” என்ற ரீதியில் அமைந்துவிடுமோ என்று அச்சப்படவும் வேண்டியுள்ளது.

ஏர்லேண்டர்- AIRLANDER

அதேபோல இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு நிறுவனம் அண்மையில் 85 அடி உயரமும், 302 அடி நீளமும், 143 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட வான்கப்பலை “AIRLANDER 10” என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.

இதனை அதிகப்படியாக மணிக்கு 148 கி.மீ வேகத்தில் இயக்க முடியுமாம். ஹாயாக 48 பேர்வரை பயணிக்கலாமாம்.

Airlander-10

325 குதிரைசக்தி திறன்கொண்ட நான்கு V8 டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இது அதிகப்படியாக 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன்வாய்ந்ததாம்.

ஹைபிரிட் எனப்படும் இரட்டை எரிபொருள் தொழிநுட்பத்தை கொண்ட இது டீசல் மற்றும் ஹீலியம் வாயு மூலமாகவும் இயக்கமுடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

நவீன விமானத்துடன் ஒப்பிடும்போது இதற்கு 20% குறைவான எரிபொருளே தேவைப்படுகிறதாம்.

500 அடி உயரத்தில் மணிக்கு 64 கி.மீ வேகத்தில் இயக்கி முதல் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்த இது அண்மையில் நடத்திய இரண்டாம்கட்ட சோதனையில் மூக்கு உடைபட்டு தோல்வியை சந்தித்தது.

எது எப்படியோ ஏர் ஷிப் (Airship) என்று சொல்லப்படும் இந்த ஆகாய கப்பலானது Aircraft என்று சொல்லப்படும் நவீன விமானங்களில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை பெற்றிருக்கவில்லை என்பதால் நவீன விமானங்களைப்போல இவைகளும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வெற்றிவாகை சூடுமா? என்கின்ற கேள்விகளை எழுப்பினோமென்றால்…

அதற்கான பதிலும் அதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது!!!

The post Airship – ஆகாயக்கப்பல் appeared first on Scientific Judgment.

Artificial – Bionic eye
செயற்கைக் கண்

Artificial – Bionic eye – உடல் உறுப்புகள் செயலிழந்தால் அல்லது விபத்துகளின்மூலம் அவைகள் அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்றாக செயற்கை கால், செயற்கை கை உள்ளதுபோல விபத்துகளாலோ அல்லது வேறு எதாவது கடுமையான நோய் தொற்றுதல், கண்ணீர் அழுத்தம், புற்றுநோய் காரணமாகவோ இரு கண்களில் ஒரு கண்ணை முற்றிலுமாக அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் அல்லவா?!.

இந்த சூழ்நிலையில் கண்கள் இருந்த பகுதியில் மிக பெரிய குழி நீங்காத வடுவாக அமைந்து மன சங்கடத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தலாம் அல்லவா?.

இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய நோயாளிகளின் இரு கண்களில் ஒரு கண் அகற்றப்பட்டபின் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கழித்து மற்றொரு கண்ணைப்போன்ற தோற்றமுடைய “செயற்கை கண்” (Ocular Prosthesis) பொருத்தப்படுகின்றன.

ஆம், கண்களிலும் செயற்கை கண்கள் உள்ளன. பார்ப்பதற்கு அச்சுஅசலாக  இயற்கை கண்களைப்போலவே காட்சி தருகிறது இது.

Artificial – Bionic eye

இந்த செயற்கை கண்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று பார்ப்பதற்கு இயற்கை கண்கள்போலவே காட்சிதரும் ஆனால் இதனால் இழந்த பார்வையை மீட்டுத்தர முடியாது. மற்றொன்று இயற்கை கண்கள் போலவே செயல்படுவதோடு கூடவே பார்வையையும் மீட்டு தருகிறது.

இந்த பதிவில் இந்த இருவகை செயற்கை கண்களைப் பற்றியும் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

பார்வையை மீட்டுத்தராத செயற்கை கண்கள்

இந்த பார்வையை மீட்டுத்தராத செயற்கை கண்களால் இழந்த பார்வையை திரும்ப பெறமுடியாது.

பார்வையை பெறமுடியாது என்றால் இந்த செயற்கை கண்களால் என்ன பயன் என கேட்கிறீர்களா?

பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன.

விபத்தினாலோ அல்லது புற்றுநோய் பாதிப்பினாலோ இரு கண்களில் ஒரு கண்ணை மட்டும் முழுமையாக அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என வைத்துகொள்ளுங்கள். அவ்வாறு அகற்றியபின் அகற்றப்பட்ட இடம் சுருங்கி சிறியதாகவோ அல்லது அந்த இடத்தில் மிகப்பெரிய குழிபோன்ற அமைப்போ  காணப்படும். இது முகத்திற்கு மிக பெரிய அளவில் அவலட்சணத்தை எற்படுத்தும்.

இது பாதிக்கப்பட்டவருக்கு மன கஷ்டத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் ஏற்படுத்தலாம். இப்படியானவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைவதுதான் பார்வையை மீட்டுத்தராத இந்த “செயற்கை கண்” (Artificial eye).

பாதிக்கப்பட்டவர்கள் இந்த செயற்கை கண்ணை பொருத்திக்கொள்ளும் பட்சத்தில் இதனால் பார்வை கிடைப்பதில்லை என்றாலும் நிஜ கண்களை போன்றதொரு தோற்றப்பொலிவை தருவதால் பொருத்திக்கொண்டவருக்கு உளவியல் சார்ந்த குறையை நீக்கி புதிய தன்னம்பிக்கையை கொடுக்கின்றன.

இந்த செயற்கை கண்கள் பொதுவாக “Stone eyes” அல்லது “Glass eyes” என அழைக்கப்படுகின்றன.

இந்த பார்வையை மீட்டுத்தராத செயற்கை கண்களில் இருவகைகள் உள்ளன.

Two types of artificial eyes

அவற்றில் ஒன்று ரெடிமேடாக கண்மருத்துவமனைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது. இந்த ரெடிமேட் கண்கள் (Ready made eye) விலைமலிவானது. அனைத்து ரெடிமேட் கண்களும் பொதுவானதொரு அளவுகளில் தயாரிக்கப்படுவதால் அனைவருக்கும் இது பொருத்தமானதாக அமைவதில்லை.

ஏனெனில், ஒவ்வொருவருடைய கண்குழிகளும் அவரவர் முக அமைப்பிற்கு தகுந்தபடி சிறிது மாறுபட்ட அளவுகளில் இருக்குமாதலால் அனைவருக்கும் இது கனகச்சிதமாக பொருந்துவதில்லை.

இந்த ரெடிமேட் கண்களை தவிர இதில் மற்றொரு வகையும் உள்ளது. அது நமக்கு ஏற்ற வகைகளில் கண்குழிகளை அளவெடுத்து நம் முகத்திற்கு கனகச்சிதமாக பொருந்தும்படி பொருத்தமானதாக செய்துகொள்ளும் வகையை சேர்ந்தது.

Polishing of an artificial glass eye

அளவெடுத்து தயாரிக்கப்படும் இம்மாதிரியான செயற்கை கண்களை மிக கச்சிதமாக பொருந்துவதோடு பார்ப்பதற்கும் இயற்கை கண்களைபோலவே காட்சியளிக்கும்!.. உழைப்பும் நீடித்து அமையும்!.. இவ்வாறு அளவெடுத்து தயாரிக்கப்படும் கண்ணை “கஸ்டமைஸ்டு ஃபிட் செயற்கைக்கண்” (Customized eye) என்று குறிப்பிடுகிறோம்.

சரி, இந்த செயற்கை கண்களை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று பார்ப்போமா!.

முதலில் கண்குழிகளை அளவெடுத்து மெழுகினை கொண்டு மாதிரி கண்களை உருவாக்குகிறார்கள். பின் இதனை அடிப்படையாகக்கொண்டு  PMMA எனப்படும் குறைந்த ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய மருத்துவத்தரம் வாய்ந்த அடர்த்தியான உயர்தர “Acrylic” எனப்படும் “பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்” என்னும் பாலிமர் பொருட்களால் செயற்கைக்கண்களை உருவாக்குகிறார்கள்.

இயற்கை கண்கள்போலவே காட்சியளிப்பதற்காக வெண்விழி மற்றும் கருவிழி என அனைத்தும் தத்துரூபமாக வரையப்படுகின்றன. இது பார்ப்பதற்கு இயற்கை கண்களைபோலவே காட்சியளிப்பதுடன் நீண்டநாட்கள் உழைப்பதால் மன சங்கடத்திற்கு மிகச்சிறந்த தீர்வாகவும் அமைகிறது.

இது பார்ப்பதற்கு ஒர்ஜினல் கண்களைபோலவே தோன்றினாலும் இதனைக்கொண்டு காட்சிகளை பார்க்க முடியாது என்பதே இதிலுள்ள மிகப்பெரிய குறைப்பாடு ஆகும்.

செயற்கை கண்களின் சிறப்புகள்

இதனை பொருத்திக்கொள்ள வயதுவரம்பு கிடையாது. எந்த வயதினரும் பொருத்திக்கொள்ளலாம்.

செயற்கை கண்கள் பொருத்திகொண்ட கண்களின் இமைகள் சாதாரண கண்களின் இமைகளைபோல மூடித்திறக்கும் தன்மையை பெற்றுள்ளன.

தூங்கும் போதோ அல்லது குளிக்கும்போதோ செயற்கைக்கண்களை அகற்ற வேண்டிய அவசியமில்லை.

ரெடிமேடு செயற்கை கண்ணை வருடத்திற்கு ஒருமுறை புதிதாக மாற்றவேண்டும். ஆனால் அளவெடுத்து தயாரிக்கப்படும் செயற்கை கண்களை 10 வருடங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும்!.

செயற்கை கண்களிலுள்ள குறைபாடுகள்

இதனை பொருத்திக்கொள்வதால் பார்வையை திரும்ப பெற முடியாது. கண்கள் இருப்பதுபோன்றதொரு தோற்றப்பொலிவை கொடுக்கும் அவ்வளவே…

இயற்கை கண்களைப்போல செயற்கை கண்களின் கருவிழிகள் மேலும் கீழும் இயல்பாக அசைவதில்லை. மிக சிறிய அளவே அசையும் தன்மையை பெற்றிருக்கும்.

விலை மலிவுடன் ரெடிமேடாக கிடைக்கும் கண்களைவிட நம் கண்களுக்கு பொருத்தமாக அளவெடுத்து கச்சிதமாக தயாரிக்கப்படும் கண்களானது அசையும் தன்மையை கொஞ்சம் அதிகமாக பெற்றிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் 50% அளவு அசையும் தன்மையை கொண்டுள்ளன.

செயற்கை கண்களை பராமரிக்கும் முறைகள்

செயற்கை கண்களை விசேஷ கவனமெடுத்து கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

ரெடிமேடாக கிடைக்கும் செயற்கை கண்களை வாரம் ஒருமுறையும், அளவெடுத்து தயாரிக்கப்பட்ட செயற்கை கண்களை மாதம் ஒருமுறையும்  சுத்தமான நீரினைக்கொண்டு அலம்ப வேண்டியது அவசியம்.

கண்கள் வறண்டுவிடாமல் தடுக்க மருத்துவரின் ஆலோசனைப்படி காலை, மாலை என இரு வேளைகளிலும் சொட்டுமருந்து விட்டுவருதல் அவசியம்.

செயற்கை கண்களை மறுபரிசோதனை செய்துகொள்வதற்கும், சிராய்ப்புகள் எதாவது ஏற்பட்டிருந்தால் அதனை பாலீஷ் செய்து புதுப்பிப்பதற்கும் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனைபெற வேண்டியது மிக மிக அவசியம்.

தோல்களில் உருவாகும் உப்பு நீர்கள் செயற்கை கண்களில் தேங்கிநின்று அல்லது அதில் படலமாக படிந்து கண்களில் உறுத்துதலை ஏற்படுத்தலாம். இதனை தவிர்க்க சிலமாத இடைவெளிகளில் மருத்துவமனை சென்று செயற்கை கண்களை முறையாக பரிசோதித்து சுத்தம் செய்தல் அவசியம்.

இதுவரை செயற்கை கண்கள் பார்வையை மீட்டுக்கொடுப்பதில்லை என்றும், முகத்தில் கண்கள் இருப்பது போன்றதொரு தோற்றத்தையே கொடுக்கிறது என்றும் பார்த்தோம். இனி பார்வையை மீட்டுத்தரக்கூடிய செயற்கை கண்களைப்பற்றி பார்க்கயிருக்கிறோம்.

பார்வையை மீட்டுத்தரும் செயற்கை கண்கள்

செயற்கை கண்கள் என்ற ஒன்றை வெறும் அழகுக்காக மட்டுமே உருவாக்குவதால் அதன் முழு பலன்களும் நமக்கு கிடைத்துவிடப்போவதில்லை. இயற்கை கண்கள் எப்படி இவ்வுலகை பார்க்க உதவுகிறதோ அதேபோன்று இவ்வுலகை பார்க்க உதவினால்தானே அது பயனுடையதாக இருக்கும்.

எனவே, விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக பார்வையை மீட்டுத்தரக்கூடிய செயற்கை கண்களை உருவாக்கும் முயற்சியில் போராடி வந்தனர். அவர்களின் முயற்சிகள் வீணாகவில்லை. அவர்களின் தொடர் முயற்சியின் பயனாக சில வருடங்களுக்கு முன்புவரை பிரகாசமான வெளிச்சத்தையும் மங்கலான ஒளி கீற்றுகளையும் பார்க்கும்படியான வெற்றியையே பெற்றிருந்தனர்.

ஆனால் தற்போது செயற்கை கண்களில் நவீன சிறியரக கேமிராவை பொருத்தி  காட்சிகளை படம்பிடித்து அவைகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பார்வை நரம்புகளுடன் இணைத்து காட்சிகளை தெளிவாக காண்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

இதில் தற்போது முதற்கட்ட வெற்றியை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

பயோனிக் ஐ – Bionic Eye

Artificial – Bionic eye – அமெரிக்காவிலுள்ள “கார்னெல்” பல்கலைகழகத்தை சேர்ந்த “வெய்ஸ்” மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் அறிஞர்கள் செயற்கை கண் கருவியை (Bionic Eye) உருவாக்கியுள்னர்.

இக்கருவியானது ஒளிக்கதிர்களை உட்கிரகிக்கும் “என்கோடர்” மற்றும் என்கோடரில் பெறப்பட்ட தகவல்களை மூளைக்கு எடுத்து செல்லும் “டிரான்ஸ்டி சர்” ஆகிய இருபகுதிகளை உள்ளடக்கியது.

இக்கருவியை கொண்டு முதற்கட்டமாக எலிகளை பயன்படுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையின் முடிவு ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது.

ஆம், செயற்கை கண் பொருத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்கமுடிந்ததை கண்ட விஞ்ஞானிகளால் எலிகளின் கண்களை மட்டுமல்ல தன் கண்களைக்கூட நம்பமுடியாமல் திக்குமுக்காடியுள்ளனர்.

இதனை மேலும் மேம்படுத்தி ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் (USYD) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக (UNSW) அறிஞர்கள் கூட்டாக இணைந்து எலக்ட்ரானிக் சிப்கள் பொருத்தப்பட்ட “பயோனிக் ஐ” (Bionic Eye) என்னும் பார்வையை மீட்டுத்தரும் நவீன கண்களை உருவாக்கி வெற்றிகண்டுள்ளனர். இதற்கு “Phoenix 99” என பெயர் சூட்டியுள்ளனர்.

இவர்கள் கண்டுபிடித்துள்ள “Phoenix 99” என்னும் இந்த நவீன செயற்கைக்கண் (Bionic Eye) தற்போதுவரை பரிசோதனை கூடத்திலேயே உள்ளதால் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சிலகாலம் ஆகலாம்.

வருங்காலங்களில் இந்த “பயோனிக் ஐ” (Bionic Eye) என்னும் பார்வையை மீட்டுத்தரும் செயற்கைக்கண்ணானது மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக புகழ்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இதனை உருவாக்கிய ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இஞ்சினியரின் பேராசிரியருள் ஒருவரான “கிரெக் சுவானிங்”.

எது எப்படியோ.. இனி வருங்காலங்களில் விபத்தினாலோ, அல்லது வியாதிகளாலோ கண்களில் பார்வையை இழந்தவர்கள் மட்டுமல்லாது பிறக்கும்போதே பார்வை இல்லாமல் இருப்பவர்களால்கூட செயற்கை கண்களின் (Bionic Eye) உதவியுடன் இனி இந்த உலகை ரசிக்கலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதே உண்மை!

The post Artificial – Bionic eye appeared first on Scientific Judgment.

Terabyte Love
கணினியும் காதலும்

Terabyte Love

”டெரா டெரா டெராபைட்டா காதல் இருக்கு

நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு”

இது அண்மையில் வெளிவந்து இளைஞர்களின் மனதில் காதல் துள்ளாட்டம் போட வைத்த “கத்தி” (kaththi movie) படத்தில் இடம்பெற்ற பாடல்.

அதெல்லாம் சரிதான் அது என்ன ”டெரா டெரா டெரா பைட்டா“

அது வேறொன்றும் இல்லைங்க, பொதுவாக ஒரு பொருளின் அளவை குறிப்பிட “லிட்டர்” (litre (or) liter), “கிலோகிராம்” (Kg), “மெட்ரிக் டன்” (metric ton) என்கின்ற அளவுகளையெல்லாம் பயன்படுத்துகிறோம் அல்லவா. அதுபோல எண் மற்றும் எழுத்துருவிலான தகவல்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான டிஜிட்டல் அளவீடுதான் (number of data) டெரா பைட் – TeraByte.

மேலும் பாடல் வரிகளில் வரும் பிட், பைட், டெரா பைட் (Terabyte) எல்லாமே வெறும் அர்த்தம் இல்லாத வெற்று வார்த்தைகள் என்று நினைத்து விடாதீர்கள், அத்தனையும் அர்த்தம் பொதிந்த நவீன டிஜிட்டல் அளவைகள்தான்.

அதாவது நம்ம கதாநாயகர் இந்த பாடல் மூலமா காதலியிடம் என்ன மெசேஜ் சொல்லுறாருன்னா… உன்மீது தான் வைத்துள்ள காதல் தோய்ந்த எண்ண அலைகளானது டிஜிட்டல் அளவையில் சொல்லப்போனால் ”டெரா பைட்” (Terabyte) கணக்கில் மனதில் கொட்டி கிடப்பதாக சிம்பாலிக்கா சொல்லறாப்ல!..

என்னடா இது காதலுக்கு வந்த சோதனை… இப்போதுதான் குருமா… சாரி… “திருமா” தயவில் “நாடகக் காதல்” பற்றி கேள்விப்பட்டோம்… அதற்குள்ளாக “விஞ்ஞான காதல்” வேறு வந்துவிட்டதா? என்கிறீர்களா…

பின்ன என்னங்க… ஊரையும் கெடுக்கும்… சாரி… உயிரையும் கொடுக்கும் உடன்பிறப்புகள் வாழும் இந்த திராவிட திருநாட்டிலே “விஞ்ஞான ஊழல்” இருக்கும்போது “விஞ்ஞான காதல்” இருக்கக்கூடாதா?

சரி!…. இனி “டெரா பைட்” (Terabyte) – ஐ பற்றி சுருக்கமாக பார்ப்போம்..

Terabyte Love – டெராபைட் காதல்

கணினிகளில் தகவல்களை அதாவது எண்கள், எழுத்துக்கள் மற்றும் ஆடியோ, வீடியோ என அனைத்து தகவல்களையும் பைனரி – binary எனப்படும் டிஜிட்டல் கோடுகளாக மாற்றப்பட்டே ”ஹார்ட் டிஸ்க்” (Hard disk) எனப்படும் சேமிப்பகத்தில் சேமிக்கப்படுகின்றன.

Terabyte Love

எண்களை  இரண்டு வகைகளில் அளவிடலாம். அதில் ஒன்று டெசிமல் (Decimal) மற்றொன்று பைனரி (Bainary).

டெசிமல் என்பது வெறும் பத்தே பத்து எண்கள்தான் (desi என்றால் 10 என்று பொருள் ) அவை 0 – 1 – 2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 ஆகிய 10 எண்களை குறிக்கும். இந்த 10 எண்களை கொண்டு பிற அனைத்து எண்களையும் உருவாக்கிவிட முடியும். இந்த முறையில்தான் நாம் வகுத்தல்,பெருக்கல்,கழித்தல், முதலான அனைத்து வரவு செலவு கணக்குகளையும் போடுகிறோம்.

ஆனால் இந்த டெசிமல் கணக்கு முறைகளெல்லாம் Computer என்னும் கணினிக்கு ஆகாது, ஏனெனில் டெசிமல் கணக்கு என்றால் அதற்கு கொஞ்சம் அலர்ஜி..

டெசிமல் எண்களிலுள்ள நெளிவு சுளிவுகளையெல்லாம் வைத்து இது 3 இது 4 என்று அதனால் எளிதில் புரிந்து கொள்ளமுடியாது… பெருமூளை கொஞ்சம் வீக்…. ( அதற்கு மூளையே கிடையாது என்பது வேறு விஷயம் )

எனவே அதற்கு மிகவும் பிடித்தமான நெளிவு சுளிவு இல்லாத பைனரி (Binary) என்னும் முறையில் கணக்கிடும் முறையே அதற்கு ஒத்துவரும்.

பைனரி எண்கள் அமைப்பு

Binary Number System – பைனரி என்பது இரும பெருக்கத்தில் அமையும் ஒரு கணக்கீட்டு முறை. அதாவது 1 – 2 – 4 – 8 – 16 – 32 – 64 – 128 – 256 – 512 – 1024 –  என அதன் மதிப்பு இரட்டிப்பாகி போய்க்கொண்டே இருக்கும். இதில் 3, 5, 6, 7 என்கிற எண்களையெல்லாம் காணவில்லையே எப்படி கணக்கிடுவது என்று திகைக்காதீர்கள், எல்லா எண்களும் இதற்குள் அடங்கி இருக்கின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள பைனரி நம்பரில் 2 உடன் 1 ஐ கூட்டினால் 3 கிடைத்துவிடும். அதேபோல் 4 உடன் 1 ஐ கூட்டினால் 5 கிடைத்துவிடும். அதேபோல் 4 உடன் 2 ஐ கூட்டினால் 6 கிடைத்துவிடும். 4 + 2 + 1 மூன்றையும் சேர்த்து கூட்டினால் 7 கிடைத்துவிடும். இதுதாங்க பைனரி கணக்கு.

ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல கணினிக்கு சிறுமூளை, பெருமூளை, முகுளம், கிட்னி, சட்னி எதுவும் இல்லையல்லவா! அதனால் நாம் சொல்லும் எந்தவிதமான எண்களையும், கட்டளைகளையும் அது பைனரி எண்களாகவே இருந்தால்கூட அதனால் புரிந்து கொள்ள முடியாது. கஷ்டம்தான்.

ஆனாலும் நம்முடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் கணினிக்கு மூளையே இல்லையென்றாலும் நாம் சொல்லும் இரண்டே இரண்டு கட்டளைகளை மட்டும் அதனால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அந்த கட்டளைகள் என்ன தெரியுமா?

அதுதான் ”YES”  or  ”NO”.

இப்போழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கணினியால் இரண்டே இரண்டு கட்டளைகளை மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றால் keyboard மூலம் நிறைய எண்கள், எழுத்துக்கள் மற்றும் கட்டளைகளை (Command) தட்டச்சு செய்து கணினிக்குள் அனுப்புகிறோமே? அதையும் அது புரிந்துகொள்வதுபோல தெரிகிறதே? என்பதுதான் அது.

Keyboard Technology

முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் கீ போர்டில் தட்டச்சு செய்கிற அனைத்து லெட்டர் மற்றும் கமெண்ட்களும் எனக்கும், உங்களுக்கும் புரிந்து கொள்வதற்கும் மனதில் பதிய வைப்பதற்கானதேயொழிய கணினிக்கானது அல்ல. கணினிக்கு அது புரியவும் புரியாது.

நாம் தட்டச்சு செய்யும் அத்தனை கமெண்ட்களும் keyboard ல் உள்ள ”மைக்ரோ பிராசசர்” (Micro Processor) மூலம் கணினிக்கு புரியும் விதத்தில் YES or NO என்கிற இரு கட்டளைகளாக மாற்றப்பட்ட பின்னரே கணினிக்குள் செலுத்தப்படுகின்றன. அதை குறியீடுகளாக ”0” மற்றும் ”1” என்ற டிஜிட்டல் கோடுகளில் வரையறுக்கிறோம். இதில் ”0”என்பது  NO என்றும் ”1”என்பது YES என்றும் பொருள்.

அதாவது கணினியிடம் எந்த எண்ணுடன் எந்த எண்ணை  கூட்ட வேண்டும் என்பதை ” 1 ” என்ற கமெண்டிலும் எதையெல்லாம் கூட்டாமல் விடவேண்டும் என்கிற கட்டளையை ” 0  ” என்கிற கமெண்டிலும் ( 10011011 )  கொடுத்து விட்டால் போதும். எவ்வளவு பெரிய கணக்கையும் கண நேரத்துல கூட்டி விடை கொடுத்து விடும். அவ்வளவு வேகம்.

முதல் 8 பைனரி பிட் தொகுப்பான  [1] – [2] – [4] – [8] – [16] – [32] – [64] – [128]  ஐ பைனரி கோடுகளாக YES or NO  காமெண்ட்களான [1] மற்றும் [0] மட்டும் பயன்படுத்தி உலகிலுள்ள அத்தனை கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல் கணக்குகளையும் போட்டு விடலாம். அதுமட்டுமல்ல உலகிலுள்ள அத்தனை எழுத்துக்களையும், வார்த்தைகளையும், குறியீடுகளையும் புரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல அத்தனை ஒலி மற்றும் ஒளி [Audio, Video] சமிஞ்சைகளை கூட கணினியில் பைனரி (Binary number) கோடுகளாக சேமித்து வைக்கவும் முடியும்.

நீங்கள் எளிதாக புரிந்துகொள்வதற்காக 1 முதல் 9 வரையான டெசிமல் எண்களை எவ்வாறு பைனரி கோடுகளாக “yes” or “no” அதாவது “1 – 0” என்ற குறியீட்டு முறையில் வரையறுக்கப்படுகின்றன என கீழே உள்ள முதல் 4 பைனரி பிட்கள் மட்டுமே கொண்ட அட்டவணையில் காணலாம்.

இதில் எந்த இலக்கத்தின் கீழ் “1” என்ற கமெண்ட் வருகிறதோ அதையெல்லாம் கூட்ட வேண்டும். எந்த இலக்கத்தின் கீழ் “0” என்னும் கமெண்ட் வருகிறதோ அந்த நம்பரை எல்லாம் கூட்டாமல் விட வேண்டும் என்று புரிந்து கொள்க.

இதைப்போலவே எழுத்துகள் மற்றும் குறியீடுகளும் பைனரி கோடுகளாக மாற்றப்பட்டே கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதற்கு 8 பைனரி பிட் களை கொண்ட அலகு (byte) உபயோகப்படுத்தப்படுகிறது. அதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.

இதைப்போலவே ஆடியோ மற்றும் வீடியோ file களும் மின்னலைகளாக மாற்றப்பட்டு அதன்பின் மின்னலைகள் “சேம்பிளிங்” என்ற தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி பைனரி கோடுகளாக மாற்றப்பட்டு அதன்பின்பே சேமிக்கப்படுகின்றன.

5 நிமிடம் இசைக்கக்கூடிய MP 3 பாடல் ஓன்றை சேமிக்க 5 மெகா பைட்டு அளவு கொண்ட பைனரி கோடுகள் தேவைப்படுகின்றன. எத்தனை பைட் சேர்ந்து 1 மெகா பைட் என்ற பைனரி அளவீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பைனரி அளவீடுகள்

Terabyte Love

NB

TB

English

1 பிட்

1 இலக்கம்.(0) or (1)

bit

4 பிட்

1 நிப்பிள்

Nibble

8 பிட்

1 பைட்

byte

1024 பைட்

1 கிலோ பைட்

Kilo Byte (KB)

1024 கிலோ பைட்

1 மெகா பைட்

Mega Byte (MB)

1024 மெகா பைட்

1 ஜிகா பைட்

Gega Byte (GB)

1024 ஜிகா பைட்

1 டெரா பைட்

Tera Byte (TB)

1024 டெரா பைட்

1 பீட்டா பைட்

Peta Byte (PB)

1024 பீட்டா பைட்

1 எக்ஸா பைட்

Exa Byte (EB)

1024 எக்ஸா பைட்

1 ஜெட்டா பைட்

Zetta Byte (ZB)

1024 ஜெட்டா பைட்

1 யோட்டா பைட்

Yotta Byte (YB)

மேலே குறிப்பிட்டுள்ள அளவீடுகளை வைத்தே CD, Pen drive, Hard disk, Ram ஆகியவைகளின் கொள்ளளவு மதிப்பிடப்படுகிறது. மற்றும் ஆடியோ, வீடியோ file களின் properties களும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இப்போது சொல்லுங்கள் நம்முடைய கதாநாயகர் தன்னுடைய காதலின் ஸ்டேட்டஸ்டில்கூட எந்தவிதமான லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திவருகிறார் என்பது இப்போது உங்களுக்கு நன்கு புரிகிறதல்லவா?

The post Terabyte Love appeared first on Scientific Judgment.

What is Science
அறிவியல் என்பது என்ன?

What is Science – அறிவியல் என்றால் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.

அறிவு + இயல் = அறிவியல்.

”அறிவு – Knowledge” என்பது அறியப்படுவது அல்லது அறிந்து கொள்வது என்று பொருள்படும்.  ”இயல்” என்றால் இயல்பானது என்று பொருள்படும்.

அதாவது இயற்கையானது எதுவோ அது இயல்பானது. இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்ள முற்படும் முயற்சியே அறிவியல் எனலாம்.

ஆங்கிலத்தில் Science என்று சொல்லப்படும் இந்த சொல்லாடல் இலத்தீன் வார்த்தையின் திரிபு ஆகும்.

“Science” என்னும் வார்த்தை இலத்தீன் மொழியிலுள்ள “scientia” என்னும் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். scientia என்றால் “அறிந்து கொள்ளுதல்” என்று பொருள்.

இயற்கை சார்ந்த பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை உள்ளது உள்ளபடி உலகிற்கு உணர்த்துவதே அறிவியல் ஆகும். அறிவியலின் அடிப்படையே ஒருபொருளின் உண்மைத் தன்மையை அறிவதே.

அறிவியல் பொதுவாக இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry), உயிரியல் (Biology), சமூக இயல் (Sociology), பயன்பாட்டு அறிவியல் (Applied Science), தத்துவ இயல் (Philosophy), கணிதவியல் (Mathematics) என பல்வேறு கோணங்களில் பகுத்தாயப்படுகிறது.

அறிவியல் எந்த சூழ்நிலையிலும் .. ”வரும்…. ஆனா …. வர ரா ரா து…..”’ என்று ஜோசியம் சொல்லாது. சனீஸ்வரருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து எள்ளும், காணமும் தானம் செய்தால் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தப்பிவிடலாம் என்று பரிகாரம் எல்லாம் சொல்லாது.

வெறும் கற்பனைக்கு இங்கு இடமில்லை. கற்பனை என்பது புராண இதிகாசங்களுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும்தான் சரியாக வரும். அறிவியலுக்கு ஒத்துவராது.

What is Science

அறிவியல் என்பது மாற்ற முடியாத இயற்கை நிகழ்வுகளையும், இயற்கைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் செயற்கைத் தொழில் நுட்பங்களையும் உருவாக்கி மானுட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலும் ஒரு அறிவார்ந்த கலை எனலாம்.

சரியான தெளிவும், நிரூபணமும், அதற்கான சரியான வரையறையும் இல்லாத முடிவுகளை அறிவியல் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதில்லை, அறிவியல் என்பது முரண்பாடுகளுக்கிடையில் ஒரு ஒழுங்கை தேடுவது. எதையும் சந்தேகக் கண்கொண்டு ஆராய்ந்தறிந்து தெளிவுறும் ஒரு கலை.

மனிதனால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நம்மை சுற்றியிருக்கும் விஷயங்களை நுட்பமான, சிக்கலான இயற்கையின் மர்மங்களை ஏன்? எதற்கு? எப்படி? என்று நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து நமக்கு புரிதலை ஏற்படுத்துவதே அறிவியலின் நோக்கம்.

அறிவியல் வளர்ச்சியினால் இவ்வுலகிற்கு கிடைத்துள்ள நன்மைகள் ஏராளம் எனலாம். அறிவியல் வளர்ச்சியினால் மனிதனுடைய வாழ்க்கை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு எளிமையும், உயர்வும், செழுமையும் அடைந்துள்ளன.

மருத்துவத்தின் அபார வளர்ச்சியால் மனிதனின் ஆயுள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

இனிவரும் பதிவுகளில் அறிவியலின் அற்புதங்களையும், அதன் செயல்பாடுகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம்.

The post What is Science appeared first on Scientific Judgment.

Mother – அம்மா
வரம் தர வேண்டும் அம்மா

Mother – அம்மா

Mother – அம்மா

என் ஆத்தாவுக்கு மாத்தா

வேற என்னதான் இங்கிருக்கு

உசுருடன் உன்னை பாக்க

மனசுதான் ஏங்கி இருக்கு.

மத்தவங்க எல்லாம் அருகிருக்க

மனசெல்லாம் நீதானே நிறைஞ்சிருக்க

உன்னை மட்டும் இங்கே காணலையே

எனக்கு வாழ்வதற்கும் ஏனோ தோணலையே

தொட்டில் கட்டி தூங்க வச்ச

கட்டில் கட்டி தங்க வச்ச

வட்டில் தட்டில் திங்க வச்ச

இப்போ எட்டி நின்னு ஏங்க வச்ச…

உடல் தந்தாய் உயிர் தந்தாய்

உணர்வும் தந்தாய் – உலகினிலே

வாழ்வதற்கு ஓர் இடமும் தந்தாய்

உக்காந்து அழுவதற்கா பிரிவும் தந்தாய்.

எப்போதும் அரை வயிறு

கஞ்சிதானே நீ குடிப்ப

மாதங்கள் ஆறாய் அதுகூட

இல்லாம ஏன் படுத்த…

என் பசியை தீக்கத்தானே

பத்த வைப்ப விறகடுப்ப – இப்போ

பட்டினியாய் நானிருக்க

கல்லறைக்குள் ஏன் படுத்த…

இங்கு பித்தளையாய் நானிருக்க

அதை பெத்தவளாய் நீயிருக்க

பெருமை கொள்ளும் வேளையிலே

ஏனோ செத்தவளாய் ஆனாயே.

பேசியும் புரியா உறவுகளுக்கு மத்தியிலே

பேசி ஆவதென்ன என வாய் மூடி நின்றாயோ

கூவி அழைக்க உறவு ஆயிரமே  இருந்தாலும்

“சிவனேசா” என்றழைத்தே அமைதி ஆனாயோ!

தருவாயா தாயே நீ எனக்கு ஒரு வரமே – நின்

மணிவயிற்றில் பிறக்க வேண்டும் மீண்டும் ஒரு தரமே.

“மகனே” என அணைக்க வேண்டுமம்மா உன் கரமே!…

பார் புகழ வாழ்த்த வேண்டுமம்மா நின் மனமே!…

Mother – அம்மா

The post Mother – அம்மா appeared first on Scientific Judgment.

Narendra Modi
நரேந்திர மோடி – Narendra Modi

Narendra Modi – நரேந்திர மோடி.

காலத்தால் அழியாத காவியம்.

இப்பூவுலகின் உன்னத தலைவன்,

இந்திய மக்களின் கலங்கரை விளக்கம்,

பாரதத் தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வன்.

உலகின் நாயகனாக திகழும் அதேவேளையில் பாரதத்தாயின் வெற்றித் திருமகனாகவும் திகழும் ”மோடிஜி” (Narendra Modi) அவர்களின் அளப்பரிய வெற்றிக்கு இச்சிறிய பதிவை காணிக்கையாக்குகிறோம்.

“தேடிச் சோறுநிதந் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ” ?

– மகாகவி பாரதி

யுக புருஷர் மோடி ஜி

இந்திய அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் அமோக ஆதரவுடனும் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடனும் தொடர்ந்து அரியணை ஏறிவரும் பெருமைமிகு பிரதமர் (Narendra Modi) .

அனைத்துலக மக்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்ட உன்னத தலைவர். மிகச்சிறந்த தேச பற்றாளர். வசீகரிக்கும் தன்மை கொண்ட மிகச்சிறந்த பேச்சாளர். உலகின் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.

நம் பாரத தேசத்தின் புல்லுருவிகளான தேச துரோகிகளையும், பிரிவினைவாதிகளையும், வெளிநாட்டு கைக்கூலிகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.

”ஜெய் பாரத் மாதா கி” என்கிற முழக்கத்துடன் இந்தியாவின் உள் கட்டமைப்பை மிக சிறப்பாக மேம்படுத்தி வருபவர்.

இந்தியாவை உலகின் முன்னணி நாடாக கொண்டு வருவதையே தன் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகவும், இலட்சியமாகவும் கொண்டு 2014 முதல் தற்போது வரை பிரதமராக இயங்கி வரும் ஒப்பற்ற தலை சிறந்த நிர்வாகி.

பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திக்காட்டி ஒவ்வொரு இந்தியனையும் கர்வம் கொள்ளச்செய்த பாரதத்தின் ஒப்பற்ற தலைவனின் நல்லாட்சி மேன்மேலும் தொடர ”சயின்டிபிக்  ஜட்ஜ்மென்ட்”  [scientificjudgment] வலையகம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவிப்போம்.. நல்வாழ்த்துக்கள்!

”பாரத் மாதா கி ஜே”

The post Narendra Modi appeared first on Scientific Judgment.

The scientific judgment
சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்

சயின்டிபிக்  ஜட்ஜ்மென்ட் – The scientific judgment வலையக ஆய்வகத்தின் நன்றியும், அன்பு கலந்த வணக்கங்களும்!

வணக்கம் நண்பர்களே! ”சயின்டிபிக்  ஜட்ஜ்மென்ட்” [scientificjudgment] என்னும் இந்த அறிவியல் தளமானது அறிவியல் சார்ந்த விஷயங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டுவந்து உங்கள் கரங்களில் சேர்க்கவேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்திற்கு தொடர்ந்து வருகைதந்து ஆதரவு நல்கும் அனைத்து அன்பு இதயங்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றி கலந்த வணக்கத்தினையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறோம்.

இந்த தளமானது அறிவியலை (Science) அடிப்படையாகக் கொண்டு இயங்கிவருகிறது.

மனதிற்கும், அறிவுக்கும் வளம்சேர்க்கும் அனைத்து அறிவியல் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதோடு மனதிற்கு உற்சாகம் தரும் அதேவேளையில் உங்கள் நேரத்தை வீணடிக்காத, சிந்தனைக்கு வளம் சேர்க்கின்ற சிறந்த அம்சங்கள் நிறைந்த பதிவுகளை தொடர்ந்து உங்கள் கரங்களில் கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகின்றோம்.

மாணவர்களுக்கு தேவையான கல்விசார்ந்த அனைத்து அறிவார்ந்த விஷயங்களும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் கனிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இத்தளத்தில் பதிவிடப்படும் அனைத்து ஆவணங்களும் அறிவியல் சார்ந்தவை. எனவே ஆவணங்கள் அனைத்தும் அவ்வப்போது அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,

மேலும் அறிவியலுக்கு ஒத்துவராத கற்பனை விஷயங்களான புராண, இதிகாசங்கள், கற்பனைக்கலந்த வரலாறுகள், கதைகள், நாவல்கள் எதுவும் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படமாட்டாது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இத்தளத்தினைப்பற்றி தங்களின் தரமான கருத்துக்களையும், தளத்தினை மேம்படுத்துவது பற்றிய தங்களின் உயர்வான சிந்தனை மற்றும் ஆலோசனைகளையும் அந்தந்த பதிவுகளின் கீழுள்ள ”கமெண்ட் பாக்ஸ்”- comment box – ல் தரம் நிறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!!.

வாழ்க வையகம்!! வளர்க பாரத மணித்திருநாடு!

நன்றியுடன் உங்கள்…

Nanjil Siva.

The post The scientific judgment appeared first on Scientific Judgment.