Alloy metal – Mixed Metal.

14 / 100

கலப்பின உலோகம் – அலாய் உலோகம் அல்லது அலாய் மெட்டல் என்பது ஒரு தனிப்பட்ட உலோகத்துடன் வேறு சில உலோகங்களோ அல்லது அலோகங்களோ அதனுடன் சேர்க்கப்பட்டு ஒன்றாக உருக்கி வார்க்கப்படும் உலோக கலவையாகும்.

இவ்வாறு சில உலோகங்களை ஒன்றிணைப்பதின் மூலம் கிடைக்கும் புதிய உலோகமானது பல சிறப்பான தன்மையை பெறுகின்றன.

alloy metal

உதாரணமாக இரும்பு துருபிடிக்கும் தன்மையுடையது. இரும்புடன் குரோமியம் சேர்த்து வார்க்கும்போது கிடைக்கும் எஃகு (Steel) என்னும் கலப்பின உலோகமானது துருப்பிடிக்காத தன்மையை பெறுகின்றன.

இங்கு சிலவகை கலப்பின உலோகங்களை பற்றியும், அவற்றின் தன்மை மற்றும் பயன்பாடுகள் பற்றியும் பார்ப்போம்.

கலப்பு பொருட்கள் :-

  • அலுமினியம் – Aluminium 90%,
  • தாமிரம் – Copper 4%,
  • மெக்னீசியம் – Magnesium 1%
  • மாங்கனீஸ் – Manganese 1%
Duralumin

தன்மை :- இது இலகுவானது. ஆனால் மிகவும் உறுதித்தன்மை  வாய்ந்தது.

பயன் :- பேருந்து மற்றும் வான ஊர்திகளின் உள் மற்றும் வெளிப்புற பாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

கலப்பு பொருட்கள் :-

  • செம்பு (copper) – 60 முதல் 90 சதவீதம்.
  • துத்தநாகம் ( zinc ) – 10 முதல் 40 சதவீதம்.
cz brass

தன்மை :-  துருப்பிடிக்காத தன்மை.

பயன் :- நாணயங்கள், சிலைகள், நகைகள், பூட்டு மற்றும் துருப்பிடிக்காத பலவித பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

கலப்பு பொருட்கள் :-

  • நிக்கல் – Nickel.
  • குரோமியம் – Chromium.
  • மாங்கனீஸ் – Manganese.
  • வனேடியம் – Vanadium.
steel

தன்மை :- இரும்புடன் மேற்குறிப்பிட்டுள்ள கரிமப்பொருட்கள் வெல்வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டு பலதரப்பட்ட எஃகு கம்பிகள் உருவாக்கப்படுகின்றன.

பயன் :- வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் உறுதியான கருவிகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இரும்பினாலான பாலங்கள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது.

 கலப்பு பொருட்கள் :- 

  • செம்பு – Copper.
  • துத்தநாகம் – Zinc.
  •  வெள்ளீயம் – Tin.
bronze-rod

தன்மை :- இரும்பை விட கெட்டியானது. உறுதித்தன்மை வாய்ந்தது.

பயன் :- சிலைகள், சமையல் பாண்டங்கள், போர்க்கருவிகள் மற்றும் நாணயங்கள் செய்யவும் பயன்படுகிறது.

கலப்பு பொருட்கள் :- 

  • செம்பு (80%)
  • வெள்ளீயம்(20%)
  • துத்தநாகம், 
  • காரீயம் – black lead.
BELL

தன்மை :- வெண்கலத்திலிருந்து இது கொஞ்சம் மாறுபட்டது. இந்த உலோகமானது அதிக அளவு ஒலியை ஏற்படுத்தும் தன்மையுடையது.

பயன் :- அதிக ஒலியை உண்டுபண்ணும் தன்மையுடையதாதலால் கோவில் மணிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

கலப்பு பொருட்கள் :-

  • அலுமினியம்.
  • செம்பு.
aluminium bronze
Bronze Bush, Aluminum Bronze Bushing, Bronze Bush Manufacturer, Gujarat

தன்மை :- அதிக வலிமையும், அரிப்பை எதிர்க்கும் தன்மையும் பெற்றுள்ளன.

பயன் :- சிலைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் நாணயங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

 கலப்பு பொருட்கள் :-

  • செம்பு 
  • துத்தநாகம்
  • மாங்கனீஸ் 
  • அலுமினியம் 
  • இரும்பு – Iron.
manganese bronze

தன்மை :- அதிக வலிமை உடையது. அரிப்பை எதிர்க்கும் திறனை பெற்றுள்ளது.

பயன் :- பேரிங், கியர், நட்போல்ட் மற்றும் பல கடினத்தன்மை வாய்ந்த பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் எஃகு தயாரிக்க பயன்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் எஃகுவிற்கு மாங்கனீஸ் எஃகு என்று பெயர்.

 கலப்பு பொருட்கள் :-

  • செம்பு  (94.8%)
  • வெள்ளீயம் (5%)
  • பாஸ்பரஸ் – Phosphorus. (0.2%)
phosphor-bronze

தன்மை :- இரசாயன அரிப்பை எதிர்க்கிறது.

பயன் :- பல்வினை சக்கரங்கள் செய்ய பயன்படுகிறது. மின்சாதனங்கள் மற்றும்  இசைக்கருவிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

 கலப்பு பொருட்கள் :- 

  • லாந்தணம் – lanthanum (25%)
  • செரியம் – Cerium (55%)
  • நியோடைமியம் – Neodymium. (15 – 18%)
Misch metal

தன்மை :- பூமியில் கிடைக்கும் அரிதான உலோகம்.

பயன் :- வெப்பம் தாங்கும் எஃகு தயாரிக்க பயன்படுகிறது. ஜெட் எஞ்சின் இயந்திர பாகங்கள் செய்யவும், மின்வாய்கள் செய்யவும் பயன்படுகிறது.

கலப்பு பொருட்கள் :-

  • நிக்கல் – Nickel (67%)
  • செம்பு – Copper. (28%)
monel-metal

தன்மை :- மிக வலுவானது. அமில அரிப்பை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளன.

பயன் :– காடித்தடை உண்டாக்கும் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. விமான தயாரிப்பிலும் பயன்படுகிறது. கப்பலில் பல பாகங்கள் இந்த உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

கலப்பு பொருட்கள் :- 

  • நிக்கல் (16 %)
  • துத்தநாகம், (27 % )
  • செம்பு. (55 %)
  • இரும்பு – Iron.
  • மாங்கனீஸ் – Manganese.
german-silver

தன்மை :- கடினத்தன்மை வாய்ந்தது. அரிப்பை எதிற்கும் திறன் பெற்றுள்ளது. German silver – க்கு Nickel silver என்றொரு பெயருமுண்டு.

பயன் :- நகைகள் தயாரிக்க பயன்படுகிறது. நாணயம், இசைக்கருவிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கப்பல்கள் மற்றும் வெப்ப சுருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

கலவை பொருட்கள்:-

  • இரும்பு – Iron.
  • குரோமியம் – Chromium.
  • நிக்கல் – Nickel.
Ever Silver

தன்மை :- துருப்பிடிக்காத தன்மை. இது “கறுக்கா வெண்தகடு” என்றும் அழைக்கப்படுகிறது.

பயன் :- கத்திகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

கலவை பொருட்கள் :-

  • செம்பு (89%)
  • வெள்ளீயம் (10%)
  • துத்தநாகம்(1%)
Gun metal

தன்மை :- லேசான நீலம் கலந்த சாம்பல் நிறம் கொண்டது. வலிமையானது.

பயன் :- துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படுகிறது. வால்வுகள், கியர்கள், சிலைகள் மற்றும் பல சிறிய பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.

கலவை பொருட்கள் :-

  • ஆண்டிமணி – Antimony.
  • வெள்ளீயம் – Tin.
Type metal

தன்மை :- கடினத்தன்மை குறைந்தது.

பயன் :- தட்டச்சு  எழுத்துக்கள், மற்றும் வார்ப்பு பொருள் தயாரிக்க பயன்படுகிறது.

கலவை பொருட்கள் :- 

  • வெள்ளீயம் (91%)
  • காரீயம் 
  • துத்தநாகம் 
  • செம்பு (2%)
  • ஆண்டிமணி (6%)
britannia metal

தன்மை :- மென்மையானது. வெள்ளி போன்ற பளபளப்பான நிறத்தை கொண்டது. இதன் உருகுநிலை 255 டிகிரி செல்ஸியஸ்.

பயன் :- வீடுகளுக்கு தேவையான பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

கலவை பொருட்கள் :- 

  • வெள்ளீயம் (90%)
  • ஆண்டிமணி (7%)
  • செம்பு (3%)
Babbitt

தன்மை :- பாபிட் என்பவர் உருவாக்கிய உலோக கலவையாதலால் அவர் பெயரிலேயே “பாபிட் உலோகம்” என அழைக்கப்படுகிறது.

பயன் :-  பேரிங் தயாரிக்க பயன்படுகிறது.

கலவை பொருட்கள் :-

  • இரும்பு  (64%)
  • நிக்கல் (36%)
invar

தன்மை :- நிலையானது. வெப்பத்தால் அதிகம் பாதிப்படைவதில்லை.

பயன் :- நில அளவு நாடா மற்றும் கடிகார ஊசல்களில் பயன்படுகிறது.

கலவை பொருள் :-

  • பிஸ்மத் – Bismuth.
  • காரீயம் – black lead.
  • வெள்ளீயம் – Tin.
Rose metal

தன்மை :- குறைந்த வெப்பத்தில் உருகும் தன்மையுடைய உலோகம்.

பயன் :- தீ பாதுகாப்பு கருவிகளில் பயன்படுகிறது.

கலவை பொருள் :-

  • வெள்ளீயம் (26.7%)
  • காட்மியம் (10%)
  • பிஸ்மத்(50%)
  • வெள்ளீயம் அல்லது தகரம் – Tin (13.3%)
Wood's metal

தன்மை :- குறைந்த வெப்பநிலையில் உருகும் தன்மையுடையது.

பயன் :- தீ பாதுகாப்பு கருவிகளில் பயன்படுகிறது. மருத்துவ கருவி தயாரிப்பிலும் பயன்படுகிறது. மரத்தின் நிறத்தை ஒத்து இருப்பதாலும், பல மர வேலைப்பாடுகளுக்கு பயன்படுவதாலும் “Wood metal” என பெயர் பெற்றது.

&&&&&&&&&&&&

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!