"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" Mother - அம்மா.

Mother - அம்மா.

தாயே தரவேண்டும் எனக்கு ஒரு வரமே!


பூமி தாங்கும் முன்பே

என்னை பூவாய் தாங்கியவளே,

உருவம் அறியா கருவிலும்கூட

என்னை உருகி அணைத்தவளே,

உயிர்தந்து உடல் தந்து - இன்று

நிழலாகிப்போன என் நிஜமே.

என்னைப் பெத்தவளே வளர்த்தவளே

இன்று செத்தவளாய் ஆனாயே,

கூவி அழைக்க உறவுகள் இங்கே

ஆயிரம் இருந்தாலும் - இறுதி பேச்சாக

என் பெயர் சொல்லியே அமைதி ஆனவளே! 

மண்ணுக்கு நடைபிணமாய் நானிருக்க

நீ விண்ணிற்கு விடைப்பெற்று சென்றதேனோ,

தாயே தரவேண்டும் நீ எனக்கு ஒரு வரமே - நின்

மணிவயிற்றில் ஜனிக்க வேண்டும் இன்னும் ஒரு தரமே.

"மகனே" என அணைக்க வேண்டுமம்மா

என்னை மீண்டும் ஒரு தடவை உன் கரமே!...

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே

    தங்களது மனம் அமைதி பெற வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.