தேசங்களின் தேசிய மலர்கள்.
List of National Flower.
PART - 3.
உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி மற்றும் தேசிய கீதங்களை கொண்டுள்ளன. இவைகள் தேசங்களின் பெருமைகளை பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல் தேசியத்தின் பெருமைமிகு அடையாளமாகவும் இருந்துவருகின்றன.
தேசியக் கொடி மற்றும் தேசிய கீதங்களோடு நின்றுவிடாமல் தங்களுடைய பண்பாட்டினை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு தேசங்களும் தங்கள் நாட்டின் பாரம்பரியமாக இருந்துவரும் விலங்கு, பறவை, மரம், மலர் மட்டுமல்லாது பாரம்பரியமாக விளையாடிவரும் விளையாட்டுகளைக்கூட தேசிய சின்னங்களாக அடையாளப்படுத்துகின்றன.
"நம் தேசங்களின் தேசிய மலர்கள்" என்னும் இத்தொடர்பதிவில் தொடர்ந்து இருபதிவுகளாக பல நாடுகளின் தேசிய மலர்களைப் பார்த்துவருகின்றோம். அதன் வரிசையில் இத்தொடரின் இறுதிப்பகுதியாகிய இப்பதிவில் மேலும் சில நாடுகளின் தேசிய மலர்களையும் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
இத்தொடரின் முதல் பகுதியை பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க....
👉தேசிய மலர்களின் பட்டியல் - பகுதி 1. List of National Flower - Part 1.👈
List of National Flower.
No | Country | நாடுகள் | National Flower | தேசிய மலர் |
---|---|---|---|---|
1 | Puerto Rico | பியூர்டோ ரிகோ | Maga tree flower | மகா மரத்தின் மலர் |
2 | Romania | ருமேனியா | Peony flower | பியோனி மலர் |
3 | Russia | ரஷ்யா | Chamomile | ஜெர்மன் வெள்ளை சாமந்தி |
4 | Saint Lucia | செயின்ட் லூசியா | Marguerite rose | மார்குரைட் ரோஜா |
5 | Samoa | சமோவா | Teuila | டெய்லா மலர் |
6 | San Marino | சான் மரினோ | Cyclamen flower | சைக்லேமன் மலர் |
7 | Scotland | ஸ்காட்லாந்து | Thistle flower | திஸ்டில் மலர் |
8 | Serbia | செர்பியா | Plum Blossom | பிளம் பிளாசம் |
9 | Singapore | சிங்கப்பூர் | Vanda Miss Joaquim | வாண்டா மிஸ் ஜோவாகிம் |
No | Country | நாடுகள் | National Flower | தேசிய மலர் |
---|---|---|---|---|
10 | Slovakia | ஸ்லோவாகியா | Rose | ரோஜா |
11 | Slovenia | ஸ்லோவேனியா | Red Carnation | சிவப்பு கார்னேஷன் |
12 | South Africa | தென்னாப்பிரிக்கா | King Protea | கிங் புரோடீ |
13 | South Korea | தென் கொரியா | Sharon | ஷரோன் |
14 | Spain | ஸ்பெயின் | Red Carnation | சிவப்பு கார்னேஷன் |
15 | Sri Lanka | இலங்கை | Blue Water Lily | நீலோற்பலம் |
16 | St.Kitts - Nevis | செயின்ட் கிட்ஸ் - நெவிஸ் | Royal Poinciana | செம்மயிற்கொன்றை |
17 | Suriname | சுரினாம் | Jungle Geranium | வெட்சிப்பூ |
18 | Sweden | ஸ்வீடன் | Linnaea Borealis | லின்னியா பொரியாலிஸ் |
No | Country | நாடுகள் | National Flower | தேசிய மலர் |
---|---|---|---|---|
19 | Switzerland | சுவிட்சர்லாந்து | Edelweiss | எடல்வீஸ் மலர் |
20 | Syria | சிரியா | Jasmine | மல்லிகை பூ |
21 | Taiwan | தைவான் | Plum Blossom | பிளம் ப்ளாசம் |
22 | Thailand | தாய்லாந்து | Golden shower | சரக்கொன்றை |
23 | Tonga | டோங்கா | Heilala | ஹீலாலா |
24 | Trinidad and Tobago | டிரினிடாட்-டொபாகோ | Chaconia | சாகோனியா |
25 | Tunisia | துனிசியா | Jasmine | மல்லிகை |
26 | Turkey | துருக்கி | Tulip | துலிப் |
27 | Ukraine | உக்ரைன் | Sunflower | சூரியகாந்தி |
No | Country | நாடுகள் | National Flower | தேசிய மலர் |
---|---|---|---|---|
28 | United Kingdom | இங்கிலாந்து | Tudor Rose | சிவப்பு வெள்ளை ரோஜா |
29 | Unites States of America | அமெரிக்கா | Rose | ரோஜா |
30 | Uruguay | உருகுவே | Ceibo | செய்போ |
31 | Vatican City | வாடிகன் நகரம் | Easter Lily | ஈஸ்டர் லில்லி |
32 | Venezuela | வெனிசுலா | Flor de Mayo | ஃப்ளோர் டி மாயோ |
33 | Vietnam | வியட்நாம் | Lotus | தாமரை |
34 | Wales | வேல்ஸ் | Daffodil | பேரரளி |
35 | Yugoslavia | யூகோஸ்லேவியா | Lily of the valley | வன லில்லி |
36 | Zimbabwe | ஜிம்பாப்வே | Flame Lily | செங்காந்தள் |
12 கருத்துகள்
சிறப்பான தொகுப்பு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குதகவல்கள் சிறப்பு நண்பரே.
பதிலளிநீக்குதொடர்ந்து வரட்டும்...
நன்றி!... நன்றி!!...
நீக்குகண்ணைக் கவரும் மலர்களுடன் அசத்தல் தொகுப்பு...
பதிலளிநீக்குநன்றி!!!
நீக்குஆ! ரஷ்யா ஜெர்மன் சாமந்தியை தன் தேசியப் பூவாக வைச்சிருக்கே!!! புட்டின் வேறு மலரை மாத்தலை போலருக்கு!!!
பதிலளிநீக்குகீதா
புட்டினுக்கு உக்ரைனில் நிறைய வேலை இருப்பதால் தேசிய மலரில் கவனம் செலுத்த நேரம் இல்லை போலும்...
நீக்குகேரளாவுக்கே உரித்தான சரக்கொன்றை தாய்லாந்துப் பூ!!!
பதிலளிநீக்குசெங்காந்தள் விரல்கள் போலன்னு சொல்றது செங்காந்தள் பூப் படத்தைப் பார்த்ததும் புரிகிறது! ஜிம்பாப்வே பெண்களின் விரல்கள் செங்காந்தள் விரல்களோ?!!!
கீதா
"செங்காந்தள்" பூக்கள் எங்கள் இடங்களிலும் அபூர்வமாக சில இடங்களில் காணப்படுகின்றன. படத்தில் பார்ப்பதைவிட நேரில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருகின்றன.
நீக்குசிலது நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது சிலது எட்ட மாட்டேங்குது!! தகவல்கள் அருமை. பொது அறிவில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.