"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" ஆய கலைகள் அறுபத்து நான்கு - Sixty Four Arts.

ஆய கலைகள் அறுபத்து நான்கு - Sixty Four Arts.

ஆய கலைகள் 64.

"ஆய" என்றால் முறையாக ஆராய்ந்து அறிய வேண்டியவை என்று பொருள். நூற்றுக்கணக்கான கலைகள் இருந்தாலும்கூட அவைகளில் உயர்வான கலைகளாக 64 கலைகளை நம் முன்னோர்கள் முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதனை குருவின் துணைகொண்டு முறையாக கற்று தெளிய வேண்டும் என்பதனையே "ஆய கலைகள் அறுபத்து நான்கு" என்னும் சொற்றொடர் குறிப்பிடுகிறது.

aaya kalaigal 64

இதனையே திருமூலர்,

"பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை

பத்தினொடு ஆறும் உயர்கலை வான்மதி

ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை

அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே"

என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார்.

சரி,... குருவின் துணைகொண்டு ஆராய்ந்து அறிய வேண்டிய அந்த அறுபத்து நான்கு கலைகளும் என்னென்ன என்பதனை இப்போது பார்க்கலாம்.

64 - List Of Arts.


NO கலை விளக்கம்
1 அக்கர இலக்கணம் மொழி இலக்கணம்
2 இலிகிதம் எழுதும் திறன்
3 கணிதம் கணிதவியல்
4 வேதம் வேத நூல்கள் கற்றல்
5 புராணம் வரலாற்று நிகழ்வுகளைக் கற்றல்
6 வியாகரணம் நீதி நூல்களைக் கற்றல்
7 நய நூல் நீதி இலக்கணங்களைக் கற்றல்
8 சோதிட கலை வருங்கால வாழ்க்கை ஓட்டத்தை கணிக்கும் கலை
9 தர்ம சாஸ்திரம் அறம் சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளல்
10 யோகம் மனதை ஒருமுகப்படுத்தும் யோகக் கலை
11 மந்திரம் ஒலிகளில் கவனத்தைை செலுத்தி மனதை ஒருமுகப்படுத்துதல்
12 சகுனம் சகுனங்களை கொண்டு நடக்கப்போவதை உணர்தல்
13 சிற்பம் கல், மரம் போன்றவற்றில் சிலைகளை வடித்தல்
14 வைத்தியம் மருத்துவக்கலை
15 உருவ சாஸ்திரம் உருவங்களை வரைதல் (ஓவியக்கலை)
16 இதிகாசம் ஒருவர் நிகழ்த்திய வீரதீர செயல்களை கற்றல்
17 காவியம் கவிதை வடித்தல்
18 அலங்காரம் அழகுபடுத்தும் கலை
19 மதுர போஜனம் சமையல் கலை
20 நாடகம் நடிப்புக்கலை
21 நிருத்தம் நடனக்கலை
22 சத்த பிரம்மம் பலகுரலில் பேசுதல்
23 வீணை இசை தந்தி கருவிகளால் இசைக்கும் கலை
24 வேனு காற்று கருவிகளால் இசைக்கும் கலை
25 மிருதங்கம் தோல் கருவிகளால் இசை எழுப்பும் கலை
26 தாளம் கைகளை பயன்படுத்தி இசை எழுப்பும் கலை
27 அகத்திர பரீட்சை வில் வித்தை
28 கனக பரீட்சை தங்க நகைகள் புனைதல்
29 இரத பரீட்சை வாகனங்களை திறம்பட கையாளும் கலை
30 கஜ பரீட்சை யானைகளை பயிற்றுவிக்கும் கலை
31 அசுவ பரீட்சை குதிரையேற்றம். குதிரைகளை திறம்பட கையாளும் கலை
32 இரத்தின பரீட்சை இயற்கை தாதுக்களை தரம்பிரித்தறியும் கலை





NO கலை விளக்கம்
33 பூமி பரீட்சை புவியியல் பற்றி அறியும் கலை
34 சங்கிராம இலக்கணம் முறையான போர் பயிற்சி
35 மல்யுத்தம் ஆயுதம் ஏதுமில்லாமல் கைகளால் போரிடும் கலை
36 ஆகர்சணம் உடல் மொழி
37 உச்சாடனம் இனிமையான வார்த்தைகளால் தன்வயப்படுத்தும் கலை
38 வித்து வேஷணம் ராஜ தந்திர கலை
39 மதன சாஸ்திரம் காதல் கலை
40 மோகனம் மோகம் உண்டாக்கும் கலை
41 வசீகரணம் பிறரை தன்பால் கவரும் கலை
42 இரசவாதம் கீழ் நிலை உலோகத்தை இடைநிலை உலோகமான பாதரசத்தை பயன்படுத்தி உயர்நிலை உலோகமாக மாற்றும் கலை
43 காந்தர்வ வாதம் இசையை வாய்மூலம் இசைத்தல். வாய்ப்பாட்டு
44 பைபீல வாதம் பிற உயிரினங்களின் மொழியை கற்றுகொள்ளும் கலை
45 தாதுவாதம் மூச்சு பயிற்சி கலை
46 கெளுத்துக வாதம் பிறரை மகிழ்விக்கும் கலை
47 காருடம் விஷம் நீக்கும் கலை
48 நட்டம் இழப்பை ஈடு செய்யும் கலை
49 முட்டி மறைந்து இருப்பதைக் கண்டறிதல்
50 ஆகாய பிரவேசம் வான்வெளியை தாண்டி செல்லும் கலை
51 ஆகாய கமனம் ஆகாய மார்க்கமாக பயணித்தல்
52 பரகாய பிரவேசம் பிறர் உடலில் புகுந்து இயங்குதல்
53 அதிர்சியம் தன்னை அறிந்துகொள்ளும் கலை
54 இந்திர ஜாலம் கைகளால் செய்யும் மேஜிக் வித்தை
55 மகேந்திர ஜாலம் தன் உருவை மாற்றுதல்
56 அக்னி தம்பனம் நெருப்பை பயன்படுத்தி செய்யப்படும் தொழிற்கலை
57 சல தம்பனம் நீரினை வெற்றிகொள்ளுதல் (நீச்சல் பயிற்சி)
58 வாயு தம்பனம் துருத்தி போன்ற கருவிகளை பயன்படுத்தி செய்யப்படும் தொழில்கள்
59 திட்டி தம்பனம் பிறர் உணர்வை மயங்க செய்தல் (ஹிப்னாட்டிசம்)
60 வாக்கு தம்பனம் வார்த்தைகளால் வெற்றிகொள்ளுதல் (வழக்காடுதல்)
61 சுக்கில தம்பனம் விந்துவை கட்டுப்படுத்துதல் (பிரம்மச்சர்யம் அனுஷ்டித்தல்)
62 கன்ன தம்பனம் புதையலை கண்டறியும் கலை
63 கட்க தம்பனம் ஆயுத தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கலை (தற்காப்பு கலை)
64 அவத்தை பிரயோகம் பில்லி சூனியம் செய்வினை வைக்கும் கலை

💃💃💃💃💃💃💃

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. சிறப்பான தகவல்கள் பதிவு.
    பலரும் அறிய வேண்டிய விஷயங்கள் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. சிவா சகோ, ஆய கலைகள் பற்றி தெரியும் என்றாலும் 64 ஐயும் குறிப்பிடும் அளவு மனனம் இல்லை. இப்போது மீண்டும் படித்துக் கொண்டேன்.

    ஆனா என் தனிப்பட்டக் கருத்து, இந்த ஆய கலைகளுள் சொல்லப்படாத மிக முக்கியமான கலை என்ன என்றால் 'குழந்தை வளர்ப்பு' கலை. மிக மிக மிகக் கஷ்டமான கலை இதுதான் என்பேன் நான். ஒரு குழந்தை நன்றாக வளர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் அப்போதுதான் நல்ல குடும்பம், சமுதாயம் உருவாகும்.

    என்னைப் பொருத்தவரை ஆய கலைகளுள் இல்லாத(நான் அடிக்கடிச் சொல்வது) குழந்தை வளர்ப்புதான் மிக முக்கியம் மற்றும் கடினமான கலை என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன் சகோதரி.... ஆனால் "குழந்தை வளர்ப்பு" என்பது கலை அல்ல... மாறாக, அது நம் ஒவ்வொருவருடைய "சமுதாய கடமை" என்பதால் இதில் சேர்க்காமல் விட்டுவிட்டார்களோ என்னமோ?!!!...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.