Bharat Ratna Awardees.
பாரத ரத்னா வெற்றியாளர்கள்.
1963 - 1975
(PART - 4).
இந்தியாவில் வழங்கப்படும் சிவிலியன் விருதுகளில் முதன்மையானது "பாரத ரத்னா".
தன்னலம் கருதாது பொதுநல சேவையாற்றும் குடிமக்களை கவுரவிக்கும் முகமாக பல விருதுகள் இந்தியாவில் கொடுக்கப்பட்டாலும் அதில் முதன்மையானதாக இருப்பது "பாரத ரத்னா" (Bharat Ratna) எனலாம்.
இந்த பாரதரத்னாவானது 1954 ம் ஆண்டு ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட காலம் தொடங்கி 2019 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களைப்பற்றிதான் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.
அவர்களின் பெயர்களை பற்றி மட்டும் தெரிந்து வைத்திருப்பதைவிட அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் உட்பட, எந்த காரணங்களுக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் தெரிந்து வைத்திருப்பது சிறப்பல்லவா?... வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்...
பாரத ரத்னா (Bharat Ratna) பற்றிய தொடர் பதிவில் இது நான்காவது பகுதி (Part 4). முந்தைய மூன்று பகுதிகளில் பாரத ரத்னா பற்றியும், 1954 முதல் 1962 ம் ஆண்டுவரை பாரத ரத்னா பெற்ற வெற்றியாளர்களைப் பற்றியும் பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாகிய நான்காவது பகுதியான (Part 4) இப்பதிவில் 1963 தொடங்கி 1975 வரையில் பாரதரத்னா விருது பெற்ற வெற்றியாளர்களைப்பற்றி இரத்தின சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.. பார்க்கலாம் வாருங்கள்.
இப்பதிவின் முதல் பகுதியை படிக்க [Part - 1] அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்குங்க...
பாரத ரத்னா - Bharat Ratna Award - Part 1.
ஜாகிர் ஹீசைன்.
Zakir Husain.
பெயர் :- ஜாகிர் ஹீசைன் - Zakir Husain.
நாடு :- இந்தியா - India.
மாநிலம் :- ஆந்திரா. Andhra Pradesh - ஹைதராபாத் (Hyderabad).
பிறப்பு :- 1897 பிப்ரவரி 8.
இறப்பு :- 1969 மே 3.
பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1963.
வாழ்க்கை முறை :- 1962 முதல் 1967 வரையில் இந்திய திருநாட்டின் 2 வது குடியரசு துணைத்தலைவராக (Vice President) விளங்கிய இவர் 1967 முதல் 1969 வரையில் 3 வது குடியரசு தலைவராகவும் (President) பதவி வகித்தார். முதல் முஸ்லீம் குடியரசு தலைவரும் இவர்தான்.
அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில் (Aligarh muslim university) பட்டம் பெற்றது மட்டுமல்லாது ஜெர்மனியிலுள்ள பெர்லின் பல்கலைகழகத்தில் (University of Berlin in Germany) பொருளாதாரத்திற்கான முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
கல்வி துறையில் சிறந்த அறிஞராகவும், சிறந்த நிர்வாகியாகவும் விளங்கிவந்த இவர் ஆதார கல்விமுறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
"ஜாமியா மிலியா" இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (Jamia Millia Islamia Central University) துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh muslim university) மாணவராக இருந்தபோது காந்தியடிகளின் கொள்கையால் கவரப்பட்டு காந்தியடிகளின் தீவிர பற்றாளர் ஆனார்.
இந்திய சுதந்திர போராட்டங்களிலும் மிக தீவிரமாக பணியாற்றியவர்.
சுதந்திர போராட்டத்தில் இவரின் பங்களிப்பை கருத்தில்கொண்டு இவருக்கு 1963 ம் ஆண்டிற்கான "பாரத ரத்னா" (Bharat Ratna Award) விருது அளித்து கௌரவிக்கப்பட்டது.
"பாரத ரத்னா - Bharat Ratna" விருது மட்டுமல்லாது "பத்ம விபூஷண் - Padma Vibhushan" விருதும் பெற்றுள்ளார்.
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் 1969 ம் ஆண்டு மே 3 ம் தேதி தன்னுடைய 72 வது வயதில் இயற்கை எய்தினார்.
பாண்டுரங்க் வாமன் கானே.
Pandurang Vaman Kane.
பெயர் :- பாண்டுரங்க் வாமன் கானே - Pandurang Vaman Kane.
நாடு :- இந்தியா - India.
மாநிலம் :- மகாராஷ்டிரா. Maharashtra.
பிறப்பு :- 1880 ம் வருடம் மே 7 ம் தியதி மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்திலுள்ள ரத்னகிரி (Ratnagiri) மாவட்டத்தில் அமைந்திருக்கும் சித்பவன் என்ற சிற்றூரில் பிறந்தார்.
இறப்பு :- 1972 ம் வருடம் மே 8 ம் தியதி தன்னுடைய 92 வது வயதில் இயற்கை எய்தினார்.
பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1963.
வாழ்க்கை முறை :- மகாராஷ்டிராவை (Maharashtra) சேர்ந்த புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர். மும்பை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (Vice-chancellor of university) பணியாற்றியுள்ளார். பாரதீய வித்யா பவனின் (Bharatiya Vidya Bhavan) கவுரவ அங்கத்தினராகவும் இருந்துவந்துள்ளார்.
40 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக இவர் எழுதிய "தர்ம சாஸ்திரத்தின் வரலாறு" (History of Dharmashastra) என்னும் நூல் இவருக்கு புகழ் மகுடத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் "சாகித்திய அகாடமி" (Sahitya Akademi Award) விருதையும் பெற்றுக்கொடுத்தது.
ஐந்து தொகுதிகளாக வெளிவந்த இந்நூல் 6,500 பக்கங்களை கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலக்கியம் மற்றும் இவருடைய சமூக சீர்திருத்த சேவைகளைப் பாராட்டி இவருக்கு 1963 ம் ஆண்டு பரதரத்னா விருது வழங்கப்பட்டது.
லால் பகதூர் சாஸ்திரி.
Lal Bahadur Shastri.
பெயர் :- லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri.
நாடு :- இந்தியா - India.
மாநிலம் :- உத்திரப்பிரதேசம் - Uttar Pradesh.
பிறப்பு :- 1904 ம் ஆண்டு அக்டோபர் 2 ல் உத்திரபிரதேசம் மாநிலம் - முகல்சராய் (Mughalsarai) என்னும் ஊரில் பிறந்தார்.
இறப்பு :- 1966 ம் ஆண்டு ஜனவரி 11 ம் தியதி மறைந்தார். இவர் சோவியத் ரஷ்யாவில் (Soviet Union - Russia) உள்ள தாஷ்கண்ட்டில் (Tashkent) நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது காலமானார்.
குழந்தைகள் :- 6 குழந்தைகள்.
பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1966.
வாழ்க்கை முறை :- இவருடைய பெயர் "லால் பகதூர் சாஸ்திரி" (Lal Bahadur Shastri) என்றுதான் நாம் பொதுவாக அறிவோம். ஆனால் இவருடைய இயற்பெயர் என்ன தெரியுமா? "லால் பகதூர் சிறிவஸ்தவா" (Lal Bahadur Srivastava).
பெயரின் கடைசி வார்த்தையான "சிறிவஸ்தவா"வை துரத்திவிட்டு அந்த இடத்தில் "சாஸ்திரி" வந்து எப்படி ஒட்டிக்கொண்டது என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை... ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்பதற்கிணங்க இவருடைய அறிவு அபரிதமாக வளர்ச்சிபெற அதன்காரணமாக ஜாதியின் பெயரால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பது சுத்த பயித்தியக்காரத்தனம் என்பதனை உணர்ந்துகொண்டதால் ஜாதியை வெறுக்க ஆரம்பித்தார்.
எனவே, தன்னுடைய குடும்பப் பெயர் என்ற ரீதியில் ஓட்டிக்கொண்டிருக்கும் ஜாதிப்பெயாரான "சிறிவஸ்தவா" (Srivastava) வை தன்னுடைய பெயரிலிருந்து தூக்கி எறிந்தார். இப்போது அவர் வெறும் "லால் பகதூர்" மட்டும்தான்.
ஜாதி பெயரை காலில்போட்டு மிதித்த கையோடு காசி வித்யா பீடத்தில் (Kashi vidya peetam) சேர்ந்து 4 ஆண்டுகள் கல்வி பயின்றார்.
1926 ல் காசி வித்யா பீடத்தில் படிப்பை முடித்ததும் அவருக்கு "சாஸ்திரி" (Shastri) என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பின்பே வெறும் லால் பகதூராக இருந்தவர் "லால் பகதூர் சாஸ்திரி" யாக அவதாரம் எடுத்தார்.
உத்திரபிரதேசத்தை (Uttar Pradesh) சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான இவர் "ஜெய் ஜவான்", "ஜெய் கிஷான்" [jai jawan jai kisan] என்ற மந்திர சொற்களுக்கு சொந்தக்காரர். இதன் தமிழாக்கம் "வாழ்க போர்வீரன், வாழ்க விவசாயி" என்பதே...
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வெவ்வேறு காலகட்டங்களில் ஏறக்குறைய 9 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இந்திய திருநாட்டின் 2 வது பிரதமராக அரியணையில் ஏறினார்.
இவரது ஆட்சியின்போது 1965 ல் ஏற்பட்ட (Indo-PakistaniWar of 1965) பாகிஸ்தான் போரில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றது.
எத்தனையோ பதவிகளை வகித்த லால்பகதூர் சாஸ்திரிக்கு சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது என்பது அதிர்ச்சி... ஆம்,... கடைசி காலத்தில் குழந்தைகளின் வற்புறுத்துதல்களுக்கு இணங்க தவணை முறையில் கார் ஒன்று வாங்கினார். ஆனால் கடன் முழுவதையும் செலுத்தி முடிப்பதற்கும்முன்பே அகால மரணத்தை தழுவினார்.
தன்னுடைய வாரிசுகளுக்காக இவர் சம்பாதித்து வைத்துவிட்டு சென்றது கடன் மட்டுமே!..
இவரது நல்லாட்சியை கருத்தில் கொண்டு 1966 ல் இவரது மறைவுக்குப்பின் பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்திராகாந்தி.
Indira Gandhi.
பெயர் :- இந்திராகாந்தி - Indira Gandhi. (இவருடைய இயற்பெயர் "இந்திரா பிரியதர்சினி - Indira Priyadarshini").
நாடு :- இந்தியா - India.
மாநிலம் :- உத்திரப்பிரதேசம். Uttar Pradesh.
பிறப்பு :- 1917 நவம்பர் 19.
இறப்பு :- 1984 அக்டோபர் 31.
குழந்தைகள் :- இரண்டு குழந்தைகள் (ராஜீவ் காந்தி - Rajiv Gandhi, சஞ்சய் காந்தி - Sanjay Gandhi).
பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1972.
வாழ்க்கை முறை :- நேரு (jawaharlal Nehru) குடும்பத்தை சேர்ந்த இந்திராகாந்தி இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1959 ல் காங்கிரஸ்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1966 ல் இந்தியாவின் 3 வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இவர்தான். "இந்தியாவின் இரும்பு லேடி" என அழைக்கப்படும் இவர் மொத்தம் 4 தடவை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இவர் நிகழ்த்திய முக்கிய சாதனையாக 1971 ல் வங்கதேச (Bangladesh) விடுதலையைக் குறிப்பிடலாம்.
இவருக்கு 1972 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவருக்கு விருது வழங்கப்படும்போது இவரேதான் பிரதமர்.
வி.வி.கிரி.
V.V. Giri.
பெயர் :- வி.வி.கிரி - V.V. Giri.
நாடு :- இந்தியா - India.
மாநிலம் :- ஒடிசா. Odisha. (ஒடிசாவிலுள்ள பெர்ஹாம்பூரில் (Brahmapur) பிறந்தார்).
பிறப்பு :- 1894 ஆகஸ்ட் 10.
இறப்பு :- 1980 ஜூன் 23.
பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1975.
வாழ்க்கை முறை :- இவருடைய முழு பெயர் "வராககிரி வேங்கடகிரி" (Varahagiri venkata Giri). ஓடிசாவை சேர்ந்தவர். ஒரு சிறந்த எழுத்தளார் மற்றும் பேச்சாளர். இவர் எழுதிய "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" ஆகியன அறிஞர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றன.
1914 ம் ஆண்டு சட்டப்படிப்பை பயின்றுவந்த இவர் ஒருதடவை காந்தியை நேரில் சந்திக்கவேண்டி வந்தது. அந்த சந்திப்பு இவருக்குள் பல மாற்றங்களை தந்தது. சட்டம் பயில்வதைவிட இந்திய விடுதலைக்காகவும், தொழிலாளர் உரிமைக்காகவும் போராடுவதே உயர்வு என்னும் முடிவுக்கு வந்தார். விளைவு தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தற்காலிக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர் பின்னாளில் இந்தியாவின் 4 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
1957 முதல் 1960 வரை உத்திர பிரதேச (Uttar Pradesh) ஆளுநராகவும், 1960 முதல் 1965 வரை கேரள (Kerala) ஆளுநராகவும், 1965 முதல் 1967 வரை மைசூர் (Mysuru) ஆளுநராகவும் பணியாற்றினார்.
தொழிலாளர்கள் மீது விசேஷ அக்கரையைக்கொண்ட இவர் அகில இந்திய தொழிற்சங்க தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.
இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்வதற்கு அடித்தளமிட்ட இவருக்கு 1975 ல் பாரதரத்னா விருது (Bharat Ratna Award) கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இப்பதிவின் தொடர்ச்சியாகிய ஐந்தாவது பகுதியை படிக்க [Part - 5] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...
👉👉பாரத ரத்னா வெற்றியாளர்கள் - Bharat Ratna Award Winners - Part 5.👈👈
4 கருத்துகள்
சிறப்பான தகவல்கள் நண்பரே...
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களது பணி.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே!
நீக்குதொகுப்பு அருமை...
பதிலளிநீக்குநன்றி! நண்பரே!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.