"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நகைச்சுவை பழமொழிகள் - Humorous proverbs in Tamil.

நகைச்சுவை பழமொழிகள் - Humorous proverbs in Tamil.

Humorous proverbs.

சான்றோர்கள் நமக்களித்த பழமொழிகளைக் கொண்டே நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாட்டு கலாச்சார கூறுகளையும் ஒருவாறு கண்டறிந்துகொள்ள முடியும்.

பொதுவாக பழமொழிகளை அவைகள் சொல்லப்படும் சூழ்நிலைகளைக் கொண்டே பொருள் கொள்ளல் வேண்டும்.

ஏனெனில், பழமொழிகளை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் அவைகள் ஒன்றிற்கொன்று முரணான கருத்துக்களைக் கொண்டவையாக இருப்பதைக் காணலாம். இதற்கு காரணம் அவைகள் உருவானபோது அவ்விடத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் குறிப்பிடலாம். அந்த குறிப்பிட்ட சூழ்நிலைகளுடன் பொருத்திப்பார்த்தால் பழமொழிகளில் சொல்லப்பட்டுள்ள ஒன்றிற்கொன்று முரண்பட்ட கருத்துக்கள்கூட அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்புடையதாகவே அமைவதைக் காணலாம்.

நாம் தொடர்ந்து வாழ்வுக்கு வளம் சேர்க்கும் சிந்தனைக்கு உரம் சேர்க்கும் பழமொழிகள் பலவற்றையும் பார்த்துவருகிறோம்.

இப்பழமொழிகளில் பல சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும் அதேவேளையில் பல பழமொழிகள் எதுகை, மோனை லயத்தில் நகைச்சுவையாகவும் அமைந்திருப்பதுண்டு.

அப்படியான நகைச்சுவை பொருந்திய சில பழமொழிகளைப்பற்றித்தான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

நகைச்சுவை பழமொழிகள்.

  • அரசன் ஆட்சிக்கு ஆகாசவாணியே சாட்சி.
  • கைகண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
  • காத வழி போய் அறியாதவன் மாதமெல்லாம் நடந்தானாம்.
  • காரணமடா கல்லுக் கொத்தா, சாகிற கிழவி பிள்ளை பெத்தா.
  • காவேட்டி ரங்கனுக்கு மேல் வேட்டி இரண்டாம்.
  • ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள், அடைப்பக்கட்டைக்கு ஒரு துடைப்பக்கட்டை.
  • ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு.
  • அறிந்தும் கெட்டேன், தெரிந்தும் கெட்டேன் முடிவில் சொறிந்து கெட்ட இடம் புண் ஆனதுதான் மிச்சம்.
  • அறுத்தவள் (தாலியறுத்தவள் -விதவை) ஆண்பிள்ளை பெற்றாளாம்.
  • அரிசியும் கறியும் உண்டானால் ஆக்கித்திங்க அக்கா வீடு எதற்கு?
  • காடும் கழனியும் இல்லாத ஊரில் கழுதை முள்ளியே கற்பக விருட்சமாம்.
  • காமனுக்கு கண் இல்லை, மாமனுக்கோ பெண் இல்லை.
  • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்.
  • கிராக்கி மொச்சைக்கொட்டை வராகனுக்கு ரெண்டு கொட்டை.
  • குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
  • குசு கும்பிடப்போக தெய்வம் திடுக்கிட்டு நின்றதாம்.
  • குட்டங்கோனி தட்டான் குறைக்கும் வரி வைத்தான்.
  • கை துப்பை கொண்டு காரியமில்லையாம் வாய் துப்பை கொண்டு வாழ வந்தாளாம்.
  • சாக்கோ, நாக்கோ இதுக்கு பெயர்தான் அம்மையார் வாக்கோ?
  • செட்டி முறை எட்டு முறை எட்டு முறையும் கெட்ட முறை.
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  • சும்மா இருக்கிற மணியக்காரனைத் தூண்டி விடுவானேன்? போன வருஷ வாயிதாவையும் போட்டுக் கொள்வானேன்?
  • மயில் கண்ணிக்கு மசக்கை வந்தால் மாப்பிள்ளைக்கும்தான் அவஸ்தை வரும்.
  • அப்பன் சோற்றுக்கு கும்மியடிக்க, பிள்ளையோ கும்பகோணத்தில் கோதானம் செய்கிறானாம்.
  • சோறு எங்கே விக்கும் தெரியுமா ? தொண்டையிலேதான் விக்கும்.
நகைச்சுவை பழமொழிகள் - Humorous proverbs in Tamil.

  • சோறு கண்ட இடம் சொர்க்கம், கஞ்சி கண்ட இடம் கைலாசம், வஞ்சி கண்ட இடம் வைகுந்தம்.
  • தகப்பனுக்கே ஒட்டு கோவணமாம், பிள்ளைக்கு எங்கே இழுத்து போர்த்துகிறதாம்.
  • வல்லடி வாழ்க்கை சொல்லடி மாமி!
  • விரல் உரல் ஆனால் உரல் உத்திரம் ஆகாதா?
  • அருமை மருமகன் தலைபோனால் போகட்டும், ஆதிகாலத்து உரல் போக கூடாது.
  • வெண்ணெய் தின்றது ஒருவன். விரல் சூப்பியது மற்றொருவன்.
  • தத்தி தத்தி வந்த பிள்ளை தடுக்கி விடுந்ததாம், ஓடி ஓடி வந்தபிள்ளை ஓரமாய் விழுந்ததாம்.
  • ஆய் பார்த்த கல்யாணத்தை போய் பார்த்தால்தான் தெரியும்.
  • சோளி சோளியோடே சுரை குடுக்கை ஆண்டியோடே.
  • சோற்றுப்பானை உடைந்தால் மாற்றுப்பானை இல்லை.
  • தச்சன் வீட்டில் தயிரும், எச்சன் வீட்டில் சோறும் எப்படி தேறும்?
  • தட்டிக்கொடுத்தால் தம்பி தலைவிரித்தும் ஆடுவான்.
  • தட்டினால் தட்டான் தட்டாவிட்டால் கெட்டான்.
  • தண்ணீருக்கே தகராறாம் பிள்ளை மட்டும் பதினாறாம்.
  • தம்பி சோற்றுக்கோ சூறாவளி, வேலைக்கோ வாரா வழி.
  • தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்கு ஆறுதல் சொன்னாளாம்.
  • தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கும் ஆகாது.
  • துணைக்கு துணையும் ஆச்சு, தொண்டைக்குழிக்கு வினையும் ஆச்சு.
  • தொட்டு தடவ எண்ணெய் இல்லை, தோட்டமெல்லாம் தீ விளக்காம்.
  • தோட்டப்பாய் முடைகிறவனுக்கு தூங்கப்பாய் இல்லையாம்.
  • தோண்டி கள்ளை தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பாவியென்று ஆவான்.
  • நகரம் முழுக்க நமக்கே சொந்தம், ஆனால் தங்கிப்போகத்தான் இடமே இல்லை.
  • நம்மாழ்வார் நம்மை கெடுத்தார், கூரத்தாழ்வார் குடியை கெடுத்தார்.
  • நரம்பன் கையில் ரம்பை அகப்பட்டது போல.
  • அந்தி பிடித்த மழையும் விடாது, அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடாது.
  • விக்க விக்க சோறு போட்டு கக்க கக்க வேலை வாங்கு.
  • தாசி உறவும் வியாபாரி நேசமும் காசு பணத்தளவே காணலாம்.
  • தட்டான் ஆத்தாளுக்கு தாலி செய்யினும் மாப்பொன்னில் காப்பொன் திருடுவான்.
  • கேட்டதோ தயிரும் பழையதும், கிடைத்ததோ கயிறும் பழுதையும்.
  • தொடை தட்டின மனிதனும் பாழ், அடை தட்டின வீடும் பாழ்.
  • தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி.
  • நரைத்த மயிர் கறுத்தால் நங்கை நாச்சியாரும் கொண்டை முடிப்பாளாம்.
  • நாட்டரசன் கோட்டையிலே நாலு பக்கமும் ஓட்டை.
  • கருப்பட்டி பானைக்குள்ள கையை விட்டவன் நாக்குல நக்காம டவுசர்லயா துடைப்பான்?
nithyananda_madurai adheenam

  • நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா?
  • நாலு கரண்டி நல்லெண்ணெய், நாற்பத்தாறு தீவட்டி, வாரார் ஐயா சுப்பையா, வழி விடடி காமாட்சி. 
  • நாலும் கிடக்க நாத்தனார் தலையை சிரைத்தாளாம்.
  • நிலா புறப்பட எழுந்தானாம் நெல்குழி வரைதான் நகர்ந்தானாம்.
  • நினைத்து கொண்டாளாம் கிழவி வயசு பையனுக்கு வாழ்க்கைப்பட.
  • நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இருவருமே ஊதி ஊதி தின்னலாம்.
  • அதமனுக்கு பெண்டாட்டியாய் இருப்பதைவிட பலவானுக்கு வேலைக்காரியாக இருக்கலாம்.
  • அதிசயமான ரம்பையாம் அரிசி கொட்டுகிற தொம்பையாம்.
  • அத்தை மகள் சொத்தை அவள் கேட்பதோ மெத்தை.
  • தங்கப் பெண்ணே தாராவே, தட்டான் கண்டால் பொன் என்பான், தராசில் வைத்து நிறு என்பான், எங்கும் போகாமல் இரு என்பான்.
  • கொடுத்து கெடுப்பான் மார்வாடி, தொடுத்து கெடுப்பாள் மங்கை.
  • வைக்கத்தெரியாதவன் வைக்கோல் போரில் வைத்தானாம்.
  • ஆகாயத்தில் போகிற சனியனை ஏணிவைத்து இறக்கின கதை.
  • ஆசை அவள்மேலே, அதரவு பாய் மேலே.
  • கொண்டு வந்தால் மகராசி, இல்லாவிட்டால் பரதேசி.
  • கிட்டினால் ராமா, கிட்டாவிட்டால் கோவிந்தா.
  • ஜாண் பண்டாரத்துக்கு ஒரு முழம் தாடி.
  • நீர் மோருக்கே கதியற்ற வீட்டில் ஹோமத்துக்கு பசுநெய் கேட்டது போல.
  • நேற்று வந்தாளாம் குடி, அவள் தலையில் விழுந்ததாம் இடி.
  • பணம் இருந்தால் பாட்ஷா, இல்லாவிட்டால் பக்கிரி.
  • பண்டாரம் பழத்துக்கு அழும்போது அவன் பிள்ளை பஞ்சாமிர்தத்திற்கு அழுததாம்.
  • என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்கு கல்யாணம் என்றாளாம்.
  • ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை, குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை.
  • ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை.
  • ஐவருக்கும் மனைவியாம் அழியாத பத்தினியாம்.
  • வீட்டை பிடுங்கி சும்மா இருந்தாலும், பூட்டை பிடுங்கி சும்மா இருக்க மாட்டான்.
  • படைக்காமல் படைத்தானாம் பரதேசி, அலையாமல் அலைந்தானாம் அன்னகாவடி.
  • படுதீப்பட்டு வேகிற வீட்டில் படுத்துக்கொள்ள இடம் கேட்ட கதை. 
  • பட்டிக்காட்டு பெருமாளுக்கு கொட்டைத் தண்டே கருட கம்பம்.
  • பஞ்சாங்கம் பல சாத்திரம்... கஞ்சி குடித்தால் கல மூத்திரம்.
  • தனக்கென்று ஒரு பெண்ணாட்டி இருந்தால் தடக்கென்று ஒரு அடி அடித்துக்கொள்ளலாம்.

  • பச்சரிசி தோசையை அறியாத பன்னாடை இட்டலியை பார்த்ததும் எடுத்து எடுத்து தின்னுச்சாம்.
  • பங்காளியையும், பனங்காயையும் பதம் பார்த்தே வெட்டு.
  • பக்தியோடே பாகற்காய் சட்டியோடே தீய்கிறது.
  • பத்து குட்டி அடித்தாலும் சட்டிக்கறிக்கு காணாது.
  • பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கி காட்டினாளாம்.
  • பொக்குப் புல்லைக் கண்டானாம் தக்குப்புக்குன்னு குதிச்சானாம்.
  • ஊரெல்லாம் உறவு ஒரு வாய் சோறில்லை.
  • தாரமும் குருவும் தலைவிதிப்படி.
  • பிகுவான சம்பந்தி இழுத்தாராம் இரண்டு இலை.
  • பிள்ளை வரம் கேட்கபோன இடத்தில் புருஷனை பறிகொடுத்தது போல.
  • பிறந்த வீட்டு பெருமையை உடன் பிறந்தாளிடமே பீற்றிக்கொண்டாளாம்.
  • பூ வைத்த மங்கையாம், பொற்கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்.
  • காஞ்சிபுரம் குடை அழகு, திருப்பதி வடை அழகு, ஸ்ரீரங்கத்து நடை அழகு.
  • தண்ணீர் குடம் உடைந்து தவியாய் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக்கொண்டு குதியாய் குதிப்பதென்ன?
நகைச்சுவை பழமொழிகள் - Humorous proverbs in Tamil.

  • குளிர்விட்டு போனவளுக்கு முக்காடு எதற்கு?
  • அவலை முக்கி தின்னு, எள்ளை நக்கி தின்னு.
  • விலை மோரிலே வெண்ணெய் எடுத்து தலை மகனுக்கு கல்யாணம் பண்ணுவாள்!
  • கிழவி பாட்டை கின்னரக்காரன் கேட்பானா?
  • கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.
  • குப்பைமேனி பூ பூத்து கொண்டைக்கு ஆகாது, கூத்தியா பிள்ளை பெத்து காணிக்கு ஆகாது.
  • கெட்டிக்காரன் புஞ்சையில் போகும் எட்டு பாதை.
  • செல்வத்துல வாழுற வாரியக் கொண்டைக்கு வண்டியில் வருதாம் வரை ஓடு.
  • பொரிமாவைத்தான் மெச்சுவான் பொக்கை வாயன்.
  • எத்தனை வித்தை கற்றாலும் செத்தவன் செத்தவன்தான்.
  • அந்தரத்துல தொங்கிச்சாம் வவ்வாலு... அத அண்ணாந்து பாத்தானாம் நம்ம கோவாலு...

💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.