"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நன்மொழி தந்த பொன்மொழிகள் - Good Proverbs of Good Language.

நன்மொழி தந்த பொன்மொழிகள் - Good Proverbs of Good Language.

நன்மொழி தந்த தமிழ் பழமொழிகள்.

Tamil Proverbs.

வாழ்வின் கடினமான ஏற்ற இறக்கங்களை எளிதாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தடம் வழுவாமல் நகர்த்தி செல்லும் திறன்படைத்தவை நம் முன்னோர்கள் நமக்களித்த நீதியுரைகள்.


இந்நீதியுரைகள் பாமரனுக்கும் எளிதில் புரியும்வண்ணம் எளிய நடையில் இருப்பதாலும், காலத்தால் பழமைப்பட்டு நிற்பதாலும் இதனை தற்காலங்களில் "பொன்மொழிகள்" என்றும் "பழமொழிகள்" என்றும் அழைத்துவருகிறோம்.

இது "பொன்மொழி" மற்றும் "பழமொழி" என்ற பெயர்களில் மட்டுமே அழைக்கப்படாமல் பழகு மொழி, நன்மொழி, தொன்னெறி மொழி, வாய்மொழி, சொலவடை, முதுமொழி, மூதுரை என பல பெயர்களிலும்  அழைக்கப்படுகின்றன. இதனுடைய மேன்மையை கருத்தில்கொண்டு இதனை "எழுதா இலக்கியம்" எனவும் அழைக்கின்றனர்.

இப்பதிவில் சிறப்புமிக்க சில பழமொழிகளைப்பற்றி அறிந்துகொள்வோம். வாருங்கள்...

Good Proverbs of Good Language.


  • கல்லார் நெஞ்சில் நில்லார் ஈசன்.
  • முன் கை நீண்டால் முழங்கையும் நீளும்.
  • அந்திமழை அழுதாலும் விடாது.
  • மரியாதை இல்லாதவன் மகிமை அற்றவன்.
  • அந்தணர் மனையில் சந்தணம் மணக்கும்.
  • மண்ணை தின்றாலும் மறைய தின்னு.
  • முன் அளந்த நாளியே பின் அளவும் அளக்கும்.
  • அமைதி கெட்ட நெஞ்சம், நொடிக்கொரு தரம் அஞ்சும்.
  • மடி விதை முந்தும் முன்பே பிடி விதை முந்தும்.
  • மடை ஏறப் பாய்ச்சினால் தடை ஏற விளையும்.
  • அந்நிய மாதர் அவதிக்கு உதவார்.
  • மச்சானை நம்பினால் உச்சாணியில் ஏறலாம்.
  • மரைக்காயருக்கும் உண்டு மாட்டுப் புத்தி.
  • மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்கு பயப்படு.
  • மல்லாந்து துப்பினால் மார்மேல்தான் விழும்.
  • மண்டை உள்ள மட்டும் சளியும் இருக்கும்.
  • மூர்க்கரை மூர்க்கரே முகப்பர்.
  • இறுக முறுகின பிரி சட்டென அறும்.
  • அசல் வளர்ந்தால் அஞ்சு நாளும் பட்டினி கிடப்பான்.
  • அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைகாரன் ஏறினான்.
  • முற்றத்தில் வந்தவர் முப்பழி செய்தவர் ஆனாலும் வாவென்றே அழை.
  • போகிறவன் பொன்னை தின்றானாம், இருக்கிறவன் இரும்பை தின்றானாம்.
  • அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோஜனம் இல்லாதது.
  • அகமுடையான் அடித்த அடியும், அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா.
  • அசட்டுக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் ஆண்டு வாழ்வதைவிட சமர்த்துக்கு வாழ்க்கைப்பட்டு சட்டென்று சாவது மேல்.
  • அந்தம் உள்ளவன் ஆட வேணும், சந்தம் உள்ளவன் பாடவேணும்.
  • போன சுரத்தை புளியிட்டு அழைத்தது போல.
  • அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே அதுவும் இருக்கிறது புந்திக்குள்ளே.
  • அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி.
  • மூடனோடு சேர்ந்தவன் படியான், மூர்க்கனோடு சேர்ந்தவன் கீழ்ப்படியான்.
  • அம்மையார் வரும்வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா?
  • மூவைந்தும் கூடினால் மூளியும் முழுபெண் ஆவாள்.
  • அம்மை வீட்டு தெய்வம் நம்மை விட்டு போகுமா?
  • மூன்று பேர் சேர்ந்தால் முதலுக்கு மோசம், நான்குபேர் சேர்ந்தால் சகலமும் நாசம்.
  • மெட்டி போடுவதில் பயனென் கொள், தட்டி நடப்பதிலே இருக்கிறது பயனென சொல்.
  • மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
  • அர்ப்பணித்து வாழ்ந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
  • மேய்ப்பான் கண்ணிலும், உடையவன் பிடரி நலம்.
  • அரங்கன் சொத்து அக்கரை ஏறாது.
  • மேழிச் செல்வம் கோழைபடாது.
  • அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்.
  • மேனி வெறுப்பே ஞானியின் நினைப்பாம்.
NithyanandaAham Brahmam

  • மையலை ஊட்டுவதே மாதரின் மகிமை.
  • அரசன் அதிகாரம் அவனது நாட்டோடே, புருஷன் அதிகாரம் இவனது வீட்டோடே.
  • மோசம் நாசம் கம்பளி வேஷம்.
  • அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவே ஆரோக்கியமானது.
  • மோப்பம் அறியா நாயும் வீண், ஏப்பம் அறியா விருந்தும் வீண்.
  • மோர்க்கடன் முகட்டையும் தொடும்.
  • மௌனம் கலக நாசம்.
  • எமன் ஒருவரைக் கொன்றால் ஏமாற்றமோ மூவரைக் கொல்லும்.
  • யுகமழிய மழைபெய்தாலும் கொட்டாங்கிளிஞ்சல் கரையுமா?
  • ராத்திரி செத்தால் எண்ணெய்க்கு விதி இல்லை. பகலில் செத்தாலோ வாய்க்கரிசிக்கும் வழி இல்லை.
  • அருமை அறியாதவன் ஆண்டென்ன? மாண்டென்ன?
  • ராமாயணம் ஆண்டவர் புராணம், பாரதம் பாண்டவர் புராணம்.
  • வஞ்சகமானது நெஞ்சைப் பிளந்து வாழ்வை குடிக்கும்.
  • வஞ்சித்து வாழ்வதை காட்டிலும் நஞ்சித்து சாவதே மேல்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வட்டிக்கு கொடுத்த காசு வாய்க்கரிசிக்கும் வாராது காண்.
  • அருமை அறியாதவனிடம் போனாயானால் உன் பெருமையெல்லாம் அழிந்தே போகும்.
  • வகையறிந்து செய்தால்தான் வாதமும் வகையாய் வாய்க்கும்.
  • வக்கணைக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.
  • அரைப்படி அரிசியில் அன்னதானம், விடியும் மட்டும் மேளதாளம்.
  • ராஜா வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூ பூத்திருந்தால் பார்க்கலாமே தவிர பறிக்கலாமோ?
  • வயிறு எரிகிறவனிடம் போய் வாழ வரம் கேட்ட கதை.
  • வரும்வினை வழியில் நிற்காது.
  • வருகிற விதி வலிய வந்தால் வளைந்து ஆடுமாம் தலையிலுள்ள தண்ணீர் பானை.
  • வருந்துவார் திருந்துவார்.
  • வருந்தாதார் வாழ்க்கை திருந்தாமலே போகும்.
  • வரும் முன் காப்பான் சொன்ன புத்தியை வந்தபின் காப்பான் புறந்தள்ளியது போல.
  • வருவது தெய்வத்தால், கெடுவது கர்வத்தால்.
  • வல்லவன் ஆட்டின பம்பரம் மண்ணிலும் ஆடும்.
  • வல்லவன் வகுத்ததே வாய்க்கால்.
  • வல்லான் வகுத்த வாய்க்கால் வடக்கும் பாயும் கொஞ்சம் விட்டால் தெற்கும் பாயும்.
  • வல்லவனையும் வழுக்கும் வழுக்குப்பாறை.
  • வல்லார் களைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாது இரார்கள் சுத்த வீரர்கள்.
  • வலிமைக்கு வழக்கு இல்லை. எளிமைக்கு இலக்கு இல்லை.
  • வளர்ப்பு வக்கணை அறியாது.
  • வழலை முடித்தவன் வாதம் முடித்தவன்.
  • வழவழத்த உறவை காட்டிலும் வைரம் பாய்ந்த பகை நன்று.
  • வளைந்து போனாலும் வழியிலே போக வேண்டும்.
  • வளைந்த மூங்கில் அரசன் முடியில், வளையாத மூங்கில் களைக்கூத்தாடி பிடியில்.
  • வறியார் இருமையும் அறியார்.
  • வாடின பூவை சூடினாலும் சூடின பூவை சூடுதல் கூடா.
  • வாணிபன் கட்டை வைரக்கட்டை. வாணிபம் தேய்ந்தால் துடைப்பக் கட்டை.
  • வாணிபன் ஆசை கோணியும் கொள்ளாது.
  • வாதத்தை ஊதி அறி, வேதத்தை ஓதி அறி.
  • வாதம் கெட்டால் வைத்தியம், வைத்தியம் கெட்டால் பைத்தியம்.
  • வாய் அறியாது தின்றால் வயிறு அறியாது கழியும்.
  • வாய் வாய்த்தால் கிழவியும் கவி பாடுவாள்.
palam neeyappa

  • வாய் மதத்தால் வாழ்விழந்தவன் போல.
  • வாய் பேச்சு பேசுகிறவன் வளம் இழந்து போவான்.
  • வாய் பேச்சை பிடுங்கி வயிற்றெரிச்சலைக் கொட்டினாற்போல.
  • வாய் பார்த்தவன் வீட்டை பேய் பார்க்கும்.
  • வாய் மூடா பட்டினி, கண் மூடா தூக்கம்.
  • வாய் வாழ்த்தாவிடினும் வயிறு வாழ்த்தும்.
  • வார்த்தை வார்த்தையை இழுக்கும், வடுமாங்காய் சோற்றை இழுக்கும்.
  • வாலிபத்தில் கிடைக்காத வாழ்க்கை இனி வந்தென்ன போயென்ன?
  • வாலிபத்தில் முதிர்ந்த புத்தி குறுகின வயசுக்கு அடையாளம்.
  • வாழ்வும் வீழ்வும் வாயாலே.
  • வாழ்கிற வீட்டுக்கு வாழையை வைத்து பார்.
  • வாழ்ந்த மகள் வந்தால் வர்ண தடுக்கு, கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
  • வாழ்ந்தவன் கெட்டால் வறுவோட்டுக்கும் ஆகான்.
  • வாழ்வும் தாழ்வும் ஒருவழி நில்லா.
  • வாழாக் குமரி மூளா நெருப்பு.
  • வாழும் குமரிக்கு வலப்புறத்தில் மச்சம், மனையாளும் மன்னனுக்கு இடப்புறத்தில் மச்சம்.
  • வாழும் வீட்டுக்கு ஒரு பெண், வைக்கோல் படப்புக்கு ஒரு கன்று.
  • வாழை நட்டால் தாழ நடு.
  • வாழைப்பழம் அறியாதவனுக்கு தோலை பிதுக்கி காட்டினாற்போல.
  • வாழை வாட்டமும், வரகு வாட்டமும் தெரியா.
  • வாள் பிடித்தவன் கையில் வாழ்நாள்.
  • விசிறிக் காற்றும் வேள்விப் பணமும் விரைந்தே வந்து சேரும்.
  • விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும், தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும்.
  • விசுவாசம் இருந்தால் தாசியும் தழைப்பாள். நிஜம் இருந்தால் நீசனும் பிழைப்பான்.
  • விட்ட இடம் பட்டணம், விழுந்த இடம் சுடுகாடு.
  • விட்டு அடிக்கிறதாயினும் தொட்டு அடி.
  • விட்டு கெட்டது காது, விடாமல் கெட்டது கண், தட்டிக் கெட்டது வயிறு, தட்டாமல் கெட்டது தலை.
  • விட்டு விட்டு பெய்கிற மழையிலும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது.
  • விட்டு வைத்த கடனும் பெற்று வைத்த பிள்ளையும் தொடரும் தொலைந்து போகா.
  • விடியா மூஞ்சி வேலைக்குபோனால் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது.
  • விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது.
  • விதைத்தால் வரகை விதை, சேவித்தால் வடுகனை சேவி.
  • விதை போடும் முன் வேலி போடு.
  • விதையின் தன்மைதானே விளைச்சலில் வரும்.
  • விரல் போகாத இடத்தில் உரல் போகுமா?
  • விரலூன்ற இடம் கொடுத்தால் வீடு எல்லாம் கை கொள்வதா?
  • விரித்த ஜமுக்காளம், விடியும் மட்டும் கச்சேரி.
  • விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • வில் அடியால் சாகாதது கல் அடியால் சாகுமா?
  • வினைப்பயனை வென்றாலும் விதிப்பயனை வெல்லல் அரிது.
  • வீட்டை காத்து அருள், பாட்டை பார்த்து அருள்.
  • பணம் இருந்தால் பங்காளி.
  • வீண் கட்டை என்றாலும் ஆண் கட்டை அல்லவோ?
  • வெந்தால் தெரியும் வெங்காய மணம்.
  • வெம்பா பெய்தால் சம்பா விளையும்.
  • வைரத்தைவிட வைராக்கியமே வலிமை பொருந்தியது.


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.