Proverbs about animals.
நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வில்பெற்ற அனுபவங்களை பிறருக்கும் பயனடையும்படியாக வாய்மொழியாக சொல்லிச் சென்ற நன்மொழிகளே பழமொழிகள் எனலாம்.
பழமொழிகள் வழியாக அறிவுறுத்தப்படும் பல கருத்துக்கள் விலங்குகளின் செய்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை எனலாம். அதற்கான அடிப்படை காரணம் மக்கள் மனதில் இவை எளிதாக பதிவுறும் என்பதே.
இப்பதிவில் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு நம்மிடையே வழக்கத்திலும் புழக்கத்திலும் இருக்கும் பழமொழிகளில் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள்.
விலங்குகள் பற்றிய பழமொழிகள்.
- கறக்க ஊறும் ஆவின்பால், கற்க ஊறும் மெய்ஞானம்.
- காட்டில் புலி கொல்லும் வீ ட்டில் புளி கொல்லும்.
- குட்டி ஆனையும் குளத்தைக் கலக்கும்.
- குள்ளநரி தின்ற கோழி கூவப் போகிறதா?
- கருப்பங்கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக்கொண்டு போனதாம்.
- கொண்டவள் குறிப்பு அறிவாள், குதிரையோ இருப்பு அறியும்.
- கொண்டவன் குரங்கு, கண்டவன் கரும்பா?
- கரைக்கும் கரைக்கும் சங்கிலி... நடுவிலே இருக்குமாம் நாய் விட்டை.
- கல் எடுத்தால் நாய் ஓடும். கம்பு எடுத்தால் பேய் ஓடும்.
- கூத்தாடிக்கு ஒரு குரங்கு கிடைத்தால் போதும். தினம் தினம் காத்தாடியின் கீழ் ஹாயாக தூங்குவான்.
- கழனியில் விழுந்த கழுதைக்கு அதுவே கைலாசம்.
- கழுதை உழுது கம்பு விளையுமா? சுண்டியான் உழுது நெல் விளையுமா?
- கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை.
- கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதிதான் நன்மருந்து.
- கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சிபுரத்திலே பிறக்க வேண்டும்.
- கழுதை லத்தி கை நிறைய. குதிரை லத்தி குதிர் நிறைய.
- மானாட மயிலாடும், கோலாட குரங்கு ஆடும்.
- கோர்ட்டுக்கு முன்னால் போகாதே, கழுதைக்கு பின்னால் போகாதே.
- கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகுமா?
- களிறு பிளறினால் கரும்பைக் கொடு, வயிறு பிளிறினால் மருந்தைக் கொடு.
- கறக்கிற மாட்டை கள்ளன் கொண்டு போனால் வறட்டு மாடு அங்கு மகாலட்சுமியாக மாறும்.
- கறவை [கறவை மாடு] உள்ளான் விருந்துக்கு அஞ்சான்.
- கன்று இருக்க கரண்டி பால் கறவாப் பசு; கன்று இறந்தபின் கலப்பால் கறக்குமா?
- பாலுண்ட கன்று களம் படுக்குமா?
- கன்றைவிட்டு கட்டுத்தறியை பிடித்தது போல.
- கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னால். கட்டுத்தறியை பிடுங்கி நிற்கிறான்.
- கொத்திக் கண்ட கோழியும், நக்கிக் கண்ட நாயும் ஓரிடத்தில் நில்லாது.
- கேடுகெட்ட நாயே வீடு விட்டு போயேன்.
- கொம்பு முளைக்காத ஆனைக்குத் தும்புக் கயிறு தொண்ணூறு.
- கன்றும் தாயும் காடு ஏறி மேய்ந்தால் கன்று ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம்.
- கன்னி இருக்கும் பொழுது காளை மணை ஏறக் (மணம் புரிதல்) கூடாது.
- கனத்தை கனம் அறியும். கருவாட்டுப் பொடியை நாய் அறியும்.
- காக்கை "கர்" என்றதாம் கருமந்தியோ உடனே "குர்" என்றதாம்.
- காக்கையை கண்டு அஞ்சுவான், கரடியை பிடித்து கட்டுவான்.
- காசுக்கு ஒரு புடவை விற்றாலும் நாய் என்னவோ அம்மணமாகத்தான் திரியும்.
- காட்டுயானை ராஜாவுக்கு எலிக்குஞ்சு மந்திரியாம்.
- காட்டுயானை விட்டாலும் விடும் கவியானை விடவே விடாதாம்.
- காட்டில் கடுவாய் கடலில் கொடுவாய்.
- கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டி நின்னதாம்.
- கொல்லையை கெடுக்குமாம் பல்லி, குடியை கெடுக்குமாம் சனி.
- காட்டுக் களாக்காயும் தயவு இல்லா ஓணானும் கோத்துக் குலாவிச்சாம்.
- காட்டைக் காத்த நரியும் வீட்டைக் காத்த நாயும் வீண் போகா.
- காடு கெட ஆட்டை விடு.
- காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்.
- காணாமல் போன முயல் பெரிய முயல்.
- காத்திருந்த நாய்க்கு கல்லெறிதான் மிச்சம்.
- காத வழி பேர் இல்லாதவன் கழுதைக்கு சமானம்.
- காந்தூர் நாயும் களத்தூர் பேயும் கருக்கலில்தான் கத்தும்.
- காய்ச்சினவள் காய்ச்சினால் கழுதை மூத்திரம்கூட கனிச்சாறாக ருசிக்கும்.
- காய்ந்த நீரில் விழுந்த பூனை காயாத நீரை கண்டாலும் அஞ்சும்.
- காயும் புழுவுக்கு சாயும் நிழல் போல.
- கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
- காரியக்காரன் கொல்லையிலே கழுதைவந்து மேய்கிறது.
- காலில் அடிபட்ட நாயும், வார் அறுந்த செருப்பும் வழித்துணைக்கு உதவுமா?
- கால் ஆட்டுகிறவர் வீட்டில் வாலாட்டி நாய் தங்காது.
- கால் காசு பூனை முக்கால் காசு தயிரையல்லவா குடிக்கிறது?
- காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்.
- காலம் அறிந்து பிழைக்காதவன் வாலறுந்த குரங்கு.
- ஓணான் கிழம் என்பதற்காக மரம் ஏறாதா என்ன?
- குச்சு நாய்க்கு மச்சு வீடா?
- குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்பு போகாது.
- குட்டி இட்ட நாய்க்கு குப்பைமேடு கோபுரம்.
- குட்டிக்கும், பட்டிக்கும் குடிபோகக் கொண்டாட்டம்.
- குட்டிக் குரங்கானாலும் கெட்டி பிடி.
- குட்டி கொழுத்தாலும் வழுக்கை வழுக்கைதான்.
- கெட்ட காலத்துக்கு "மூட்டை" தொற்றும். கேடு கெட்ட காலத்துக்கு "சீலைப்பேன்" தொற்றும்.
- கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும்.
- கொல்ல வரும் யானை முன்னே கல்லை விட்டு எறியாதே.
- குட்டிசுவரில் தேள் கொட்டக்கொட்ட கட்டுத்தறியில் நெறி ஏறியதாம்.
- குட்டிச்சுவரும், குரங்கிருந்த மாளிகையும் பாழ்பட்டு போகும்.
- குட்டி செத்தாலும் குரங்கு விடுவதில்லை.
- குட்டி நரை குடியை கெடுக்கும்.
- குரைத்தது குட்டி நாய்.. உதை வாங்கியதோ பட்டி நாய்.
- குட்டியின் கையை கொண்டு தாய் குரங்கானது கொள்ளிக்கட்டையின் சூட்டை பார்த்ததுபோல.
- குட்டை ஏறிக் குரைத்த நாயே சதை வீங்கி செத்துப்போனாயே...
- குடம்பால் கறந்தாலும் குதிரையோட்டம் ஓட மாட்டாது.
- கொள்ளிபட்ட குதிரை லாயம் பாழ்.
- கொள்ளு வாசனை கண்ட குதிரை போல குதிக்கிறத பாரு.
- கோம்பை நாயும் கோபக்காரன் வாயும் ஒண்ணு.
- கூரையை பிடுங்கி தின்னுமாம் மாடு.
- குடல் காய்ந்தால் நாய்க்கு நாற்றமும் நறுமணம்.
- குடியில்லா ஊருக்கு குள்ளநரியே பேரரசன்.
- குடியில்லா வீட்டில் குண்டு பெருச்சாளி வந்து குடியேறும்.
- குடிப்பது எருமை மூத்திரம், அதற்கு கடிப்பதற்கு இஞ்சி பச்சடியா?.
- குடிகெடுத்த குஷியிலே குரங்கை கட்டிக்கொண்டு அழுதானாம்.
- குடித்த மறி கூட்டில் கிடக்காது.
- குடி போன வீட்டிலே வறட்டு நாய் நின்று வரவேற்றதாம்.
- குடிசையில் பிறந்து குடியிலே வளர்ந்து குரங்காட்டம் ஆடுகிறான்.
- குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னுமாம்.
- குடுகுடுவென்று குதித்து ஓடினாலும் குட்டியானை குதிரை ஆகுமா?
- குண்டு பட்டும் சாகாதவன் வண்டு கடிக்கு செத்தானாம்.
- குண்டோட்டம் குதிரை ஓட்டம்.
- குணம் கெட்டால் குரங்கு.
- குத்தாத காதுக்கு ஊனம் இல்லை. குரைக்காத நாய்க்கு உதையும் இல்லை.
- குதிரை ஏறி என்ன? கோணல் கொம்பு ஊதிப் பருத்தென்ன?
- கொடுக்கத் துணியாதவர்கள் குரங்காய் பிறப்பர்.
- கோவில்பட்டியை விட்ட குதிரை கோபாலபுரம் போனவுடன் துள்ளிக்குதித்ததாம்.
- குதிரை குருடாக இருந்தாலும் கொள்ளு தின்கிறதில் குறைச்சல் இல்லை.
- குதிரை நடக்காவிட்டால் ராவுத்தர் கொக்காய்ப் பறப்பாரோ?
- நாய் வாங்கும்போது நகம் பார்த்து வாங்கு.
- கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?
- கோத்திரத்தில் குரங்கு ஆனாலும் கொள்.
- குதிரையான குதிரையெல்லாம் கூரையை பறித்து தின்கிறபோது, குருட்டு குதிரை கோதுமை மாவுக்கு அழுததாம்.
- குமர் முற்றி குரங்காயிற்று.
- குரங்கே ஆனாலும் குலத்திலே கொள்ள வேண்டும்.
- குரங்குக்கு சாவு சிரங்கிலே.
- குரங்கும், உடும்பும் பிடித்தது விடா.
- குரங்கு பிடித்த பிடியை விடாது. நாய் கடித்த கடியை விடாது.
- கோணி கொண்டது, எருமை சுமந்தது.
- குரைக்காத நாய் குதிகாலை கடிக்கும்.
- குரைக்கிற நாய்க்கு ஒருதுண்டு கருப்பட்டி.
- குரைக்காத நாயையும், அசையாத நீரையும் நம்பி இறங்காதே.
- குரைக்கிற நாய்க்கு எல்லாம் கொழுக்கட்டை போட முடியுமா?
- குரைக்கிற நாய் கடிக்காது. இடிக்கிற மேகம் பெய்யாது.
- குரை குரை என்றால் குரைக்காதாம் கொல்லங்குடி நாய்; தானாகக் குரைக்குமாம் தச்சக்குடி நாய்.
- குலத்தைக் கெடுக்குமாம் கூறுகெட்ட குரங்கு.
- கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குருணை மோர் குருதட்சிணையாக வேண்டுமாம்.
- குளவி கூடு கட்டினால் பிறப்பு. நாய் பள்ளம் தோண்டினால் இறப்பு.
- குற்றாலத்து குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.
- கூர்மத்தை நம்பி குடிகெட்டு போனேன்.
- கொண்டதா கொடுத்ததா கோமுட்டி வீட்டுப் பெருச்சாளி
- கொண்டவன் நாயே என்றால் கண்டவனும் கழுதை என்பான்.
- கையானையைக் கொண்டு காட்டானையை பிடிக்க வேண்டும்.
- கூரையைப் பிரிக்க குரங்குக்கு போடு பிடி கடலை.
- கூரை மீது ஏறி ஓடும் குரங்கை பார்த்து கூண்டிலுள்ள குரங்கு நலம் விசாரித்ததாம்.
- கொடுங்கோல் மன்னன் நாட்டிலும் கடும்புலி வாழும் காடு நன்று.
- கொய்யா வனத்துக்கு குரங்கையல்லோ காவல் வைத்தானாம்.
- கொல்லன் எளிமை கண்டு குரங்கு தன் காலுக்கு பூண் கட்டச்சொன்னதாம்.
- கொல்லைக்காட்டில் நரியை குடிவைத்துக் கொண்டது போல.
- கொழுத்த ஆடு குட்டி போட்டாலும் உழுக்கட்டை வழுக்கட்டைதான்.
- கோணல் கொம்பு ஏறி என்ன? குதிரை மீது ஏறி என்ன?
- கோவில் பூனை தேவர்கள் எதிர்வந்தாலும் அஞ்சுவதில்லை.
- குட்டிபோட்ட நாய் குட்டிசுவரில் ஏறியது போல.
- கோவில் கட்டி குச்சு நாயை காவல் வைத்தவன் மாடிவீடு கட்டி மரநாயை காவல் வைத்தானாம்.
💢💢💢💢💢💢
2 கருத்துகள்
அறியாதவை. அருமை சகோ
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி!!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.