நாடுகளும் அதன் தலைநகரங்களும்.
உலகில் மொத்தம் 193 நாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிலர் இது தவறான கணக்கு என்றும், உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் உள்ளதாகவும் வாதிடுகின்றனர். இந்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.
அதற்கு காரணம் ஐக்கிய நாடுகள் சபையால் [United nations organisation] அங்கீகரிக்கப்படாத நாடுகள் என சில குட்டிநாடுகள் உள்ளன.
இதற்கு உதாரணமாக உலகின் சக்திவாய்ந்த மனிதருள் ஒருவரான "நித்தியானந்தா" சுவாமிகளைக் குறிப்பிடலாம். சுவாமிகள் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள "கைலாசா" போன்ற இன்னும் அங்கீகரிக்கப்படாத குட்டி நாடுகளால்தான் மேற்குறிப்பிட்ட குழப்பங்களே வருகின்றன.
Kailasa president with flag. |
இப்படியான "ஜில்ஜில் ஜல்சா" ("ஜில்ஜில் ஜல்சா" என்பது கைலாசா நாட்டின் தலைநகரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) நாடுகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு ஐக்கிய நாடுகள் சபையால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் என்று பார்த்தால் 193 நாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Open Parliament of Kailasa |
சரி, இப்போது நாம் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக உள்ள 193 நாடுகளைப்பற்றியே இங்கு பார்க்க இருக்கிறோம்.
வெறும் நாடுகளின் பெயர்களை மட்டும் பார்த்தால் போதுமா? அதன் தலைநகரத்தைப்பற்றியும் பார்க்க வேண்டாமா? வாருங்கள் அதையும் பார்த்துவிடுவோம்...
Countries and their Capitals.
நாடுகள் | Countries | தலைநகரம் | Capital |
---|---|---|---|
அங்கோலா | Angola | லுவாண்டா | Luvanda |
அசர்பைஜான் | Azerbaijan | பாகூ | Baku |
அமெரிக்கா | U.S.A | வாஷிங்டன் டி.சி | Washington D.C |
அயர்லாந்து | Ireland | டப்ளின் | Dublin |
அர்மீனியா | Armenia | ஏரவன் | Yereven |
அர்ஜென்டீனா | Arjentina | போனஸ் அயர்ஸ் | Buenos aires |
அல்பேனியா | Albania | டிரானா | Tirana |
அல்ஜீரியா | Algeria | அல்ஜீயர்ஸ் | Algiers |
அன்டோரா | Andorra | அன்டோரா லா வெல்லா | Andorra La Velle |
ஆண்டிகுவா - பார்புடா | Antigua and Barbuda | செயின்ட் ஜோன்ஸ் | Saint johns |
ஆப்கானிஸ்தான் | Afghanistan | காபூல் | Kabul |
ஆஸ்திரியா | Austria | வியன்னா | Vienne |
ஆஸ்திரேலியா | Australia | கான்பெர்ரா | Canberra |
இங்கிலாந்து | England | லண்டன் | London |
இத்தாலி | Italy | ரோம் | Rome |
இந்தியா | India | புதுடில்லி | New Delhi |
இந்தோனேசியா | Indonesia | ஜகார்த்தா | Jakartha |
ஈராக் | Iraq | பாக்தாத் | Baghdad |
ஈரான் | Iran | டெஹ்ரான் | Teheran |
இஸ்ரேல் | Israel | ஜெருசலேம் | Jerusalem |
ஈக்வடோரியல் கினியா | Equatorial Guinea | மலபோ | Malabo |
ஈக்வாடார் | Ecuador | க்யுடோ | Quito |
உக்ரைன் | Ukraine | கீவ் | Kive |
உகண்டா | Uganda | கம்பாலா | Kampala |
உருகுவே | Uruguay | மோண்டேவிடியோ | Montevodeo |
உஸ்பெகிஸ்தான் | Uzbekistan | தாஷ்கண்ட் | Tashkent |
எகிப்து | Egypt | கெய்ரோ | Cairo |
எத்தியோப்பியா | Ethiopia | அடிஸ் அபாபா | Addis Ababa |
எசுவாத்தினி | Eswatini | இம்பபான் | Mbabane |
எரித்ரியா | Eritrea | அஸ்மாரா | Asmara |
எல் சால்வடார் | El Salvador | சன் சால்வடார் | San Salvador |
எஸ்தோனியா | Estonia | டால்லின் | Tallin |
ஐக்கிய அரபுக் குடியரசுகள் | United Arab Emirates | அபுதாபி | Abudhabi |
ஐஸ்லாந்து | Iceland | ரெய்க்ஜாவிக் | Reykjqvik |
ஓமன் | Oman | மஸ்கட் | Muscut |
கத்தார் | Qatar | தோஹா | Doha |
கம்போடியா | Cambodia | போனெம் பென்க் | Phnom penh |
கமரோஸ் | Comoros | மொரோனி | Moroni |
கயானா | Guyana | ஜார்ஜ் டவுன் | Geroge Town |
கனடா | Canada | ஒட்டாவா | Ottawa |
கஸகஸ்தான் | Kazakhstan | நூர்-சுல்தான் | Nur-Sultan |
காங்கோ குடியரசு | Republic of the Congo | பிராசவில்லி | Brazzaville |
காங்கோ ஜனநாயக குடியரசு | DR Congo | கின்ஷாசா | Kinshasa |
காபோன் | Gabon | லிப்ரவில் | Libreville |
காம்பியா | Gambia | பஞ்சுல் | Banjul |
காமரூன் | Cameroon | யாவூண்டே | Yaounde |
கானா | Ghana | அக்ரா | Accra |
கியூபா | Cuba | ஹவானா | Havana |
கிர்கிஸ்தான் | Kyrgyzstan | பிஸ்ஹேக் | Biskek |
கிரிபாடி | Kiribati | தராவா | Tarawa |
நாடுகள் | Countries | தலைநகரம் | Capital |
---|---|---|---|
கிரீஸ் | Greece | ஏதென்ஸ் | Athens |
கிரெனடா | Grenada | செயின்ட் ஜார்ஜஸ் | Saint Geroges |
கிழக்கு திமோர் | Timor-Leste | டிலி | Dili |
கினியா | Guinea | கோனக்ரி | Conakry |
கினி பிசாவு | Guinea-Bissau | பிசாவு | Bissau |
குரோசியா | Croatia | சாகிரேப் | Zagreb |
குவைத் | Kuwait | குவைத் | Kuwait |
கௌதமாலா | Guatemala | கௌதமாலா சிட்டி | Guatemala City |
கென்யா | Kenya | நைரோபி | Nairobi |
கேப் வேர்ட் | Cape Verde | பிரய்யா | Praia |
கொலம்பியா | Colombia | பொகோடா | Bogota |
கோட் டிவார் - ஐவரி கோஸ்ட் | Cote d'lvoire - Ivory Coast | யாமூசூக்ரோ | Yamoussoukro |
கோஸ்டாரிகா | Costa Rica | சான் ஜோஸ் | San Jose |
சமோவா | Samoa | ஆப்பியா | Apia |
சவுதி அரேபியா | Saudi Arabia | ரியாத் | Riyadh |
சன்மரினோ | San Marino | சன்மரினோ | San Marino |
சாடோம் அண்ட் பிரின்சிப் | Sao Tome and Principe | சாடோம் | Sao Tome |
சாட் | Chad | ந்ஜமேனா | N'Djamena |
சாம்பியா | Zambia | லுசாகா | lusaka |
சாலமன் தீவுகள் | Solomon Islands | ஹோனியரா | Honiara |
சிங்கப்பூர் | Singapore | சிங்கப்பூர் | Singapore |
சியர்ரா லியோன் | Sierra Leone | பிரீ டவுன் | Free Town |
சிரியா | Syria | டமாஸ்கல் | Damascus |
சிலி | Chile | சாண்டியாகோ | Santiago |
சீனா | China | பெய்ஜிங் | Beijing |
சுரினாம் | Suriname | பரமரிபோ | Paramaribo |
சுவிட்சர்லாந்து | Switzerland | பெர்ன் | Bern |
சுவீடன் | Sweden | ஸ்டாக்ஹோம் | Stockholm |
சூடான் | Sudan | கார்டூம் | Khartoum |
செக்கியா | Czechia | பராகுவே | Prague |
செயின்ட் லூசியா | Saint Lucia | காஸ்ட்ரீஸ் | Castries |
செயின்ட்கிட்ஸ் நெவிஸ் | Saint Kitts Nevis | பெஸ்ஸடர் | Basseterre |
செயின்ட் வின்சென்ட் | St Vincent and Grenadines | கிங்ஸ்டவுன் | Kings Town |
செர்பியா | Serbia | பெல்கிரேட் | Belgrade |
செனகல் | Senegal | தாகர் | Dakar |
சீசெல்ஸ் | Seychelles | விக்டோரியா | Victoriya |
சைப்ரஸ் | Cyprus | நிகோசியா | Nicosia |
சோமாலியா | Somalia | மொகடிஷீ | Mogadishu |
டிரினிடாட்-டொபாகோ | Trinidad and Tobago | போர்ட் ஆஃப் ஸ்பெயின் | Port of Spain |
டென்மார்க் | Denmark | கோபன்ஹேகன் | Copenhagen |
டொமினிக்கன் குடியரசு | Dominican Republic | சான்ரோ டொமிங்கோ | Santo Domingo |
டொமினிகா | Dominica | ரோஸியு | Roseau |
டோகோ | Togo | லோம் | Lome |
டோங்கா | Tonga | நுகு அலோஃபா | Nuku'alofa |
தஜிகிஸ்தான் | Tajikistan | துஷான்பே | Dushanbe |
தாய்லாந்து | Thailand | பாங்காக் | Bangkok |
தான்சானியா | Tanzania | டூடுமா | Dodoma |
துர்க்மெனிஸ்தான் | Turkmenistan | அஷ்காபத் | Ashkhabad |
துருக்கி | Turkey | அங்காரா | Ankara |
துவாலு | Tuvalu | புனாஃபுதி | FunaFuti |
நாடுகள் | Countries | தலைநகரம் | Capital |
---|---|---|---|
துனிசியா | Tunisia | துனிஸ் | Tunis |
தெற்கு சூடான் | South Sudan | யூபா | Juba |
தென் ஆப்பிரிக்கா | South Africa | கேப் டவுன் | Cape Town |
தென் கொரியா | South Korea | சியோல் | Seoul |
நமீபியா | Namibia | வின்ட்ஹோக் | Windhoek |
நிகரகுவா | Nicaragua | மனாகுவா | Managua |
நியூசிலாந்து | New Zealand | வெல்லிங்டன் | Wellington |
நெதர்லாந்து | Netherlands | ஆம்ஸ்டர்டாம் | Amsterdam |
நவ்ரூ | Nauru | யாரென் | Yaren |
நேபால் | Nepal | காட்மாண்டு | Kathmandu |
நைஜர் | Niger | நியாமி | Niyamey |
நைஜீரியா | Nigeria | அபுஜா | Abuja |
நோர்வே | Norway | ஒஸ்லோ | Oslo |
பங்களாதேஷ் | Bangladesh | டாக்கா | Dhaka |
பராகுவே | Paraguay | அகன்சியான் | Aguncian |
பல்கேரியா | Bulgaria | சோஃபியா | Sofia |
பலாவ் | Palau | கோரோர் | Koror |
பனாமா | Panama | பனாமா நகர் | Panama City |
பஹ்ரைன் | Bahrain | மனாமா | Manama |
பஹாமாஸ் | Bahamas | நஸ்ஸாவ் | Nassau |
பாகிஸ்தான் | Pakistan | இஸ்லாமாபாத் | Islamabad |
பப்புவா நியூகினி | Papua Niugini | போர்ட் மோர்ஸ்பி | Port Moreshby |
பார்படோஸ் | Barbados | பிரிட்ஜ் டவுன் | Bridge Town |
புர்க்கினா பாசோ | Burkina Faso | வாகடூகு | Ouagadougou |
பிரான்ஸ் | France | பாரிஸ் | Paris |
பிரேசில் | Brazil | பிரேசிலியா | Brasillia |
பிலிப்பைன்ஸ் | Philippines | மணிலா | Manila |
பின்லாந்து | Finland | ஹெல்சிங்கி | Helsinki |
பிஜி | Fiji | சுவா | Suwa |
புருண்டி | Burundi | புஜீம்பரா | Bujumbura |
புருனை | Brunei | பண்டர் செரி பெகவன் | Bandar Seri Begawan |
பூட்டான் | Bhutan | திம்பு | Thimpu |
பெரு | Peru | லிமா | Lima |
பெல்ஜியம் | Belgium | பிரசெல்சு | Brussels |
பெலாரஸ் | Belarus | மின்ஸ்க் | Minsk |
பெலிஸ் | Belize | பெல்மோபான் | Belmopan |
பெனின் | Benin | போர்டோ நோவோ | Porto-Novo |
பொலிவியா | Bolivia | லாபாஸ் | Lapaz |
போட்ஸ்வானா | Botswana | கபோரோன் | Gaborne |
போர்த்துகல் | Portugal | லிஸ்பன் | Lisbon |
போலந்து | Poland | வார்ஸா | Warsaw |
போஸ்னியா-ஹெர்ஸிகோவினா | Bosnia and Herzegovina | சரஜீவோ | Sarajevo |
மங்கோலியா | Mangolia | உலன்பதார் | Ulan Bator |
மடகாஸ்கர் | Madagascar | அன்டானானாரிவோ | Antananarivo |
மத்திய ஆப்பிரிக்கா | Central African | பான்குய் | Bangui |
மலாவி | Malawi | லிலாங்வே | Lilongwe |
மலேசியா | Malaysia | கோலாலம்பூர் | Kula Lumpore |
மாசிடோனியா | North Macedonia | ஸ்கோப்ஜே | Skopeje |
மார்ஷல் தீவுகள் | Marshall Islands | மஜீரோ | Majuro |
மாரிடானியா | Mauritania | நவாக்சோட் | Nouak Chott |
நாடுகள் | Countries | தலைநகரம் | Capital |
---|---|---|---|
மால்டா | Malta | வலேட்டா | Valetta |
மால்டோவா | Moldova | சிசிநவ் | Chisinau |
மாலத்தீவுகள் | Maldives | மாலே | Male |
மாலி | Mali | பமாகோ | Bamako |
மியான்மர் | Myanmar | யங்கோன் | Yangon |
மெக்ஸிகோ | Mexico | மெக்ஸிகோ நகர் | Mexico city |
மைக்குரோனீசியா | Micronesia | பாலிகிர் | Palikir |
மொசாம்பிக் | Mozambique | மொபுடோ | Maputo |
மொண்டெனேகுரோ | Montenegro | பத்கரீத்சா | Podgorica |
மொரிசியஸ் | Mauritius | போர்ட் லூயிஸ் | Port Louis |
மொரோக்கோ | Morocco | ரபாட் | Rabat |
மொனாக்கோ | Monaco | மொனாக்கோ | Monaco |
யேமன் | Yemen | சனா | Sana |
ரஷ்யா | Russia | மாஸ்கோ | Moscow |
ருமேனியா | Romania | புகாரெஸ்ட் | Bucharest |
ருவாண்டா | Rwanda | கிகாலி | Kigali |
லக்ஸம்பார்க் | Luxenberg | லக்ஸம்பார்க் | Luxenberg |
லாட்வியா | Latvia | ரிகா | Riga |
லாவோஸ் | Laos | வியாணன்டைன் | Vientiane |
லிச்டென்ஸ்டெயின் | Liechtenstein | வடூஸ் | Vaduz |
லிதுவேனியா | Lithuania | வில்னியஸ் | Vilnius |
லிபியா | Libya | திரிபோலி | Tripoli |
லெசோதா | Lesotho | மசெரு | Maseru |
லெபனான் | Lebanon | பெய்ரூட் | Beirut |
லைபீரியா | Liberia | மன்ரோவியா | Manorovia |
வட கொரியா | North Korea | பியோங்யாங் | Pyongyang |
வனுவது | Vanuatu | விலா | Vila |
வியட்னாம் | Vietnam | ஹானோய் | Hanoi |
வெனிசுலா | Venezuela | கராகஸ் | Caracas |
ஜப்பான் | Japan | டோக்கியோ | Tokyo |
ஜமைக்கா | Jamaica | கிங்ஸ்டன் | Kington |
ஜார்ஜியா | Georgia | திபிலிசி | Tbillisi |
ஜிபூட்டி | Djibouti | ஜிபூட்டி | Djibouti |
ஜிம்பாவே | Zimbabwe | ஹராரே | Harare |
ஜெர்மனி | Germany | பெர்லின் | Berlin |
ஜோர்டான் | Jordan | அம்மான் | Amman |
ஹங்கேரி | Hungary | புட்டாபெஸ்ட் | Budabest |
ஹெய்டி | Haiti | போர்ட்-அவு-பிரின்ஸ் | Port-au-prince |
ஹோண்டுராஸ் | Honduras | டெகுசிகல்பா | Tegueigalpa |
ஸ்பெயின் | Spain | மாட்ரிட் | Madrid |
ஸ்ரீலங்கா | Sri Lanka | கொழும்பு | Colombo |
ஸ்லோவாகியா | Slovakia | பிராட்டிஸ்லாவா | Bratislava |
ஸ்லோவேனியா | Slovenia | லுபில்ஜானா | Ljubljana |
- | - | - | - |
7 கருத்துகள்
தொகுப்பு அருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குசூப்பர் சிவா சகோ...ஓரளவுக்கு இந்தத் தலைநகரங்கள் ஒருகாலத்தில் ரொம்பவே மனப்பாடமாக இருந்தது எல்லாம் வேலைக்கானத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொண்ட போது!! இப்பவும் மனதில் இருக்கு. ஆனால் இந்த ஸ்லொவாகியா, ஸ்லோவேனியா இதுக்கெல்லாம் மனசுல நிக்கவே மாட்டேங்குது!
பதிலளிநீக்குஅது சரி அதென்ன ஜில் ஜில் ஜல்ஸா!! ஹாஹாஹா நித்யானந்தாவிற்கு நீங்களே உருவாக்கிய தலைநகரமா!! ஜல்ஸா ன்ற வார்த்தைய நானும் மகனும் அப்பப்ப பயன்படுத்துவோமாக்கும்!!!!
கீதா
தங்களின் கருத்துகளுக்கு நன்றி சகோதரி...
நீக்குபயனுள்ள தகவல்கள் நானும் சுற்றுலா செல்வதற்கு வழி கிடைத்து விட்டது நன்றி.
பதிலளிநீக்குகருத்துகளுக்கு நன்றி நண்பரே!!! இன்ப சுற்றுலா செல்வதற்கு வழி கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்... அனால் வழிதவறி "உக்ரைன்" பக்கம் சென்றுவிடாதீர்கள்... அங்கு வெடிச்சத்தம் ரொம்பவே உக்கிரமாக இருக்கிறதாம்... இந்திய அரசு அங்குள்ள மாணவர்களை மட்டுமே மீட்பதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது.. அதிலும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது "மோடி" அரசு என்பதால் தங்களை கண்டுகொள்வார்களா என்று தெரியவில்லை.. எனவே மிகவும் கவனமாக இருக்கவும்.
நீக்குதங்களின் சுற்றுலா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ஏற்கனவே எனக்கும், மோடிக்கும் ஆகாது இதில் வயிற்றில் புலி"யை கரைக்கிறீர்கள்.
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.