விலங்குகளின் நகரும் வேகமும், ஆயுள் காலமும்.
Vilankukalin vekam ayul kalam.
இவ்வுலகில் மனிதன் உட்பட அனைத்து வகையான உயிரினங்களுமே தங்களை ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முதலில் தங்களுடைய விவேகத்தையே பயன்படுத்துகின்றன. ஆனால் தாவரங்களை தவிர்த்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்கின்ற விலங்கினங்கள் விவேகத்தை மட்டுமே நம்பியிருந்தால் போதாது.
விவேகத்துடன் வேகத்தையும் காண்பிக்க வேண்டியது அவசியம். அப்படியென்றால்தான் நெருங்கிவரும் ஆபத்திலிருந்து எளிதாக உயிர் தப்பிக்க முடியும்.
அப்படி வேகத்தை பயன்படுத்தி உயிர்தப்பிக்கும் சில விலங்குகளின் வேகத்தையும். உயிர்தப்பித்தபின் அவைகளின் அதிகபட்ச ஆயுள்காலம் பற்றியும் இந்த பதிவின்மூலம் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
zebra. |
Moving Speed and Lifespan.
தமிழ் பெயர்கள். | English Name. | வேகம்/மணிக்கு. | ஆயுட்காலம்/ஆண்டுகள். |
---|---|---|---|
சிங்கம் | Lion | 50 மைல் | 14 |
புலி | Tiger | 40 மைல் | 19 |
சிறுத்தைப்புலி | Cheetah | 70 மைல் | 23 |
கழுதைப்புலி | Hyena | 37 மைல் | 12 |
கழுதை | Donkey | 15 மைல் | 35 |
யானை | Elephant | 20 மைல் | 47 |
பூனை | Cat | 30 மைல் | 13 |
அணில் | Squirrel | 12 மைல் | 6 |
மான் | Deer | 32 மைல் | 17 |
கருப்பு மான் | Antelope | 61 மைல் | 20 |
அரேபிய ஓரிக்ஸ் மான் | Arabian oryx | 50 மைல் | 20 |
கலைமான் | Blackbuck | 50 மைல் | 12 |
கட மான் (மிளா) | Sambar deer | 45 மைல் | 10 |
வெள்ளைவால் மான் | White-tailed deer | 30 மைல் | 10 |
ஸ்பிரிங்போக் | Springbok | 55 மைல் | - |
ஒட்டகம் | Camels | 40 மைல் | 20 |
ஒட்டகச்சிவிங்கி | Giraffe | 32 மைல் | 10 |
வேட்டை நாய் | Hunting dog | 45 மைல் | 16 |
ஓநாய் | Wolf | 45 மைல் | 12 |
தமிழ் பெயர்கள். | English Name. | வேகம்/மணிக்கு. | ஆயுட்காலம்/ஆண்டுகள். |
---|---|---|---|
குள்ளநரி | Jackal | 38 மைல் | 12 |
சாம்பல் நரி | Gray Fox | 40 மைல் | 12 |
பன்றி | Pig | 11 மைல் | 14 |
கரடி | Bear | 30 மைல் | 35 |
கருங்கரடி | Black bear | 35 மைல் | 35 |
எருமை | Buffalo | 34 மைல் | 20 |
முயல் | Rabbit | 25 மைல் | 5 |
காண்டாமிருகம் | Rhinoceros | 32 மைல் | 27 |
குரங்கு | Monkey | 34 மைல் | 7 |
மனிதக்குரங்கு | Orangutan | 25 மைல் | 30 |
கொரில்லா | Gorilla | 25 மைல் | 17 |
குதிரை | Horse | 45 மைல் | 27 |
கங்காரு | Kangaroo | 44 மைல் | 19 |
ஆடு | Goat | 10 மைல் | 13 |
மாடு | Cattle | 25 மைல் | 19 |
சிவிங்கிப்புலி (வேங்கை) | Cheetah | 75 மைல் | - |
வரிக்குதிரை | Zebra | 40 மைல் | 30 |
குழிமுயல் | Hare | 45 மைல் | - |
காட்டு கழுதை | Wild Ass | 40 மைல் | 40 |
டால்பின் | Dolphin | 40 மைல் | 20 |
6 கருத்துகள்
தகவல் அருமை... பலவற்றை அறிந்து கொண்டேன்...
பதிலளிநீக்குநன்றி!!..
நீக்குநல்ல தகவல்கள். ஓரளவு தெரிந்ததும்.
பதிலளிநீக்குமற்றொன்றும், நம் மூச்சு நிதானமாக இருக்க இருக்க ஆயுட்காலம் கூடுதல் என்றும் உண்டே. ஆமை, முதலை க்கு எல்லாம் ஆயுட்காலம் அதிக நாட்கள். அதனால்தானே மனிதர்களுக்கும் சொல்லப்படுவது, நாம் மூச்சுப் பயிற்சி செய்துமூச்சை நிதானப்படுத்துதல் நல்லது என்று.
கீதா
ஆம்... மூச்சுப்பயிற்சியின் அடிப்படையே மூச்சை கட்டுப்படுத்தி அதன்மூலம் மனதின் எண்ணஓட்டங்களை நிதானமாக்கி ஆயுளையும் அதிகரித்துக்கொள்வதுதான்!!!.
நீக்குதகவல்கள் அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி!!..
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.