சிந்தனை சிறகுகள்.
Sinthanai Siragugal.
- துன்பத்தைக்கண்டு சலித்து நிற்பதைவிட சிலிர்த்து நிற்பதே உன்னை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும்.
- உன் விதியை நீயே எழுது. இல்லையென்றால் நீ காலத்திற்கும் அழும்படி மற்றவர்கள் எழுதிவிடுவார்கள்.
- உன்னையே நீ திறம்பட செதுக்கு... இல்லையேல் அந்த கைகள் இரண்டும்தான் உனக்கு எதுக்கு???.
- இன்றே உளிகொண்டு உன்னை நீ செதுக்கினால்... நாளை பழிகொண்டு அலைவதை விலக்கலாம்.
- பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்குமே உன்னை தெரியாது.
- உழைப்பவனின் காலம் பொன் ஆகிறது. உழைக்ககாதவனின் பொன் காலமாகிவிடுகிறது.
- செவிக்கு உணவில்லையெனில் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
- கண் உள்ளவர்களை காட்டிலும் கண் பார்வை இல்லாதவர்கள் குறைவாகவே தடுக்கிவிழுகிறார்கள்.
- அசத்தியம் ஆடை அணிந்து செல்கிறது. ஆனால் சத்தியம் நிர்வாணமாகவே செல்கிறது.
- சிறகு இல்லா பறவை போல் உறவு இல்லா வாழ்வும் கெடும்.
- ஒன்றும் தெரியாதவனுக்கு ஒரு சந்தேகமும் வருவதில்லை.
- அழகாக மலர்வது விரைவாகவே வாடி விடும்.
- சேவல் மவுனமாகவும், கோழி கூவும்படியாகவும் எந்த வீடு உள்ளதோ அது துன்பம் நிறைந்தது.
- மலர்ந்த முகம் உணவு பரிமாறினால் சாதாரண விருந்துகூட அறுசுவை விருந்தாக மாறிவிடும்.
- வாய்மை வாசல்படியிலேயே நின்றுவிடுகிறது. ஆனால் பொய்மையோ இண்டு இடுக்குவழியாக உள்ளே நுழைந்துவிடுகிறது.
- வெற்றியடைய வேண்டுமெனில் பரபரப்பு தேவையில்லை, சுறுசுறுப்பு மட்டுமே தேவை.
- படகு கரைசேர துடுப்பு தேவை, பட்சணம் கரைசேர அடுப்பு தேவை, ஆனால் நீ கரைசேர வேண்டுமெனில் கடின உழைப்பு மட்டுமே தேவை.
- சாதிக்க நினைப்பவனே இங்கு அதிகம் சோதிக்கப்படுகிறான், காரியமாற்றுபவனே அதிகம் காயப்படுகிறான்.
- நீங்களும் வாழுங்கள் பிறரையும் வாழவையுங்கள். ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதால் அதற்கு இழப்பு என்று எதுவும் இல்லை.
- சோம்பல் என்பது வேலை செய்வதைவிட அதிக களைப்பை தரும்.
- மணிக்கணக்கில் பிறருக்கு போதனை செய்வதைவிட சிலகணநேரம் பிறரின் வேதனை ஆற்றுவது சிறப்பு.
- மதியாதார் தலைவாசல் மிதியாதே.
- தவறுக்கு வருந்து, அதைவிட தவறே செய்யாமலிருப்பதே அருமருந்து.
- மனம் விரும்புவதையெல்லாம் பேசுபவன், மனம் வெறுப்பதையெல்லாம் கேட்க நேரிடும்.
- ஆயிரம் உபதேசங்களைவிட ஒரு அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுத்தரும்.
- ரத்தத்தில் கைகளை நனைத்தவன். தன்னுடைய கண்ணீரால்தான் அதை கழுவ வேண்டும்.
- ஒரே ஒரு துறை சார்ந்த புத்தகம் படித்தவனிடமிருந்து கடவுள் நம்மை காப்பாராக...
- ஒருமனிதன் அறிவாளியா இல்லையா என்பதனை அறிய அவன் தரும் பதில்களை பார்க்காதே அவன் தொடுக்கும் கேள்விகளை பார்.
- கால்களால் பறவைகள் வலைகளில் சிக்கிக்கொள்கின்றன. ஆனால் மனிதனோ நாவினால் (க)வலைகளில் சிக்கிக்கொள்கிறான்.
- ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்துகொண்டால் பின் அவனைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்வது கடினமன்று.
- தோல்வி என்பது கொஞ்சம் தள்ளிபோடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான். இதில் கவலைகொள்வதற்கு எதுவுமில்லை.
- ஒவ்வொருவரும் உலகத்தைத்தான் மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
- எப்போதும் அச்சத்தில் ஒளிந்து கொள்வதைவிட ஆபத்தை ஒருதடவை நேருக்குநேர் சந்திப்பது மேல்.
- அடங்கி போவதற்கு முன்னால் ஒரு தடவையாவது அடக்கிப் பார்த்துவிடு... முடிவாக உன் கால்கள் முடங்கியே போனாலும்கூட...
- மரணத்தை பற்றி நீ கவலைப்பட வேண்டியதே இல்லை. ஏனெனில் நீ இருக்கும்வரை அது உன்னிடம் வரப்போவதில்லை, அது வந்தபிறகு கவலைபட நீ இருக்கப்போவதில்லை. பின் ஏன் இந்த கவலை.
- முட்டாளின் முழு ஆயுளும், அறிவாளியின் ஒருநாள் ஆயுளுக்கு சமம்.
- எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டான்.
- மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அனேகரை விலைக்கு வாங்கும்.
- ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இருக்கிறோம்.
- ஊக்குவிக்க ஆளிருத்தல் ஊக்குவிக்கும் ஆள்கூட தேக்குவிற்பான்.
- கரட்டுநிலத்தில் விவசாயம் செய்ய பிராத்தனைகள் தேவையில்லை. நல்ல கடப்பாறை இருந்தால் போதும்.
- ஓநாய்கள் உன்னை விருந்துக்கு அழைத்தால் உன் நாயும் உன் கூடவே இருக்கும்படி பார்த்துக்கொள்.
- வாழ்க்கை என்பது ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு ஊசலாடுவது அல்ல. அது ஆழ்கடலில் புயலுக்கு நடுவே படகை செலுத்துவது போன்றது. எனவே மனஉறுதியும் திறமையும் உள்ளவன் மட்டுமே வாழ்வில் வெற்றியடைகிறான்.
- குஞ்சுகளே வாத்துகளை புல்வெளிக்கு கூட்டிச்செல்கின்றன.
- புறாவின் இளமையை காட்டிலும் கழுகின் முதுமையே வலிமை வாய்ந்தது.
- செல்வம் என்பது வருமானத்தை பொறுத்தது அல்ல. நிர்வாக திறமையை பொறுத்தது.
- மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சிலநேரங்களில் வெற்றியை கொண்டுவருவதுண்டு.
- நீங்கள் முடியவே முடியாது என்று சொல்வதையெல்லாம் இந்தஉலகில் பிறிதொறு இடத்தில் யரோ ஒருவர் திறம்பட செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
- இருக்கின்ற ஜாதிகளை ஒழிக்க பாடுபடும் அதேவேளையில் படித்த ஜாதி, படிக்காத ஜாதி என புதிதாக இரு ஜாதிகள் உருவாகிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.
- நாடு முன்னேற வேண்டுமென்றால் முதலில் வறுமையும், அறியாமையும் நீங்க வேண்டும்.
- செல்வந்தன் ஒருவன் சுவர்கத்திற்கு நுழைவதை காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது.
- வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவைபோன்றவன் எனவே சின்ன வீடாக இருந்தாலும் அது சொந்த வீடாக இருக்க வேண்டும்.
- சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம். அறுவடை மோசமானால் 1 வருடம் நஷ்டம். திருமணம் மோசமானால் உன் ஆயுள் அம்புட்டும் நஷ்டம்.
- நானும் இளவரசன் நீயும் இளவரசன் என்றால் யார்தான் இந்த கழுதைகளை மேய்ப்பது?
- உன்னால் நடக்கமுடியுமென்றால் ஆடவும் முடியும், உன்னால் பேச முடியுமென்றால் பாடவும் முடியும்.
- அது ஒரு காளை என்கிறேன்... நீயோ பால்கறந்து காட்டு அப்போதுதான் நம்புவேன் எங்கிறாய்.
- பூனைக்கு தாராளமாக உணவளித்தால் எலிகள் வந்து உன்னிடம் சொந்தம் கொண்டாடும்.
- நோய் வரும் அளவிற்கு தின்பவர்கள் நோய் நீங்கும் வரை உண்ணா நோன்பு இருக்கவேண்டி வரும் .
- பிறரின் குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள். தங்களுடைய குறைகளை குணப்படுத்த முடியாமல் தவிப்பார்கள்.
- மரத்தடியில் ஆளில்லாதபோதுதான் இறைவன் தேங்காயை விழ செய்கிறான்.
💫💫💫💫💫💫💫
2 கருத்துகள்
ஆகா...! தொகுப்பு மிகவும் சிறப்பு...
பதிலளிநீக்குநன்றிகள் பல...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.