வாழைப்பழம்.
வாருங்கள் மாணவ செல்வங்களே!... இனி நாம் அவ்வப்போது உங்கள் அறிவுக்கு வளம் சேர்க்கின்ற "சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்"ன்னு சொல்லப்படுகிற சிலவகையான எளிமையான அறிவியல் பரிசோதனைகளை சொல்லித்தர போகிறோம். அத அப்படியே செஞ்சுபாத்து உங்க அறிவை இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்த்துக்கோங்க... சரியா !!...
இது நம்மோட முதல் "எக்ஸ்பிரிமெண்ட்" என்கிறதுனால அங்க இங்க அலையாம சுலபமாக உங்கள் இடத்திலேயே கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை வைத்தே முதல் பரிசோதனையை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கோம்...
பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளும் அளவிற்கு வாழைப்பழத்தில் அப்படி என்ன பேஷாலிட்டி இருக்குதுன்னு கேக்குறீங்களா?
இருக்குங்க... எவ்வளவோ இருக்கு...
Banana - Science Experiments.
நீங்கெல்லாம் வாழைப்பழத்தை கையில தொட்டு பாத்திருப்பீங்க. மொள்ளமா தோலை உருச்சி வாயில வச்சு பாத்திருப்பீங்க. ஏன் பல நேரங்களில் அதிலிருந்து வெளிப்படும் அந்த ரம்மியம் நிறைந்த இனிமையான நறுமணத்தை ஆசையாக முகர்ந்துகூட பாத்திருப்பீங்க... ஆனா எப்போதாவது அதனுடைய ரம்மியமான அந்த நறுமணத்திற்கான காரணம் என்ன என யோசிச்சு பார்த்திருக்கீங்களா??...
இதுவரையில் அதுபற்றி யோசிச்சதுகூட இல்லையா... அப்போ இப்போ தெரிச்சுக்கோங்க..
"எத்திலீன்" (Ethylene) வாயு கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லேனா அதையும் இப்போ தெரிஞ்சுக்கோங்க... இது ஒரு நிறமற்ற வாயு. எளிதில் தீப்பற்றி எரியக்கூடியது. கூடவே மென்மையான இனிய நறுமணமும் கொண்டது. வாழைப்பழத்தை கையில புடிச்சு மூக்கு பக்கத்துல கொண்டு போனீங்கன்னா மென்மையா ஒரு வாசம் வரும் பாருங்க... அது இந்த எத்திலீன் வாயுதானுங்க...
எல்லா பழங்களிலும்தான் வாசனை வருது... இத மட்டும் எத்திலீன் வாசம்ன்னு நாங்க எப்படி நம்புறதுன்னு கேக்குறீங்களா?
உங்க டவுட்டும் நியாயம்தானுங்க... உங்க சந்தேகத்தை கிளீயர் பண்ணுறதுக்குத்தான் இந்த வாழைப்பழத்தை வச்சு இப்போ ஒரு "சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்" செய்து பார்க்கப் போறோம்...
இந்த எத்திலீன் வாயுவுக்கு இன்னுமொரு சிறப்பு குணமும் இருக்குங்க. அது இன்னான்னா.. இது ஒரு தாவர நொதியாக செயல்படுவதால் காய்களை விரைவாக கனியாக மாற்றும் திறன் இதற்கு உள்ளது.
அதாவது ஒரு கலனில் பழுக்காத காய்களை வைத்து அதற்குள் இந்த எத்தலீன் வாயுவை நிரப்பி மூடி வைத்தீர்கள் என்றால் அந்த காய்கள் பிற காய்களைவிட மிக விரைவாக பழுக்க ஆரம்பித்துவிடும். எத்தலீனுக்குள்ள இந்த சிறப்பை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் இப்போ உங்களிடமுள்ள வாழைப்பழமானது எத்திலீன் வாயுவை உற்பத்தி செய்கிறதா... இல்லையா... என்பதனைப் பரிசோதிக்கப்போகிறோம்.
வாருங்கள் பரிசோதனையை ஆரம்பிக்கலாம்... ஸ்டார்ட் மியூசிக்... 🎷🎸🎻 🎼 🎺 🎹🎶🎵♬♫♪♩
இப்போ இந்த எக்ஸ்பிரிமெண்ட் - ஐ செஞ்சுபார்க்க உங்களிடமிருக்கும் அந்த ஒரே ஒரு வாழைப்பழத்துடன் கூடவே இரண்டு "தக்காளி காய்"களும் கூட தேவைப்படலாம்.
இப்போ உங்களிடம் இரண்டு "குண்டு தக்காளி" இருக்குதுன்னு வச்சுக்கோங்க... (இரண்டு "குண்டு தக்காளி"ன்னு சொன்னவுடனேயே நீங்களாகவே எதையாவது கற்பனைபண்ணி தொலைக்காதுங்கோ... நாம சமையலுக்கு பயன்படுத்துகிறோமில்லையா "தக்காளி பழம்"!!.. அந்த தக்காளி பழத்தைத்தான் சொல்லுறேனுங்கோ!...😉😊...).
உங்களிடம் இருக்கும் அந்த ரெண்டு குண்டு தக்காளிகளும் இன்னும் பழுக்காமல் காயாகவே இருக்குதுன்னு வச்சுக்கோங்க... தக்காளி காயாக இருக்கறதுனால அது உங்களுக்கோ அல்லது மத்தவங்களுக்கோ எந்த விதத்திலேயும் பயன்படப் போறது இல்லையல்லவா?...
இப்போ யாருக்கும் பயன்படாமல் இருக்குற அந்த இரண்டு பெங்களூரு தக்காளி காய்களை உங்களிடம் இருக்கும் அந்த ஒரே ஒரு சிங்கிள் வாழைப்பழத்தைக் கொண்டு எப்படி பல்லு படாமல் பழுக்க வச்சு பயன்படுத்துறதுன்னுதான் இப்போ இந்த எக்ஸ்பிரிமெண்ட்டுல பார்க்கப்போறோம்.
இந்த எக்ஸ்பிரிமெண்ட்ட செஞ்சுப்பாக்க உங்களுக்கு தேவை ஒரு இரண்டு பழுக்காத "தக்காளி காய்"... அப்புறமா பழுத்த "வாழைப்பழம்" ஒன்று... இவைகளுடன் "பேப்பர் பேக்" இரண்டு தேவை.
இப்போ உங்களிடம் இரண்டு பழுக்காத பெங்களூரு தக்காளி காய்களும், ஒரு பழுத்த "ரசகதலி" வாழைப்பழமும் இருக்குதில்லையா?... 😁😃😋 (அது என்ன மறுபடியும் நமட்டு சிரிப்பு... மனச அங்கிட்டு இங்கிட்டு அலைபாய விடாம பொத்திகிட்டு எக்ஸ்பிரிமெண்ட்ல மட்டும் கவனத்தை வையுங்கோ) இதனுடன் கூடவே இரண்டு காகிதப்பையையும் எடுத்துக்கிட்டீங்கதானே.
சரி... இனி நாம எக்ஸ்பிரிமெண்ட்ட ஆரம்பிக்கலாம்...
உங்களிடமுள்ள இன்னும் பழுக்காத அந்த இரண்டு தக்காளி பழங்களை ஸாரி ... தக்காளி காய்களை கையில எடுத்துக்கோங்க. அதில் ஒரு காயை முதல் காகித பையில் போடுங்க... மற்றொரு காயை இரண்டாவது காகித பையில் போடுங்க...
இப்போ உங்களிடம் உள்ள பழுத்த அந்த ஒரே ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கோங்க. அதை முதல் பையில் போடுங்க...
இனி இரண்டு பைகளையும் காத்து கருப்பு மட்டுமல்லாமல் ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு, நல்ல கண்ணு, நொள்ள கண்ணு இப்படி எந்த கண்ணும் படாம அப்படியே கமுக்கமா மூடி வச்சுக்கோங்க.
இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது என்னென்னா... அந்த இரண்டாவது பைக்குள்ள தக்காளி காய் மட்டுமே உள்ளது என்பதாலும், முக்கியமா "ரசகதலி வாழைப்பழம்" இல்லைங்கிறதால காத்து கருப்பு மட்டுமல்லாமல் நல்ல கண்ணு, நொள்ள கண்ணு என்று எந்த கண்ணும் நோட்டம் விடுறதுக்கு வாய்ப்பில்லை என்றாலும்கூட நம்மோட எக்ஸ்பிரிமெண்ட் ரிசல்ட் சக்ஸஸா வரணும் என்கிறதுனால முதல் பையை போலவே இதையும் மூடியே வையுங்க...
அவ்ளோதாங்க... ரொம்ப சிம்பிள்...
இனி இரண்டு பைகளையும் ஓரமா ஒரு பக்கம் வச்சுக்கிட்டு ராத்திரி நிம்மதியா படுத்து தூங்குங்க... இனி மீதியை நாளை காலை தூங்கி எழுந்திரிச்ச பின்னாடி பாத்துக்கலாம்.
கொர் ... கொர்ர்ர்....
...💤💤💤.....கொர்ர்ர்ர்ர்...
கொக்கரக்கோ கோ...
கோழி கூவிடுச்சா... பொழுதும் விடிஞ்சுடுச்சா... அவசரப்படாதுங்க... கண்ணை கசக்கிவிட்டுகிட்டு,... கூடவே வேணுமின்னா ஒரு கொட்டாவியும் விட்டுக்கிட்டே மொள்ளமா எழுந்திரிங்க...
ஒவ்வொருநாளும் "கொக்கரக்கோ" சத்தம் கேட்டு தூங்கி எழுந்தவுடன் "பை" ஐ மெதுவா பிரிச்சு நோட்டம் விடுங்க...
பெரும்பாலும் இரண்டாவது நாள் அதிகாலையில்... நீங்கள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டு போவீங்க...
உண்மைதாங்க... ரெண்டு பையிலேயும் உள்ள தக்காளியை பாத்தீங்கண்ணா... அட வக்காளி.. ஒங்க கண்ணை உங்களாலேயே நம்ப முடியாதுன்னா பாத்துக்கோங்களேன்!!...
ஹைய்யோ... ஆமாங்க, அந்த வாழைப்பழம் இருக்குற பையிலுள்ள அந்த மொழு மொழு பெங்களூரு தக்காளி மட்டும் நல்ல அழகா... சிவப்பா... பழுத்து இருக்கும்.
வாழைப்பழம் இல்லாத பையிலுள்ள தக்காளி இன்னும் பழுக்காம வெறும் காயாகவே இருக்கும்...
இதிலிருந்து இன்னா தெரியுது ஒங்களுக்கு?...
அந்த ஒரே ஒரு "ரசகதலி" வாழைப்பழம் மட்டும் பிள்ளையாண்டான் உங்களிடம் இல்லேன்னு வச்சிக்கோங்க... உங்ககிட்ட பெங்களூரு தக்காளி இரண்டு இருந்தும்கூட அது எந்த விதத்திலேயும் உங்களுக்கு பயன்பட போறதில்லைன்னு நன்றாகவே தெரியுதில்லீயோ...😋...
சரி இனி மேட்டருக்கு வருவோம்... அதாவது எத்திலீன் மேட்டருக்கு....
இனி இந்த வாழைப்பழம் எப்படி அந்த பெங்களூரு தக்காளிகளை பிஞ்சிலேயே பழுக்க வைக்குதுன்னு பார்ப்போமா...
இதற்கு நாம் ஆரம்பத்தில் சொன்னதுபோல "எத்திலீன்" வாயுதாங்க காரணம்.
அதாவது உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் வாழைப்பழமானது அது எந்த வெரைட்டி வாழைப்பழமாக இருந்தாலும்கூட பழுக்க ஆரம்பித்தவுடன் தூய்மையான சற்றே இனிய மணம்கொண்ட "எத்திலீன்" என்னும் வாயுவை வெளியிட தொடங்கிவிடுகின்றன.
இந்த எத்திலீன் வாயுவின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆரம்பத்தில் சொன்னதுபோல இது ஒரு நிறமற்ற வாயு. எளிதில் தீப்பற்றி எரியக்கூடியது. கூடவே மென்மையான இனிய நறுமணமும் கொண்டது.
பழுக்காத காய்களாக இருந்தாலும்கூட இந்த எத்திலீன் வாயுவானது அதன் மூலக்கூறுகளில் நொதித்தல் தன்மையை ஏற்படுத்தி மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதின்மூலம் காய்களுக்கு மென்மையையும், இனிப்புத் தன்மையையும் கொடுத்து பழுக்கவைத்துவிடுகிறது.
இப்போது இந்த "சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்" மூலம் வாழைப்பழம் எத்திலீன் வாயுவை வெளிவிடுகிறது என்பதனை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறதல்லவா...
இப்போது உங்கள் வீட்டில் தனியாக ஒரு அறையில் நன்கு பழுத்த வாழைப்பழ தார் அதாவது வாழைப்பழ குலையை கட்டி தொங்க விட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் நிறைய பழங்கள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். குறைந்தது 1 வாரத்திற்கு தேவையான பழங்கள் அதில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
இப்போது சிக்கல் என்னவென்றால் உங்களிடம் மேலும் ஒரு பழுக்காத காய்களை கொண்ட ஒரு வாழைக்குலையும் (வழை தார்) உள்ளதாக வைத்துக்கொள்வோம்.
ஏற்கனவே உள்ள பழுத்த குலையில் உள்ள பழங்களே உங்களுக்கு 1 வாரத்திற்கு வருமென்பதால் இந்த காயானது நான்கைந்து நாட்கள் கழித்து மெதுவாக பழுத்தால் போதும் என்று நீங்கள் விரும்பினால் தயவு செய்து அதனை வேறு ஒரு தனி அறையில் தனியாக கட்டி தொங்க விடுங்கள்....
அதைவிடுத்து ஒரே அறையில் கட்டி தொங்கவிட்டீர்கள் என்றால் ஏற்கனவே பழுத்த பழத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயுவானது அந்த அறை முழுக்க நிரம்பியிருக்குமாதலால் இந்த பழுக்காத காய்களைக்கொண்ட வாழை குலையையும் உங்களுக்கு தேவைப்படும் நாளுக்கு முன்னதாக விரைவாகவே பழுக்கவைத்து உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.
அதுமட்டுமல்ல, சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்ற காய்கறிகளை வாழைப்பழம் வைத்திருக்கும் அறையிலிருந்து விலக்கியே வைக்கவேண்டும். ஏனென்றால் வாழைப்பழத்திலிருந்து வெளிப்படும் எத்தலீன் வாயுக்களால் இந்த காய்கறிகளும் விரைவாக பழுக்க ஆரம்பித்துவிடுமாதலால் அவியல், பொரியல், துவையல் வைப்பதற்கு பதிலாக "பழ ஜூஸ்" போடும் நிலை உருவாகிவிடும்.
உங்களிடமிருக்கும் "அந்த" இரண்டு பெங்களூரு தக்காளிகளையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்... ஞாபகம் வச்சுக்கோங்க... தக்காளி பத்திரம்... 😉😂.
💢💢💢💢💢
இந்த வாழைப்பழ எக்ஸ்பிரிமெண்ட் உங்களுக்கு பயனுடையதாக இருந்ததா!!... அப்படீன்னா இதேபோன்று மீண்டுமொரு "சயின்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்"ல் சந்திபோம்... பை...
9 கருத்துகள்
சோதனை அருமை...
பதிலளிநீக்குஉங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி!!!
நீக்குசூப்பர் சகோ இன்னும் வருகிறோம்
பதிலளிநீக்குகீதா
நன்றி !!!
நீக்குசகோ தக்காளி காயாக இருந்தால் ஏன் பயன்படாது!! இருக்கவே இருக்கு தக்காளிக்காய் சாம்பார், கூட்டு, பச்சடி என்று.
பதிலளிநீக்குகீதா
இன்னாது... தக்காளிக்"காய்" சாம்பாரா!!😒😒.. அப்புறம் இது போதாதென்று கூட்டு, பச்சடி... 😡😱 ம்.. ம்ம்... 😩
நீக்குஇதில் "தக்காளிக்காய் ரசம்", "தக்காளிக்காய் மோர்" அப்புறம் கடைசியா "தக்காளிக்காய் பாயசம்" இந்த மூன்றும் "மிஸ்ஸிங்" மாதிரி தெரியுதே சகோதரி?... கொஞ்சம் நல்லா பாத்து சொல்லுங்க...
நல்ல தகவல்கள் சகோ. இனி காய்கள் வைக்கும் பகுதியில் வாழைப்பழங்களை வைக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நோட் செய்துகொண்டேன் சகோ.
பதிலளிநீக்குகீதா
நன்றி !! சகோதரி...
நீக்குReal dealers will take your bets through a live video feed. Spin Casino, or what we formerly knew as Spin Palace Casino is completely cellular optimized. You can play all of the on line casino video games from a cellular app device like an Android, iPhone or an iPad. You can also make deposits or payments with credit and debit playing cards, e-wallets, checks, e-checks, cryptocurrency and extra. If you wish to withdraw and hold winnings for yourself, have the ability to|you presumably can} withdraw the winnings out of your bonuses too and evaluation 카지노 payout transactions. You’re in need of a car and wish to purchase one, free bingo slots video games carried out by a solid team of skilled account managers.
பதிலளிநீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.