"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" வாழ்க்கைத் தத்துவங்கள் - Guiding Philosophy in Life.

வாழ்க்கைத் தத்துவங்கள் - Guiding Philosophy in Life.

life - philosophy.

வாழ்வுக்கு வழிகாட்டும்
வாழ்க்கைத் தத்துவங்கள்.

     வாழ்வில் பல சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்த சான்றோர்களும், ஆன்றோர்களும் தன் வாழ்க்கை அனுபவங்களை எதிர்கால சந்ததிகள் அறியும் பொருட்டு அனுபவ செப்பேடுகளில் ஆழமாக பொறித்து சென்ற வைர வரிகளே தத்துவங்கள் எனலாம். அதிலிருந்து நம் வாழ்க்கைக்கு பயன் சேர்க்கின்ற சில தத்துவார்த்த சொல்லாடல்களை பார்ப்போம்!!.

life-philosophy book

Valkkai Thaththuvangal.

முயற்சி நின்ற தருணம்.

  • தலை குனிந்து என்னைப் பார். உலகமே உன்னை தலை நிமிர்ந்து பார்க்கும் - இப்படிக்கு புத்தகம்.
  • நீ செய்யும் தவறுகளை நீ தவறு என்று உணராதவரை அது உனக்கு சரியாகவே தெரியும்.
  • விரைவாக முடிவு எடுக்கத் தெரியாதவன் வாழ்வு... விரைவாகவே முடிந்துபோகும்.
  • முற்கள் நிறைந்த கடினமான பாதைகள்தான் உன்னை கனிவான இடங்களுக்கு அழைத்து செல்கின்றன.
  • வாழப் பொருள் வேண்டும். நீ வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
  • விதை விழுவது உரமாவதற்கு அல்ல. மரமாவதற்கே...
  • உன் எண்ணங்கள் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரை நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.
  • நீ எதிலும் தோற்பதே இல்லை... ஒன்று வெற்றி கொள்கிறாய் இல்லையேல் கற்று கொள்கிறாய்.
  • உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு... உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசு...
  • உங்களின் நேற்றைய தோல்விகளுக்கான காரணங்களை நீங்கள் இன்று கண்டறியாவிட்டால், நாளைய வெற்றியை நோக்கி உங்களால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது.
  • கற்கள் ஏற்படுத்தும் வலியைவிட சொற்கள் ஏற்படுத்தும் வலி அதிகம். எனவே தவறான வார்த்தைகள் உங்களின் பற்களை தாண்டி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • வாழ்க்கையின் சுகமே அதை சுமப்பதில்தான் இருக்கிறது.
  • விடாமுயற்சியில் விடாமல் உழைப்பவனையே இறுதியில் வெற்றி எதிர்கொள்கிறது.
  • மூச்சு நின்றால் மரணம், அது உன் முயற்சி நின்ற தருணம்.
  • தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும், ஏணியாக நினைத்தால் உயர்த்தும்.
  • பொறுமையை இழந்தவன் வறுமையில் வீ ழ்வான்.
  • ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டுமென்றால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்.
  • காணாமல் போனவர்களை தேடு, ஆனால் உன்னை கண்டும் காணாமல் போகிறவர்களை கண்டால் ஓடு.
  • கடந்துபோன காலங்கள் காலாவதியான மருந்தைப் போல அருந்தினாலும் வீண். அதையே நினைத்து வருந்தினாலும் வீண்.
  • தனிமை - நீயே எடுத்துக்கொண்டால் சுகம். அதுவே பிறரால் உன்னிடம் திணிக்கப்பட்டால் துக்கம்.
  • வரலாற்றில் இடம்பிடித்த அனைவருமே அவர்களின் உறவுகளால் உணர்வுகள் புண்பட்டவர்களே!...
  • உன் வாழ்வில்வரும் சிக்கல்கள் அனைத்தும் உன்னை சிதைக்க வந்தவை என நினைக்காதே. உன்னை இன்னும் சிறப்பாக செதுக்க வந்தவை என நினை.
  • ஊராரின் வாயை மூட நீ முயற்சி செய்வதைவிட.. உன் காதுகளை மூடிக்கொள்வது சுலபமல்லவா?...
  • சில நேரங்களில் கடந்து செல்வதும், பலநேரங்களில் கண்டுகொள்ளாமல் செல்வதுவும் உன்னை அவமானங்களிலிருந்து காப்பாற்றும்.
  • ஒரு எலியின் கொஞ்சும் இளமையை விட ஒரு புலியின் வருத்தும் முதுமை வலிமையானது.
Philosophy in Life.
  • ஏழையாக இருப்பது தவறல்ல.. தொடர்ந்து கோழையாக இருப்பதே தவறு.
  • நீ வெளிச்சத்தில் இருந்தால்தான் உன்னை உன் நிழல் கூட பின் தொடரும்.
  • நீ பிறருக்கு கொடுக்கும் வெங்காயத்தை விட பிறரிடமிருந்து உனக்கு கிடைக்கும் பெருங்"காயமே" உனக்கு சிறந்த படிப்பினையைக் கொடுக்கும்.
  • எவனொருவன் தன் மனதை அடக்கி ஆட்சி செய்கிறானோ அவனை வேறு எவராலும் ஆட்சி செய்யவே முடியாது.
  • நீ கையில் எடுக்க விரும்பும் "வன்முறை" என்னும் ஆயுதத்தின் இரு பக்கமும் கூர்மையானவை. அது உன் எதிரிகளை விட உன் கைகளையே முதலில் பதம் பார்க்கும்.
  • உன்னை மதிக்காத இடத்தில் பிணமாக விழுந்துகிடப்பதுகூட பாவம்.
  • "முயலும்" வெல்லும், "ஆமை"யும் வெல்லும். ஆனால் "முயலாமை" என்றும் வெல்லவே வெல்லாது.
  • வென்றவனுக்கும் வரலாறு உண்டு... தோற்றவனுக்கும் வரலாறு உண்டு... ஆனால் வேடிக்கை பார்பவனுக்கு அது இல்லை.
  • ஜெயிக்கும்வரை தன்னம்பிக்கையும் ஜெயித்தபின் தன்னடக்கமும் உன்னுள் குடிகொண்டால் உன் வாழ்வில் வீழ்ச்சி என்பதே இல்லை.
  • கற்களால் நீ தடுக்கி விழுந்தால் மீண்டும் எழுந்து நடப்பது சுலபம். ஆனால் உன் சொற்களால் நீ தடுக்கி விழுந்தால் அதன்பின் எழுந்து நடப்பதென்பது மிகவும் கடினம்.
  • முள்ளின் வலி ஒரு நிமிடம் மட்டுமே உன்னை முடமாக்கும். ஆனால் நீ உதிர்க்கும் தவறான சொல்லின் வலிகளோ வாழ்நாள் முழுவதுமே உன்னை முடங்கிப்போகச் செய்யும்.
  • யாருக்கும் உன்னை பிடிக்கவில்லையா? அப்படியென்றால் நீ இன்னும் சிறப்பாக நடிக்க கற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.
  • எல்லோருக்கும் பிடித்தமாதிரி நீ இருக்க விரும்பினால் முதலில் நீ இறந்துபோக வேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும். எனவே எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வதை விடுத்து முதலில் உனக்கு பிடித்த மாதிரி வாழ பழகிக்கொள்.
💦💦💦💦💦💦💦

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. ஒவ்வொன்றும் அற்புதம்... பல திருக்குறள் ஞாபகம் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித வாழ்க்கை தத்துவத்தின் மொத்த பரிணாமமும் திருக்குறளில் மட்டுமே மண்டிக்கிடக்கின்றன என்பதே யாராலும் மறுக்க முடியாத உண்மை. குறளின் ஒவ்வொரு அடி சொற்களும் நம் வாழ்விற்கு ஏற்றம் தரும் ஒவ்வொரு படி கற்கள் என்றால் அது மிகையாகாது.

      நீக்கு
  2. அனைத்தும் அருமையான தத்துவங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி சகோதரி !!...

      நீக்கு
  3. கிட்டத்தட்ட அனைத்தும் படித்ததும்/அறிவுறுத்தப்பட்டதும் ஆனால் கடைபிடிக்க தவறியது.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.