Proverb Collection.
அனுபவ ரீதியாக பெற்ற அறிவைக்கொண்டு மக்களுக்கு நீதியையும், நேர்மையையும், நன்னடத்தையையும் நயம்படக்கூறி நல்வழிப்படுத்தியதால் காலத்தை கடந்து கருத்தை வென்று வீறுநடைபோட்டு நிற்கிறது இந்த பழமொழிகள். இவைகள் ஜனிக்கும் போது காகிதத்தில் வடிக்கப்படவில்லை என்றாலும் காலம் காலமாக நம் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் நேர்த்தியாகவே தொடுக்கப்பட்டு வருவது ஆச்சரியமே!.
பேச்சு வழக்கிலேயே வளர்க்கப்பட்டு வந்த இவைகளில் சில கருத்தாழம் உள்ளதாகவும் இன்னும்சில சிறந்த சொல்லாடலை கொண்டதாகவும் இருப்பதுண்டு. இந்த இருசுவை மதுவை இவ்வலைப்பூவில் பட்டாம்பூச்சிகளாக பறந்துவந்து அருந்திச்செல்லுங்கள்.
பழமொழி தொகுப்பு.
Pazhamozhi Thoguppu.
- குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை.
- சித்திரத்து கொக்கே ... கொஞ்சம் ரத்தினத்தை கக்கே.
- ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
- மாடம் இடிந்தால் கூடம்.
- ஊரை எழுப்ப வேண்டுமென்றால் முதலில் பூசாரியை எழுப்பு.
- பாலில் இருக்கும் மணம், கூழில் இருக்கும் குணம்.
- புத்திகெட்ட ராஜாவுக்கு மதிகெட்ட மந்திரி.
- தட்டுல இருக்குது சட்டினி... அத பட்டுன்னு கொட்டுனா பட்டினி.
- மலையத்தனை சாமிக்கு தினையத்தனை பூ.
- மலையளவு சாமிக்கு கடுகளவாம் கற்பூரம்.
- தட்டான் தாய் பொன்னிலும் மாப்பொன் களவெடுப்பான்.
- கக்கின பிள்ளை தக்கென பிழைக்கும்.
- காலையில் கூவியது சேவல்... மாலையிலோ அது பருந்தின் வாயில்.
- அச்சத்தினால் சாகிறவனுக்கு முச்சந்தியிலும் இடமில்லை.
- இளமையில் சூதாடிகளாக இருப்பவர்கள், முதுமையில் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள்.
- இழந்துபோன பொருளை இறைவனுக்கு அர்ப்பணி.
- குல்லாவுக்கு பிறந்தவன் மகுடத்திற்கு ஆசைப்படலாமோ?
- நட்டுவன் பிள்ளைக்கு கொட்டி காட்ட வேண்டுமா?
- ஓநாய்கள் வாழும் காட்டில் கழுகுகளுக்கு பட்டினி என்பதே இல்லை.
- மழையில் நனைய பயந்து கிணற்றில் குதித்ததாம் தவளை.
- நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உண்டோ?
- கொஞ்சம் தெரிந்தவன் அதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருப்பான்.
- ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை.
- கோழிமுட்டைக்கு தலையில்லை.. கோவில் ஆண்டிக்கு உறவில்லை.
- விளைவது பயிராக இருக்கட்டும்... களைவது மயிராக இருக்கட்டும்...
- அம்மிக்கல்லையே தூக்கும் காற்று குழவிக்கல்லை மட்டும் விட்டுவைக்குமா?
- நாய்களின் குரைப்புகளுக்கெல்லாம் சிங்கம் திரும்பிப்பார்ப்பதில்லை.
- வாழைப்பழம் தவிர வேறெதுவும் தின்னக்கிடைக்காதவன் அதன் தோலையும் சேர்த்தே தின்பான்.
- தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.
- உழக்கில் கிழக்கென்ன.. மேற்கென்ன..?
- ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோலுக்காவது ஆகுமே.
- பாடப்பாட ராகம். மூட மூட ரோகம்.
- அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன்.
- தீயினால் சுட்ட புண் உள் ஆறும். ஆறாது நாவினால் சுட்ட வடு .
- செய்யும் தொழில்கள் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை.
- நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை.
- வாத்தியார் வீட்டு பிள்ளை மக்கு, வைத்தியர் வீட்டு பிள்ளை சீக்கு.
- கைக்கு எட்டியதூரம் கைலாசம். வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்.
- பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாககூட இருக்க முடியாது.
நடுவுல கொஞ்சம் செருப்ப காணோம் |
- வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
- வாதம் ஊதி அறி, வேதம் ஓதி அறி.
- வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது.
- தங்கின வியாழன் தன்னோடு மூணுபேரை கூட்டி போகும் .
- வேதம் பொய்த்தாலும் வியாழன் பொய்க்காது.
- நகம் நனையாமல் நண்டு பிடித்தானாம். முகம் நனையாமல் முத்து குளித்தானாம்.
- நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்.
- ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றை கட்டி அழுவாரா?
- பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
- போன அன்றைக்கு போய் புதன் அன்றைக்கு வா.
- மதி புதன் மயிர்களை.
- துணையாகப் போனாலும் பிணையாகப் போகாதே.
- செத்துக்கிடக்கும் சிங்கத்தைவிட சீவனுள்ள சுண்டெலி மேல்.
- பின்னே என்பதும், பேசாமல் இருப்பதும், இல்லை என்பதற்கே அடையாளம்.
- வெண்கல குகையில் வைத்து வியாழம் முப்பதும் ஊதினால் மற்ற நாள் வெள்ளியாமே.
- ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அதற்கு அண்டை வீட்டுக்காரன் என்ன செய்வான்?
- நல்லது செய்து நடுவழியில் போனால்... பொல்லாதது அத்தனையும் புறவழியே போகும்.
- கழுதையின் வீட்டுக்கு விருந்துக்குப்போனால் காதுகளைப்பற்றி பேச்செடுக்காதே
- காரணமே தெரியாம பிள்ளையை பெத்து, அதுக்கு கண்டாமிருகம்னு பெயரும் வைத்தானாம்.
- இரும்பை கரையான் அரிக்குமென்றால் பருந்தை கட்டெறும்பு தூக்கி செல்லாதா?
- அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்.
- ஜென்மத்தில் வந்த புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது.
- உன்னை நனைய வைத்த கடவுளே உன்னை உலரவும் வைக்கிறார்.
- முத்தால் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
- நையாண்டி பேச்சு நல்ல நன்பர்களை இழக்க செய்துவிடும்.
- வெறும் கரண்டி வாயை புண்ணாக்கும்.
- கடன் பழசாகி விட்டால் அது நீ கொடுத்த பரிசு என்று ஆகும்.
- அட்டை செத்தால் குட்டைக்கா நட்டம் ?
- உடும்பு பிடி தெரியாமல் உடும்பு பிடிக்க போனானாம்.
- கெட்டிக்கார சேவல் முட்டைக்குள்ளிருக்கும்போதே கூவும்.
- கோட்டனுடைய முட்டை சோனா வீட்டு அம்மியையும் உடைக்கும்.
- துழாவிப் காய்ச்சாதது கஞ்சியுமல்ல, வினாவிக் கட்டாதது கல்யாணமுமல்ல.
- வயது பதினாறானால் பேயும்கூட உனக்கு பேரழகியாகவே தெரியும்.
- முன்பு ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகள்தான் இப்போது தந்தூரி சிக்கன் ஆகின்றன.
- எறும்புகளுக்கு பனித்துளியே பெருமழைதான்.
- ஜலமண்டலி கடித்தால் பரமண்டலம்தான்.
- அணில் கொம்பில் ஏறுதுன்னு சொல்லி ஆமை கிணற்றில் இறங்கிச்சாம்.
- மொண்டு குடிக்க தண்ணி இல்லையாம் ஆனால் நண்டு பிடிக்க நாண்டுக்கிட்டு நின்னானாம்.
- விரும்பி உண்டால் கரும்பாய் இனிக்கும்.
- போன ஜீரத்தை புளி இட்டு அழைத்ததுபோல.
- பாவக்காய் பச்சடி பளபளத்ததாம் அத பாத்துப்புட்டு வெங்காய பச்சடி வெலவெலத்ததாம்.
- கெட்டாலும் செட்டி செட்டிதான், கிழிந்தாலும் பட்டு பட்டுதான்.
- தடவிப்பிடிக்க மயிரில்லை பெயர்மட்டும் முடிசூடும் பெருமாள்.
- நல்லவாயன் சம்பாதித்ததை நாறவாயன் தின்னுகிட்டு போனானாம்.
- தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தால்தான் தெரியும்.
- தந்தைக்கு தலைப்பிள்ளை, தாய்க்கு கடைபிள்ளை.
- கணுக்கால் பெருத்தால் கணவனுக்கு ஆகாது.
- ஆந்தையும் தன் மகவை இராஜாளி என்றே எண்ணுகிறது.
- சாத்திரம் பார்த்து பெண்ணை எடு, கோத்திரம் பார்த்து பெண்ணை கொடு.
- சாஸ்திரத்தை விளக்குமாறு கேட்டால் முடிவில் விளக்குபவனுக்கு விளக்குமாறுதான் பரிசாக கிடைக்கும்.
- வாதியும், பிரதி வாதியும் ஒரே படகில் பயணம் செய்தால் சாட்சிகள் நீந்திதான் கரையேறவேண்டி இருக்கும்.
- எங்கேயோ போகிற மாரியாத்தா... என் மேலேயும் கொஞ்சம் வந்து ஏறு ஆத்தா.
- கோவணத்தில் கொஞ்சம் காசிருந்தா... கோழி கூவலுக்கும் பாட்டுவரும்.
- பல் இல்லாதவனுக்கு பக்கோடா கேக்குதாம்.
- சேற்றிலுள்ள முள்ளும், வேட்டை நாயின் பல்லும், மூடனுடைய சொல்லும் அதிகமாகவே குத்தும்.
- தேரையின் வாலைப்போலவே இங்கு சுத்தம் என்பது சூனியம் ஆனது.
- பாம்புக்கு தலையை காட்டு, அப்படியே கொஞ்சம் மீனுக்கும் வாலை காட்டு.
- கொண்டையை கலைக்க ஒரு பேனும். குடும்பத்தை குலைக்க ஒரு பெண்ணும் போதும்.
- ஊமை ஊரை கெடுக்கும் பெருச்சாளி பேரை கெடுக்கும்.
- சாமிக்கு இணங்கிய பொன்னும் மாமிக்கு இணங்கிய பெண்ணும் என்றுமே அருமைதான்.
- அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினானாம்.
- உப்பிருந்த பாண்டமும், தப்பிருந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.
- எறும்புகடி தாங்காதவன் கரும்பு காட்டுக்கு போனானாம்.
- ஓணானோட ஓட்டம் வேலி வரைக்கும்தான்.
- நனைந்த கிழவி அடுப்படிக்கு வந்தால் விறகுக்குத்தான் சேதம்.
💦💦💦💦💦💦
2 கருத்துகள்
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குநன்றி !!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.