புது அறிவும் பொது அறிவும்.
நாம் நம்மைச்சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப்பற்றி தெரிந்துகொள்வது மட்டுமல்லாது, நம்மை சுற்றி இருக்கும் பொருள்களின் சில அடிப்படைத்தன்மைகளைப் பற்றியும் தெரிந்துகொண்டால் மட்டுமே தலை நிமிர்ந்து நடக்கமுடியும். எனவே இங்கு நம்முடைய அறிவுக்கு பலம் சேர்க்கும் சில பொது அறிவு விஷயங்களை பார்ப்போம்.
New General Knowledge.
- ஆல்கஹாலின் (Alcohol) கொதிநிலை - 78 ⁰ C.
- நைட்ரஜனின் (Nitrogen) கொதிநிலை - 196 ⁰ C.
- யூரியாவின் (Urea) உருகு நிலை - 135 ⁰ C.
- பனிக்கட்டியின் (Icy) உருகு நிலை - 0 ⁰ C .
- மனித உடம்பில் உள்ள நீரின் அளவு - 65%.
- தக்காளி (Tomato) பழங்களில் உள்ள நீரின் அளவு - 95%.
- பொதுவாக கடல் நீரில் எத்தனை சதவீதம் உப்பு கலந்துள்ளது தெரியுமா? - 3 . 5 %.
- இயற்கையில் கிடைக்கும் மிக கடின பொருள் - வைரம். (Diamond).
- கண்ணாடியை வெட்ட உதவும் வைரம் எது? - கருப்பு வைரம்.
- கிராபைட்டின் உருகு நிலை - 3700 ⁰ C.
- அமிலம் கலந்த நீரை மின்னாற்பகுக்கும்போது கிடைக்கும் பொருள் - ஹைட்ரஜன், ஆக்சிஜன். ( Hydrogen, Oxygen).
- தாவர எண்ணெய்யில் ஹைட்ரஜனை சேர்த்தால் கிடைக்கும் பொருள் - வனஸ்பதி (Vanaspati).
- பூஞ்சை கொல்லியாக பயன்படும் பொருள் - காப்பர் சல்பேட். (Copper Sulphate).
- காப்பர் சல்பேட்டை வெப்பப்படுத்தும்போது வெளியாகும் வாயு - சல்பர் ட்ரை ஆக்ஸைடு (Sulfur trioxide).
- உலோகங்கள் அமிலத்துடன் வினை புரியும் போது வெளிப்படும் வாயு - ஹைட்ரஜன்வாயு (Hydrogen gas).
- விஷ தன்மை வாய்ந்த வாயு - கார்பன் மோனாக்சைடு. (Carbon monoxide).
- ஒரு பொருள் எரிவதை தடுக்கும் வாயு - நைட்ரஜன். (Nitrogen).
- புற்றுநோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு - கோபால்ட். (Cobalt).
- மென்மையான தன்மை கொண்ட உலோகம் - சோடியம். (Sodium).
- கடின நீர் என்றால் என்ன தெரியுமா? - நிலத்திலுள்ள கால்சியம் (Calcium), மக்னீசியம் (Magnesium) முதலானவைகளின் குளோரைடுகள் (Chloride) மற்றும் சல்பேட் உப்புகள் நீரில்கரைவதால் நீர் கடின தன்மை பெறுகிறது.
- கடின நீரை கண்டறிவது எப்படி? - சவர்காரத்தை (Detergents - Soap) நீரில் போட்டு கரைக்கும் போது நுரை வரவில்லை எனில் அது கடினநீர் என எளிதில் கண்டறியலாம்.
- கடின நீரை மென்நீராக்கப் பயன்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட். (Sodium Carbonate).
- சமையல் பாத்திரங்களில் முலாம் பூச பயன்படும் உலோகம் - வெள்ளீயம் (அ) தகரம். (Tin).
- சல்பரை காற்றில் எரிக்கும் போது கிடைக்கும் வாயு - சல்பர் டை ஆக்ஸைடு. (Sulfur dioxide).
- கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது உருவாகும் வாயு - கால்சியம் ஆக்சைடு . (Calcium Oxide).
- மெக்னீசியத்தை காற்றில் எரிப்பதால் உருவாகும் வாயு - மக்னீசியம் ஆக்சைடு. (Magnesium Oxide).
- சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் கலந்த கலவை - ரொட்டி சோடா.
- அடுப்புகளில் பாத்திரங்களாக பயன்படுத்தப்படும் வெப்பம் தாங்கும் குடுவைகள் செய்ய பயன்படும் கண்ணாடி வகை - பைரக்ஸ் கண்ணாடி. (Pyrex glass).
- சலவை தூளின் அதாவது பிளீச்சிங் பவுடரின் வேதிப்பெயர் - கால்சியம் ஆக்ஸிகுளோரைடு. (Calcium Oxychloride).
- ரோசல் உப்பு என்பது என்ன - பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட். (Potassium sodium tartrate).
- மனிதனால் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை எத்தனை? - 21.
இதுபோன்ற பல பொது அறிவுசார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்...
>> "உடலியல் - Physiology general knowledge." <<
👫 👫 👫 👫 👫 👫
6 கருத்துகள்
அற்புதமான தகவல்கள் நண்பரே பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇனிய மகளிர் தின வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி!!! தங்களுக்கும் மங்களம் பொங்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதமிழ்மொழி! ... வருக !! தங்களுடைய வருகைக்கும், தங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி !!!
நீக்குsuper
பதிலளிநீக்குநன்றி நண்பரே !!! தங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி !!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.