"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" Muhammad Ali Jinnah - Direct action day - Part 6.

Muhammad Ali Jinnah - Direct action day - Part 6.

முகமது அலி ஜின்னா.

Muhammad Ali Jinnah.

[Part - 6]

          நாம் "முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah" என்னும் தொடர் பதிவின்மூலம் முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய ஆவணங்களை  தொடர்ந்து பார்த்துவருகின்றோம். இது ஆறாவது பகுதி. இப்பதிவின் முதல் பகுதியை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

>>முகமது அலி ஜின்னா - Birth of Muhammad Ali Jinnah - Part 1.<<


Muhammad Ali Jinnah - Direct action day.

1946 ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தூதுக்குழு ஒன்றை பிரிட்டன் இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது. ஆனால் முஸ்லீம் லீக் பேச்சுவார்தையை சிதைக்கும் விதத்தில் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தொடங்கியது.

Direct action day.

இதன் மூலம் நாடு முழுவதும் பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இதனை ''டைரக்ட் ஆக்க்ஷன் டே - direct action day'' என அகில இந்திய முஸ்லீம் லீக் அறிவித்தது.

பிரிவினை என்று சிலரால் ஏற்படுத்தப்பட்ட கோஷம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரேநாட்டின் மக்களையே இரண்டாகப் பிரித்து விரோதிகளாக மாற்றி கொத்துக் கொத்தாக செத்துவிழுவதற்கும் வழியேற்படுத்திக் கொடுத்து விட்டது.

இத்துணை உயிர்களை பலிகொண்ட பின்பும் பிரிவினைவாதிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை .

1947  ஜனவரியில் முஸ்லீம் லீக் (Muslim League) இந்திய அரசியலமைப்பு சபையை புறங்கணிப்பதாக அறிவித்தது. இத்தனை உயிர்களை பலிவாங்கிய பின்பும் பிரிவினை வாதம் இரத்தம் தோய்ந்த தன் கோரமுகத்தை திரும்ப திரும்ப வெளிக்காட்டி நிற்பதால் மனம் உடைந்துபோன காந்தி அன்றைய நாளில் டெல்லி வைசிராயாக பதவி வகித்த ''மவுண்ட் பேட்டன்'' (Mountbatten)னிடம் இந்தியாவை பிரிக்கலாமென வேதனையுடன் ஒப்புதல் தெரிவித்தார்.

ஒருவழியாக ஏப்ரல் 15 ம் தேதியன்று மக்கள் அமைதிக்காக்க வேண்டும் என்றும் மக்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் காந்தியும், ஜின்னாவும் (Gandhi and Jinnah) கோரிக்கை விடுத்தனர்.

அதே ஆண்டு ஜூன் 3 ம் தேதி அன்று மவுண்ட் பேட்டன் இந்திய பிரிவினை திட்டத்தை குறித்து நேருவும் ஜின்னாவும் (Nehru and Jinnah) உடனிருக்க வானொலியில் அறிவித்தார்.

இறுதியில் பாகிஸ்தான் என்ற நாடு உருவானதாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ல் அறிவிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டன் மற்றும் இந்தியாவிற்கு இடையே அதிகார பரிமாற்றம் நடந்தது. அடுத்த நாள் அதிகாலை பாகிஸ்தான் மற்றும் இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தன.

தான் விருப்பப்பட்டது போலவே நாட்டின் பிரிவினைக்காக போராடி பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை உருவாக்குவதில் வெற்றி கண்டார் ஜின்னா. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியும் ஏற்றார்.

பிரதமர் பதவியை தன்னுடைய சீடர் ''லியாகத் அலிகான்'' (Liaquat Ali Khan) க்கு விட்டுக்கொடுத்தாலும் இப்போதைக்கு நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில்தான் ஜின்னா இருந்து வந்தார்.

pakistan independence day

லட்சக்கணக்கான மக்களை கலவரத்தில் இழப்பதற்கு தன்னுடைய பிடிவாத குணமே மிகமுக்கிய காரணமாக அமைந்தது என்பதையும், தான் நினைத்திருந்தால் இத்துணை பெரிய உயிரிழப்புகளை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக மகிழ்வுடன் பதவியும் ஏற்றுக்கொண்டது ஆச்சரியமே!.

இந்த ஜின்னாவைத்தான் பாகிஸ்தானின் மாபெரும் தலைவராக பாகிஸ்தான் மக்கள் போற்றுகிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையை என்னவென்பது.

இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் கவர்னராக ஜின்னா பதவி ஏற்றதும் இந்து (Hindu), முஸ்லீம் (Muslim), சீக்கியர்கள் (Sikhs), கிறிஸ்தவர்கள் (Christian) என அனைவருக்கும் பாகிஸ்தானில் சம உரிமை உண்டு என அறிவித்தார். ஒருவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பது அவரின் தனிப்பட்ட விருப்பம் அதை பற்றி அரசுக்கு கவலை இல்லை என்றார்.

இந்தியாவில் இந்து முஸ்லீம் என பிரிவினையை விதைத்தவர் இப்போது இப்படி அறிக்கை விடுவதை பார்த்து மக்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் என்ற தனிநாடு தமக்கு கிடைத்த மகிழ்ச்சியை ஆடிப்பாடி கொண்டாடி கொண்டிருந்த வேளையிலும் அதன் மறுபக்கத்தில் இன்னும் கலவரம் ஓய்ந்த பாடில்லை. கலவரத்தாலும் பசி, பட்டினியாலும் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கொண்டு இருந்தனர்.

Partition of India Pakistan

கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி மக்கள் நாடு, வீடு, நிலம் மற்றும் உறவுகளையெல்லாம் விட்டு வெளியேற வேண்டி வந்தது. பல லட்சம்பேர் வரை இறந்திருக்கலாம் என ஒரு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.

நான் இங்கு பல லட்சம் பேர் என்று பொத்தாம்பொதுவாக சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு. இதன் சரியான எண்ணிக்கையை நீங்கள் தெரிந்துகொண்டால் உங்கள் இதயம் கணநேரத்தில் கிழிந்து போகலாம். எனவே அந்த எண்ணிக்கையை தவிர்க்கவே விரும்புகிறேன்.

உயிர்பலி மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான பெண்களும்கூட கொடும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகினர்.

கலவரத்தின் வீரியத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் கனத்த இதயத்துடன் இங்கு ஒன்றை மட்டும் பதிவு செய்ய விரும்புகின்றேன். 5 வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேல் கொழுந்து விட்டெரியும் கொடுந்தீ நெருப்பினால் பொசுங்கிப்போனார்கள் என்பதனை அறியும்போது நம் நெஞ்சமே பிளந்துபோகிறது அல்லவா?.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கு பிரிவினையை தூண்டியவர்களுக்கோ அல்லது பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலுக்கோ நேரமே கிடைக்கவில்லை. அவர்களோ புது தேசம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆடிப்பாடிக்கொண்டு கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சியிலும் ஒரே ஒரு ஜீவன் மட்டும் வேதனையில் தவித்துக்கொண்டிருந்தது. ஆம் அது வேறுயாருமல்ல ''ஃபாத்திமா ஜின்னா'' (Fatima Jinnah).

யார் இந்த பாத்திமா ஜின்னா? ஜின்னாவின் சகோதரி.

ஜின்னாவின் உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். அவர்களில் இவர் ஐந்தாவது நபர்.

ஜின்னாவுடன் பிறந்த மற்றவர்களுக்கு ஜின்னா மீது அவ்வளவு அக்கறை இல்லாவிட்டாலும் இவருக்கு அண்ணன் மீது அளவுகடந்த பாசம்.

நல்லதுதான். ஆனால் இப்போது எதற்காக கவலையில் இருக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் இப்படி அண்ணனின் பிடிவாதத்தால் மடிந்துகொண்டு இருக்கிறார்களே என்றா? இல்லை இல்லை. அதைப்பற்றி கவலைப்பட நேரம் ஏது ? இவருடைய கவலை எல்லாம் ஜின்னாவை பற்றித்தான்.

ஜின்னாவை பற்றியா? ஏன் கவலை கொள்ள வேண்டும்... மனிதர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஜாலியாக நல்லாத்தானே இருக்கிறார் என்கிறீர்களா? அதுதான் இல்லை. 

அவர் பலவருடங்களாகவே காசநோயால் (Tuberculosis) மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அதிக நாள் உயிர்வாழ்வது கடினம். இது ஜின்னாவிற்கும் அவருக்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவருக்கும், சகோதரி பாத்திமாவிற்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

எனவே, ஜின்னாவிற்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் பாகிஸ்தானை யார் காப்பாற்றுவது என்ற எண்ணமே அவருக்கு அச்சத்தை தந்தது.

fatima jinnah

ஆனால் ஜின்னாவிற்கோ வேறுமாதிரியான கவலை வாட்டியது.

எப்படியாவது பாகிஸ்தானை இந்தியாவை விட பெரிய மதசார்பற்ற நாடாக்கி காட்டுவது, ஜனநாயக நாடக நிலை நிறுத்துவது, இந்தியாவை விட வளம் பொருந்திய வல்லரசாக ஆக்குவது. அதன் மூலம் தன்னை உலக தலைவருள் ஒருவராக இவ்வுலகை ஏற்றுக்கொள்ள செய்வது. இதுதான் அவருடைய கவலையாக இருந்தது.

எப்படியாவது இதையெல்லாம் குறுகிய காலத்திற்குள் சாதிக்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு.

ஆனால், இதைவிட இன்னொரு ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த ஆசையை விரைவில் நிறைவேற்றி வைக்கும்படி ஜவகர்லால் நேருவுக்கு கோரிக்கையும் வைத்தார். அந்த கோரிக்கையை கேட்ட ஜவகர்லால் நேரு ஒரு கணம் பதறிப் போனார்.

அந்த கோரிக்கை என்னவென்று நீங்கள் அறிந்தால் ஒருகணம் நேருவைப்போல் அதிர்ச்சியில் உறைத்து போவீர்கள் என்பது உண்மை.

ஆனால் அவருடைய அந்த கோரிக்கையை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு கண்டிஷன். 

அவருடைய அந்த கோரிக்கையை ''படித்தவுடன் கிழித்து விடவும்'' என்பது போல படித்தவுடன் சிரித்து விடாதீர்கள். முகத்தை ''உர்'' என்று அதிர்ச்சியை வெளிப்படுத்துவதுபோல சீரியசாகவே வைத்திருங்கள். ஏனென்றால் ஜவகர்லால் நேருவும் அப்படித்தான் முகத்தை வைத்திருந்தார்.

Padithavudan Kilithu vidavum Jinnah letter.

காந்தியடிகளோ ஜின்னாவின் கோரிக்கையை அறிந்தவுடன் ''என்னடா இது இந்தியாவிற்கு வந்த சோதனை'' என்று கூறிக்கொண்டே தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார் என்பது வேறு கதை.

சரி இப்படி எல்லோரும் அதிர்ச்சி அடையும்படி ஜின்னா அப்படி என்னதான் கோரிக்கை வைத்தார் என்று கேட்கிறீர்களா?. சற்று பொறுங்கள் அதை அடுத்த பகுதியில் பார்ப்போம். 

இத்தொடரின் பகுதி 7 ஐ படிக்க கீழேயுள்ள "லிங்கை" கிளிக்குங்க..

>>"முகமது அலி ஜின்னா - Birth of Pakistan and death of Jinnah - Part 7."<<

💙 💙 💙 💙 💙 💙

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. தொடர் அருமையாக செல்கிறது நண்பரே... சரியான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்...
    ஆவலுடன் நானும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai . தங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே! ... தொடருங்கள்...

      நீக்கு
  2. கோரிக்கை அறியச் செல்கிறேன்!

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.