"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" உணவுகளும் கரிம அமிலங்களும் - Food and Organic Acids.

உணவுகளும் கரிம அமிலங்களும் - Food and Organic Acids.

Foods and Organic Acids.

உடலின் சீரான வளர்ச்சிக்கும். ஆரோக்கியத்திற்கும் பலவிதமான சத்துக்கள் மட்டுமல்லாது சிலவகையான கார சத்துக்களும், அமில சத்துக்களும் நம் உடலுக்கு தேவையாகின்றன.

இந்த கார சத்துக்களும், அமில சத்துக்களும் சம விகிதாசாரங்களில் நம் உடலுக்கு தேவைப்படுகின்றன. இதன் விகிதாசாரம் வித்தியாசப்படின் அது உடலின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

பொதுவாக அமிலங்களை கனிம அமிலங்கள் கரிம அமிலங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

கனிம அமிலங்கள் பலவகையான தாது உப்புக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவைகள் வீரியம் அதிகமானதாகையால் தொழில் சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கரிம அமிலங்களோ உயிருள்ள தாவரங்களிருந்து மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுகின்றன. நம் உடலுக்கு தேவைப்படுவது இந்த கரிம அமிலங்கள்தான். கரிம அமிலங்களில் பலவகைகள் உள்ளன.

இந்த கரிம அமிலங்கள் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கும், உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவதற்கும் அவசியமாகிறது. தசை வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு திறனுக்கும் இது அவசியம். அது மட்டுமல்லாது சில ஆபத்தான நோய்களிலிருந்து உடலை பாதுகாத்துக்கொள்ள கரிம அமிலங்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை.

இந்த கரிம அமிலங்கள் பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை அளித்தாலும் அளவு அதிகமானால் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே அளவறிந்து பயன்படுத்துவதே சிறப்பு.

நாம் பொதுவாக குறிப்பிடும் ''விட்டமின் C" (Vitamin C) என்பது கூட ''அஸ்கார்பிக்'' (Ascorbic acid) என்னும் கரிம அமிலமே.

இந்த கரிம அமிலங்கள் சிலவகையான உணவுப் பொருள்களில் நமக்கு தேவையான அளவில் நிரம்பியுள்ளன.

இங்கு எந்தெந்த உணவுப்பொருள்களில் நமக்கு தேவையான கரிம அமிலங்கள் உள்ளன என்பதனைப் பார்ப்போம்.

உணவு - கரிம அமிலங்கள்.

  • ஆப்பிளில் உள்ள அமிலம் - மாலிக் அமிலம். (Malic acid).

  • வெள்ளரிக்காய்களில் உள்ள அமிலம் - லாக்டிக் அமிலம். (Lactic acid).

  • ஸ்ட்ராபெரியில் உள்ள அமிலம் - அஸ்கார்பிக் அமிலம். (Ascorbic acid).

Foods organic acids

  • தக்காளி பழங்களில் உள்ள அமிலம் - ஆக்சாலிக் அமிலம். (Oxalic acid).

  • நெல்லிக்காயில் உள்ள அமிலம் அஸ்கார்பிக் அமிலம். (Ascorbic acid).

  • திராட்சையில் உள்ள அமிலம் - டார்டாரிக் அமிலம். (Tartaric acid).

  • எலுமிச்சையில் உள்ள அமிலம் - சிட்ரிக் அமிலம். (Citric acid).
  • வினிகரில் உள்ள அமிலம் - அசிட்டிக் அமிலம். (Acetic Acid).
  • கொழுப்பில் காணப்படும் அமிலம் - ஸ்டீயரிக் அமிலம். (Stearic Acid).
  • தயிரில் உள்ள அமிலம் - லாக்டிக் அமிலம். (Lactic acid).

  • முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள அமிலம் - நிக்கோடினிக் அமிலம். (Nicotinic acid).
  • கெட்டுப்போன வெண்ணெயில் உள்ள அமிலம் - பியூட்ரிக் அமிலம். (butyric acid).

  • வேர்க்கடலையில் உள்ள அமிலம் - நிக்கோடினிக் அமிலம் (அ) நியாசின். (Nicotinic acid - or - Niacin).

  • நாம் பருகும் சோடா பானத்தில் உள்ள அமிலம் - கார்பானிக் அமிலம்.(Carbonic acid).

  • சமையலுக்கு பயன்படுத்தும் புளியிலுள்ள அமிலம் - டார்டாரிக் அமிலம்.  (Tartaric acid).

  • தேநீரில் உள்ள அமிலம் - டானிக் அமிலம். (Tannic acid).

  • புளித்த பாலில்  [மோர்] உள்ள அமிலம் - லாக்டிக் அமிலம். (Lactic acid).

organic acids

  • பாலில் உள்ள அமிலம் - லாக்டிக் அமிலம். (Lactic acid). பாலில் "லாக்டிக் அமிலம்" அதிகமுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது என்றாலும் உண்மையில் லாக்டிக் அமிலம் பாலில் இல்லை என்பதே உண்மை. அதற்கு பதிலாக "லாக்டேட்" எனப்படும் லாக்டிக் அமிலத்தின் மூலக்கூறுகளான "லாக்டேட் உப்புகள்" மட்டுமே காணப்படுகின்றன.... நேரம் செல்லச்செல்ல பாலானது பாக்டீரியாக்களால் தாக்கப்பட்டு நொதியூட்டப்படுவதால் இந்த உப்புகள் வேதிவினைக்கு உட்படுத்தப்பட்டு லாக்டிக் அமிலமாக மாற்றம் பெறுகிறது. இதனாலேயே பாலானது புளிப்பு சுவையைப்பெற்று "தயிர்" மற்றும் "மோர்" என்ற தன்மையை பெறுகிறது.

இதுமாதிரியான அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அருகிலுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்...

>> "பொது அறிவு தரும் புது அறிவு - General Knowledge." <<

🍑🍑🍑🍑🍑🍑🍑

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி!!!

      நீக்கு
    2. பால் - லாக்டிக் அமிலம்

      நீக்கு
    3. தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி நண்பரே... தவறுகள் திருத்தப்பட்டுவிட்டன... மிக்க நன்றி!!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.