"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" Birth of Muhammad Ali Jinnah - Part 1.

Birth of Muhammad Ali Jinnah - Part 1.

முகமது அலி ஜின்னா.

Muhammad Ali Jinnah.

[Part - 1]

பெயர் :- முகம்மது அலி ஜின்னா. (Muhammad Ali Jinnah).

பிறப்பு  :- 1876 ம் ஆண்டு, டிசம்பர் 25 ம் தேதி.

பிறப்பிடம் :- கராச்சி, பாகிஸ்தான்.(Wazir Mansion, Karachi, Pakisthan.)

பெற்றோர் :- ஜின்னாபாய் பூஞ்சா (Jinnahbhai Poonja),  மிதிபாய் ஜின்னா (Mithibai Jinnah).

Muhammad Ali Jinnah.

கல்வி :- City Law (1895), வழக்கறிஞர்.

உடன்பிறந்தவர்கள் :- ஜின்னாபாய் பூஞ்சா தம்பதிகளுக்கு மொத்தம் 7 குழந்தைகள். அதில் முகமது அலி ஜின்னாதான் மூத்தவர். ஏழு குழந்தைகளின் விபரங்கள் -

  1. முகமது அலி ஜின்னா. [நம் கதாநாயகர்].
  2. அகமது அலி ஜின்னா (ahmad Ali Jinnah).
  3. பூண்டே அலி ஜின்னா (Bunde Ali Jinnah).
  4. ரஹ்மத் அலி ஜின்னா (Rahmat Ali jinnah).
  5. மரியம் பாய் ஜின்னா (Maryam Bai Jinnah).
  6. ஷிரீன் பாய் ஜின்னா (Shireen Jinnah).
  7. பாத்திமா ஜின்னா (Fatima jinnah).
மனைவிகள் :- நம் கதாநாயகருக்கு இரண்டு மனைவிகள்.

முதல் மனைவி ''எமிபாய் ஜின்னா''.(Emibai jinnah). இவருக்கு 1892 ல் திருமணம் முடிந்தது 1893 ல் மரணத்தை தழுவினார்.

இரண்டாவது மனைவி ''ரத்தன்பாய் பெட்டிட்'' என்னும் ரூட்டி (Rattanbai Petit jinnah). இவருக்கு 1918 ல் திருமணம் நடந்தது. 1929 ல் மரணத்தை தழுவினார்.

குழந்தை :- ஒரே ஒரு குழந்தை.. பெண் குழந்தை. பெயர் ''தீனா வாடியா'' (Dina Wadia) குழந்தையின் தாயார் ரத்தன்பாய் பெட்டிட் என்னும் ரூட்டி.

Emibai jinnah

ஜின்னா பதவி வகித்த அரசியல் கட்சிகள்
:-
  • இந்திய தேசிய காங்கிரஸ் (1906 - 1920)
  • அகில இந்திய முஸ்லீம் லீக் (1913 - 1947)
  • பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1947 - 1948).

இறப்பு :- 1948 ம் ஆண்டு, செப்டம்பர் 11 ம் தேதி. வயது 71.

இறப்பிற்கான காரணம் :- காச நோய் (Tuberculosis).

இறப்பிடம் - கராச்சி - பாகிஸ்தான். (Karachi - Pakistan).

முகமது அலி ஜின்னா.

வாழ்க்கை வரலாறு.

முதலில் நம்முடைய கதாநாயகரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவரின் பூர்வீகத்தைப் பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நம்முடைய கதாநாயகரின் தந்தை பெயர் "ஜின்னாபாய் பூஞ்சா" (Jinnahbhai Poonja).

இந்த ஜின்னாபாய் பூஞ்சாவை பெற்றெடுத்த புண்ணியவதியின் பெயர் "மஹிமா யாரா ஜின்னா" (Mahima Yara Jinnah).

ஜின்னாபாய் பூஞ்சாவின் தந்தை பெயர் "பூஞ்சா கோகுல்தாஸ் மெஹ்ஜீ" (Poonja Gokuldas Meghji).!!??..

என்னடா... இது இஸ்லாம் பெயரின் ஊடாக கோகுல்தாஸ் என்று இந்து பெயர் அடிபடுகிறதே என்று விழிக்கிறீர்களா?...

உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்...

அடிப்படையில் இவர் ஒரு இந்து.

"லோஹானா" (Lohana) என்னும் வகுப்பை சார்ந்தவர்.

சுத்த சைவம்.

ஓ ... அப்படியா? அப்புறம் ஏன் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்கிறீர்களா?.

அது ஒரு பெரிய கதை...

குஜராத்திலுள்ள ''கத்யவார்'' (Kathiawar) என்னும் பகுதியிலுள்ள ''பனேலி'' என்னும் சிறிய கிராமம்தான் இவருடைய சொந்த ஊர். குஜராத்தை சேர்ந்த சுத்த சைவர்களான லோஹானா வகுப்பை சேர்ந்த இவருக்கு வேறு தொழில் எதுவும் செட் ஆகாததால் வேறு வழியில்லாமல் தன் மனைவி மற்றும் குழந்தை குட்டிகளின் ஒரு ஜாண் வயிற்றுக்காக "மீன்" வியாபாரம் (Fish Sales) செய்துவந்துள்ளார்.

இங்கிருந்துதான் இந்தியாவின் ஒற்றுமை என்னும் ஒருமைப்பாட்டை தலைகீழாகப் புரட்டிப்போடப்போகும் "விதி" தன் முதல் ஆட்டத்தில் அடியெடுத்து வைத்தது. கூடவே "சதி" யும் தன் பங்குக்கு தன்னுடைய சதுரங்க ஆட்டத்தை இங்கிருந்தே ஆரம்பிக்க...

இருவருடைய ஆட்டமுமே சிறிது காலத்தில் தனக்கு நல்ல வேட்டையாக மாறப்போகிறது என்பதனை உணர்ந்துகொண்ட யமதர்மனோ தன் வாகனமாகிய எருமைக்கடாவை பரிவுடன் தடவிக்கொடுக்க... காலதேவனோ தன் கணக்கு நோட்டை கையிலெடுத்தான்...

எதற்காக ?? ...

கணக்கை முடிக்கத்தான்... 

ஒன்றிரண்டு பேரின் கணக்கை அல்ல. இந்தியாவில் வாழும் பல லட்சம் அப்பாவி மக்களின் கணக்கையும் மொத்தமாக முடிக்கத்தான்.

காலனின் கணக்கு முடிவுக்குவர இன்னும் பல வருடங்கள் இருப்பதால் நாம் இப்போதைக்கு மீன் யாவாரத்தை மட்டும் பார்ப்போம் வாருங்கள்.

கோகுல்தாஸ் "லோஹானா" வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும், அந்த வகுப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் மாமிசம் அருந்தா சுத்த சைவர்கள் என்பதாலும் கோகுல்தாஸ் மீன் வியாபாரம் செய்வது அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பிடிக்கவில்லை.

பிரச்சனை அடிதடியாக மாற வழக்கு வழக்கம்போல் ஊர் நாட்டாமையிடம் சென்றது.

ஆலமரத்தடியில் அமர்ந்து நெடுநேரமாக வழக்கை விசாரித்த நாட்டாமையோ வழக்கமான பாணியில் தொண்டையை செருமிக்கொண்டே தன்னுடைய திருவாயை திறந்து ஒருவாறு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்.

"நாட்டாம நாஞ் சொல்லுறேண்டா தீர்ப்பு... இந்த தீர்ப்புக்கு பண்ணாரி அம்மன் சத்தியமா எட்டு ஊரும் பதினாறு பட்டியும் கட்டுப்படணும்... நான் அம்புட்டுதான் சொல்லுவேன்... செய்த குற்றத்துக்காக கோகுல்தாஸ் குடும்பத்த கொழந்த குட்டியோட இந்த ஊரைவிட்டே தள்ளிவைக்கிறேன். இதுதாண்டா இந்த நாட்டாம நாறவாயனோட தீர்ப்பு... தீர்ப்பு... தீர்ப்பு..." என்று மூன்று தடவை சொல்ல...

கூட்டத்துக்குள்ளிருந்து "நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு" என்று தனக்கு ஆதரவான குரல் எழும் என்ற எதிர்பார்ப்பில் மண்டையை சொறிந்துகொண்டு நின்றவருக்கோ அவ்வாறான குரல் எதுவும் வராததால் ஏமாற்றமடைந்தார். 

ஏமாற்றம் அவருக்குள் ஒரு மாற்றத்தை கொண்டுவர...

விளைவு,...  இந்துவாகிய கோகுல்தாஸ் "மெஹ்ஜீ" என்ற அடைமொழியோடு இஸ்லாமியராக மாறிப்போனார். கூடவே மீன் வியாபாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

காலங்கள் மாறும்போது சில காட்சிகளும் மாறும் என்பதற்கிணங்க படிப்படியாக மீன் வியாபாரம் படுத்துவிட... கோகுல்தாஸ் மெஹ்ஜீ - ன் குடும்பம் வறுமையை விரட்ட வேறு வழியில்லாமல் தங்களுடைய பூர்வீக தொழிலான நெசவுத்தொழிலுக்கு மாறியது.

நூல் வடிப்பவன் மட்டுமல்ல நூல் தொடுப்பவனும் வறுமையின் பிடியில்தான் வாழ்வான் என்னும் கூற்றுக்கிணங்க மெஹ்ஜீயின் குடும்பமும் தொடர்ந்து வறுமையிலேயே வாடியது. வறுமையை விரட்ட அவர்கள் பார்த்துவந்த விவசாயம் ஓரளவு கைகொடுத்தது எனலாம்.

கோகுல்தாஸ் மெஹ்ஜீ - க்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ஆண் குழந்தைகள் மூன்று. பெண் குழந்தை ஒன்று.

தற்பொழுது குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் நெசவுத்தொழிலும், விவசாயமும் செய்தே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

கோகுல்தாஸ் மெஹ்ஜீயின் நான்கு குழந்தைகளில் ஒருவர்தான் "ஜின்னா பாய் பூஞ்சா''. அதாவது நம்முடைய கதாநாயகனான "முகமது அலி ஜின்னா" வின் தந்தை இவர்தான்.

ஜின்னாபாய் பூஞ்சா - விற்கு தன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த நெசவுத்தொழிலை தானும் தொடர சிறுவயது முதலே விருப்பம் இல்லாததால் வேறு தொழில் ஏதாவது தொடங்கலாம் என்ற நோக்கத்தில் தொழில் தேடி பக்கத்திலுள்ள ''கொண்டால்'' என்னும் சிறிய நகருக்கு தனியாக பயணப்பட்டார்.

தந்தையின் பரிபூரண ஆசிர்வாதத்தோடுதான் தன் பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருக்கு வெறும் 15 வயதுதான். 15 வயதே நிரம்பிய பாலகனை ஒரு தந்தை தனியாக நெடுந்தொலைவு அனுப்புகிறார் என்றால் தன் மகன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் தொழில் செய்து பிழைத்துக் கொள்வான் என்கிற அபார நம்பிக்கை அவருக்கு.

அப்படி தனியாக சென்றவர் அங்கு சொந்தமாக வியாபாரம் செய்யலானார். வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியடைய ஆங்கிலமும் சரளமாக பேசவர ஆங்கில வியாபாரிகளிடம் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டார். இந்த நெருக்கம் அவரை ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்க வாய்ப்பை  ஏற்படுத்திக் கொடுத்தது.

வாய்ப்பும் வசதியும் பெருக வணிகத்தில் கொடிகட்டி பறக்கலானார். மகனின் வளர்ச்சியை கண்ட தந்தையோ பூரித்துதான் போனார். உடனே மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார்.

மகனுக்கு 17 வயது. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று முடிவு செய்தார். ஏனென்றால் அப்போதெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கெல்லாம் 14 வயதிலேயே திருமணத்தை முடித்து விடுவார்கள். (அடடே. நாம ரொம்ப லேட்டா பொறந்துட்டோமோ?)

Muhammad Ali Jinnah Astrology.

ஆனால் , மகனுக்கோ 17 வயது ஆகிவிட்டதே  என்ற கவலை. உடனே பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினார்.

"மிதிபாய்" என்கிற பெண்ணை தேர்வு செய்து தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆக்சுவலி இது லேட் மேரேஜ்.

(என்னாது... லேட் மேரேஜா... டேய்! போங்கடா சும்மா கடுப்பேத்தாதீங்கடா).

1874 ம் வருடம் திருமணம் இனிதே நடைபெற்றது.

தன்னுடைய வியாபாரத்தை பெரிய அளவில் விருத்தி செய்ய நினைத்தார் ஜின்னா பாய். எனவே திருமணம் முடிந்த கையோடு தன் புது மனைவியுடன் தன் தொழிலை விரிவாக நடத்த ''ராச்சி'' நகருக்கு குடி பெயர்ந்தார்.

அங்கு "க்ராம் ட்ரேடிங் கம்பெனி" என்னும் பெயரில் ஒரு வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். குறுகிய காலத்திலேயே நிறுவனம் அமோகமாக லாபம் ஈட்டியது. மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார். இந்த சந்தோஷமான நிகழ்வுகளால் மனைவி கருவுற்றார்.

அடுத்த ஐயிரண்டு திங்களில் அதாவது 1876 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி நம் கட்டுரையின் கதாநாயகனான ''முகமது அலி ஜின்னா'' கராச்சியில் உள்ள வஜீர் மாளிகையில். ''ஓ! இதுதான் பூலோகமா நீங்கள்தான் மானுடர்களா?'' என்று யோசித்தபடியே திரு அவதாரம் எடுக்கிறார்.

( என்னாது... ''திரு அவதாரமா'' ? என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதன... அவதாரம், கிவதாரம்னு சொல்லி பொரளிய கெளப்பாதீங்கடா...)

சரி,. சரி ! ரிலாக்ஸ்... இனி வரும் இரண்டாவது பகுதியில் திரு அவதாரத்தின் தெருவிளையாடலை... சாரி.... திருவிளையாடலை படிப்படியாக பார்க்க இருக்கிறீர்கள்.. 😅

இதன் தொடர்ச்சியாகிய இரண்டாம் பகுதியை படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..

>>"முகமது அலி ஜின்னா - Childhood and first marriage of Muhammad Ali Jinnah - Part 2."<<

💞 💞 💞 💞 💞 💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

  1. //முதல் மனைவி '' எமிபாய் ஜின்னா''.( Emibai jinnah). இவருக்கு 1982 ல் திருமணம் முடிந்தது 1983 ல் மரணத்தை தழுவினார்//

    இதில் குழப்பம் உள்ளது சரி செய்யவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai . தவறை சுட்டிக்காட்டியதற்கு அன்பு கலந்த நன்றி நண்பரே !!! இப்போது தவறை திருத்திக்கொண்டேன் ... மிக்க நன்றி!!!

      நீக்கு
  2. அடுத்த பகுதிக்குச் செல்ல இங்கேயே லிங்க் தந்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் .. தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி !!!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.