"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" வியாழன் கோள் - Jupiter Planet.

வியாழன் கோள் - Jupiter Planet.

Jupiter Planet.

நமது சூரியகுடும்பத்தில் ஐந்தாவதாக அமைத்துள்ளது வியாழன் கோள். நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் மிகப் பெரியது இதுவே. ''வியா'' என்றால் பெரிய என்று பொருள். வியாழன் என்றால் ''பெரிய கோளம்'' என்று பொருள். நமது சூரிய குடும்பத்திலேயே இதுதான் மிகப் பெரிய கோள் என்பதால் இதற்கு ''வியாழன்'' என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.



வியாழன் கோள்.

நமது பூமியைவிட 1,300 மடங்கு பெரியது. இதனை சோதிட சாஸ்திரத்தில் ''குரு'' என்று பெயரிட்டு அழைக்கின்றனர். வானியலாளர்கள் இதனை ஜீபிடர் (Jupiter) என்று அழைக்கின்றனர்.

சனிகிரகத்தை சுற்றி அழகிய வளையம் இருப்பது போல் இதற்கும் வளையங்கள் உண்டு என்றாலும் நாம் அதை தெளிவாகப்  பார்க்க முடிவதில்லை.

நமது சூரிய குடுப்பதிலுள்ள கோள்களில் மிக அதிக அளவு காந்தப்புலம் கொண்ட ஒரே கோள் இதுவே.

இது ஒரு ''வாயுக்கோளம்'' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் தரைப்பகுதியிலிருந்து பல கிலோ மீட்டர் உயரத்திற்கு தூசு மண்டலத்துடன் கூடிய அடர்த்தியான வாயுக்கள் நிரம்பியுள்ளதால் இது வாயுக்கோளம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மிக கடுமையான சூறாவளியுடன் கூடிய புயல்காற்றும் வீசுகின்றது. இடி, மின்னல்களுக்கும் பஞ்சமில்லை. பூமியிலுள்ளதுபோல் இங்கு பருவகால மாற்றங்கள் ஏற்படுவதில்லை.

சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையேயான இடைப்பட்ட தூரம் 778.5 மில்லியன் கி.மீ. (77.83 கோடி கி.மீ). இது வினாடிக்கு சூரியனை 13.07 கி.மீ வேகத்தில் சுற்றிவருகிறது. 2 டிகிரி சாய்வு கோணத்தில் சூரியனை சுற்றிவருகிறது. இது சூரியனை ஒருதடவை சுற்றிவர 11 ஆண்டுகளும் 10 மாதங்களும் எடுத்துக்கொள்கின்றன.

இது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது. இது வினாடிக்கு 8 மைல்( சுமார் 13 கி. மீ ) வேகத்தில் 9 மணி 50 நிமிட நேரத்திற்குள் தன்னைத்தானே சுற்றிவருகிறது.

Earth_Jupiter_Comparison

வியாழனின் சராசரி ஆரம் 69,911 ± 6 Km. இதன் விட்டம் சுமார் 142,984 கி.மீ. (88,846 மைல்). பூமியுடன் ஒப்பிட்டு சொல்லவேண்டுமானால் பூமியைப் போல் சுமார் 11 மடங்கு அதிக விட்டத்தை கொண்டது. அதுமட்டுமல்ல இது நம் பூமியைப்போல் 318 மடங்கு அதிக நிறை கொண்டது. இதன் சராசரி அடர்த்தி 1.326 கி/செ.மீ ³. மேலும் பூமியின் ஈர்ப்பிவிசையை விட இதன் ஈர்ப்பு விசை அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிட்டால் வியாழனின் ஈர்ப்பு விசை 2 . 5 மடங்கு அதிகம்.

இதன் துருவப்பகுதிகள் சிறிது தட்டையானது. இதன் துருவ விட்டம் 133,575 கி.மீ . (83,000 மைல்).

நமது பூமிக்கு உள்ளதுபோல இதற்கும் துணைக் கோள்கள் உள்ளன. ஆனால் எண்ணிக்கைதான் கொஞ்சம் அதிகம். சிறியதும் பெரியதுமாக 79 துணைக்கோள்களை கொண்டுள்ளன.

இதன் துணைக்கோள்களில் மிகப்பெரியது ''கனிமிட்''. இது நம்முடைய  புதன் கோளைவிட பெரியது. நம் சூரிய குடும்பத்திலுள்ள துணைக்கோள்களில் மிகப் பெரியது இதுதான்.

வியாழனில் பாறைகளும் பலவிதமான கனிமங்களும் நிறைந்துள்ளன என்றாலும் இக்கோளை  சுற்றி அடர்த்தியான வாயுக்களே  நிரம்பியுள்ளன. இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன், அமோனியா, ஈத்தேன் மற்றும் நீர்வாயுக்கள் நிரம்பியுள்ளன.

jupiter_satellite _cloud

செவ்வாயில் மனிதர்கள் குடியேற முயற்சி மேற்கொள்வது போல் வியாழனில் குடியேற விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொள்வதில்லை.. ஏனெனில் இங்கு மனிதர்கள் குடியேற வேண்டுமெனில் முதலில் உயிர்த்தியாகம் செய்யவேண்டும். அதன் பின்தான் குடியேற முடியும்.. ஏனெனில் பூமியில் ''கயல்'' களின் தாக்குதல் அதிகம் என்றால் வியாழனில் ''புயல்'' களின் தாக்குதல் அதிகம்.

puyal kayal

இங்கு ஆண்டு முழுவதும் சூறாவளிக்கும் புயல்களுக்கும் பஞ்சமில்லை.. நம் பூமியில் பிளாஷ் அடிக்கும் மின்னலைப் போல் இங்கு மின்னலுக்கும் பஞ்சமில்லை.. ஹய்யா ஜாலி!

Jupiter dance

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் பூமியிலுள்ள இடி மின்னலோடு ஒப்பிடும்போது இதனுடைய வலிமை 1000 மடங்கு அதிகம். எனவே இங்கு செல்ல முயற்சி மேற்கொண்டால் பெரும்பாலும் அதுவே உங்களுக்கு இறுதி யாத்திரையாகவும் இருக்கலாம்..

மேலும் வியாழன் கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை சுட்டுங்க.

>> வியாழன்  - பயோடேட்டா - Jupiter bio data <<

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. Super Content bro .. keep it up. athuvum
    உயிர் தியாகம் பன்னிட்டு குடியேரலாம் ஹா ஹா!!! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Space News Tamil .... தங்களின் புது வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே ! என்றென்றும் நட்புடன் வாழ்த்துக்கள்!!!

      நீக்கு
  2. மிகவும் அருமை

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.