தத்துவ முத்துக்கள்.
Philosophy in Tamil.
"தத்துவம்" என்றால் என்ன என்று நமக்குள் ஒரு சந்தேகம் எழலாம். நம் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் விதமாக தத்துவத்திற்கு எளிமையாக இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது.
அது இன்னான்னா, கேட்பவர்களுக்கு புரியவில்லையெனில் அது "தத்துவம்". சொல்பவருக்கும் அது புரியவில்லையெனில் அது "மகா தத்துவம்".
ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தத்துவங்கள் யாவும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளதால் இவைகளை எந்த வெரைட்டியில் சேர்ப்பது என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஒருவேளை இவைகளை "ஜென்' தத்துவத்தில் சேர்த்துவிடலாமோ? !!.
Thaththuva Muthukkal.
துணிந்தவனும் பணிந்தவனும்..
- கிட்டாதாயின் வெட்டென மற.
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
- சோம்பல் கொண்டார் வாழ்வு சாம்பல் ஆகும்.
- நூல் அறிவே ஆகுமாம் நுண்ணறிவு.
- ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
- குரு இல்லா வித்தையும் இல்லை. கரு இல்லா முட்டையும் இல்லை.
- வாசிப்பு உன் சுவாசிப்பாக இருக்கும் வரையில் உன் ஆன்மா அழிக்கப்படுவதில்லை.
- சொல்பவரின் ஆர்வம் , கேட்பவரின் கொட்டாவியால் கெடும்.
- வாழ்க்கை என்பது வண்ணங்களில் இல்லை, உங்கள் எண்ணங்களில் உள்ளது.
- துணிந்தவன் தரணி ஆள்வான். பணிந்தவன் பார் ஆள்வான்.
- உதிர்ந்து போன பூக்களுக்காக கண்ணீர் விடுவதைவிட, மலர்ந்து இருக்கும் பூக்களுக்காக தண்ணீர் விடுவது மேல்.
- தடைக்கல்லை படிக்கல்லாக்கு.
- சத்தியத்தின் வழிநடந்தால் அசாத்தியமும் சாத்தியமே.
- தோளுக்கு மிஞ்சி நின்றால் தோழன், அவனே கூழுக்கு கெஞ்சவைத்தால் காலன்.
- உழைப்பு உன்னை சாக விடாது . கவலை உன்னை வாழ விடாது.
- உள்ளத்தை விழிக்கச் செய். உணர்ச்சியை உறங்கச் செய். வெற்றி நிச்சயம்.
- மாற்றங்களால் பட்டை தீட்டப்பட வேண்டுமெனில், ஏமாற்றங்களை சட்டை செய்யாதே.
- முயன்றால் முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது.
- முட்டாளின் வீரம் அவனை மரணத்தில் கொண்டுபோய் தள்ளும்.
- படுக்கையில் மரணிப்பதைவிட பட்டாளத்தில் மரணிப்பது மேல்.
- உன் வாழ்க்கையை வெளிச்சமாக்கிக் கொள், ஏனெனில் இருட்டில் உன் நிழல் கூட உன்னை பின்தொடர்வதில்லை.
- தோல்வியில் தைரியமும், வெற்றியில் பணிவும் உன்னை வழிநடத்தும்.
- மூச்சு நின்றால் மரணம், அது உன் முயற்சி நின்ற தருணம்.
- வாதிப்பவனை விட சாதிப்பவனே மேன்மையானவன்.
- நல்ல எண்ண விதைகளை இன்றே மனதில் விதைத்து விடுங்கள். நாளை ஆலவிருட்சமாக நீங்கள் வளர இதுவே சிறந்த வழி.
- அலட்சியம் உன் லட்சியத்தை வேரறுக்கும்.
- துயரத்தை திறமையாக கையாள்கிறவனே, உயரத்தை எளிதாக தொடும் திறமையை பெறுவான்.
- துன்பத்தை கடந்து வந்த பாதையை மறந்து விடலாம் ஆனால் அது கற்று தந்த பாடத்தை மறக்காதே.
- இழப்பதற்கு ஒன்றுமே இல்லை, ஆனால் கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது.
- மாற்றங்களே சில ஏமாற்றங்களை தள்ளிப் போடும்.
- கண்மூடித்தனமான நம்பிக்கை வாழ்வை மண்மூடி போகச்செய்யும்.
- உனக்கு வரும் துன்பங்களே இந்த உலகத்தை உன் கண்களின் முன்னால் தோலுரித்துக் காட்டும்.
- இன்று நீ பாம்பிற்கு பாலூற்றி வளர்த்தால்... என்றாவது ஒரு நாள் நன்றி மறவாத அது உனக்கும் பாலூற்றும்.
தத்துவம் சொல்லி அலுத்துப்போச்சி கடைசியா ஒரே ஒரு '' பன்ச் '' டயலாக்.
''ஒரு எறும்பு நெனச்சா ஆயிரம் யானைகளை கடிக்கலாம். ஆனா ஆயிரம் யானைகள் நெனச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது''
கொய்யால .. எறும்புன்னா சும்மாவா. 😂😃😄
தத்துவ முத்துக்களைப்பற்றி அறிந்துகொண்ட நீங்கள் புதுமையான பழமொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டாமா ?. அறிந்துகொள்ள >> புதுமையான பழமொழிகள் - Puthumaiyana palamoligal - Innovative proverbs. <<
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.