"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" சூரியன் பயோடேட்டா -Sun Bio data.

சூரியன் பயோடேட்டா -Sun Bio data.

Sun Biodata.

சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் எனலாம். ''சக்தி இல்லையேல் சிவம் இல்லை'' என்கிற கூற்று இங்கு சூரியனுக்கே பொருந்தும். ஏனெனில் புவியின் இயக்கத்திற்குத் தேவையான அனைத்து விதமான  அடிப்படை சக்திகளும் சூரியனிடம் இருந்தே பெறப்படுகின்றன.


சூரியன் பயோடேட்டா.

சூரியன் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டால் பூமியும் தன் அனைத்து அசைவுகளையும் நிறுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல சூரியனுடைய ஈர்ப்பு விசையால்தான் பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

அண்டவெளியில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய கேலக்சிகள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் நம் சூரியனை உள்ளடக்கிய பால்வீதி (Milky Way). இது சுமார் சிறிதும், பெரிதுமாக 200 பில்லியன் நட்சத்திரங்களை அதாவது சூரியன்களை உள்ளடக்கியது.

சூரியனின் வெளிப்புறம் 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன..

  • போட்டோஸ்பியர் [Photosphere].
  • குரோமோஸ்பியர் [Chromosphere].
  • கொரோனா [Corona].
sun layer

சூரியனில் இருக்கும் மிக முக்கியமான பொருட்கள் இரண்டு.. ஒன்று ஹைட்ரஜனும் மற்றொன்று ஹீலியமும்.

இங்கே நாம் இப்போது சூரியனை பற்றிய சில அடிப்படை விசயங்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.

சூரியனுக்கு வழங்கப்படும் பல பெயர்கள் - சூரியன், கதிரவன், பகலவன், ஞாயிறு, அனலி, வெய்யோன்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் - 144 × 10 ⁵ Km.

சூரியஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் - 8 நிமிடங்கள்.

சூரியனின் கோண விட்டம் - 0.53 ⁰.

சூரியன் தன்னை தானே சுற்றும் கால அளவு - 25 . 38 நாட்கள்.

சூரியனின் திசைவேகம் - 220 Km / s.

நடுக்கோட்டில் தற்சுழற்சி திசை வேகம் - 7.189 × 10 ³ Km /h .

விட்டம் - 6 . 9599 × 10 ⁵. (14,00,000 கிலோ மீட்டர், பூமியின் விட்டத்தைவிட 109 மடங்கு நீளமானது).

நிறை - 1.989 × 10 ³⁰ Kg. (பூமியைவிட 330,000 மடங்கு அதிகம்).

சராசரி அடர்த்தி - 1.409 g/cm ³.

விடுபடு வேகம் -  617.7 Km /s.

ஒளி சக்தி - 3.826 × 10 ²⁶ j /s

மேற்பரப்பு வெப்பம் -  5800 கெல்வின். (சுமார் 5,700 டிகிரி செல்சியஸ்)

மைய வெப்பம் - 15 × 10 ⁶ கெல்வின். (சுமார் 1.5 கோடி டிகிரி செல்சியஸ்)

நட்சத்திர வகை - G 2 V.

சூரியனில் அடங்கியுள்ள பொருள்களின் விவரம்.

  • ஹைட்ரஜன் (Hydrogen) - 73.46 % .
  • ஹீலியம் (Helium) - 24.85 % .
  • ஆக்சிஜன் (Oxygen) - 0.77 %.
  • கார்பன் (Carbon) - 0.29 %.
  • இரும்பு (Iron) - 0.16 %.
  • நியான் (Neon) - 0.12 %.
  • நைட்ரஜன் (Nitrogen) - 0.09 %.
  • சிலிக்கான் (Silicon) - 0.07 %.
  • மெக்னீசியம் (Magnesium) - 0.05 %.
  • கந்தகம் (Sulfur) - 0.04 %.

          மேலும் சூரியனைப்பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க.

>> சூரியன் - Sun star <<


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்