Saturn bio data.
பெயர்க் காரணம் - சனிக்கிரகம் '' Saturn '' என்று அழைக்கப்படுகிறது. இது ரோமானிய விவசாய கடவுளை குறிக்கும் சொல்.
சனி கிரகம் - பயோடேட்டா.
சூரியனிடமிருந்து தொலைவு - 142 .7 கோடி கி.மீ.
சூரியனை சுற்றும் வேகம் - 9.6724 Km /s.
சூரியனை சுற்றும் கால அளவு -29 ஆண்டுகளும் 5 மாதங்களும் எடுத்துக்கொள்கின்றன.
தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 10 மணி 33 நிமிடம் 38 நொடிகள்.
தன்னைத்தானே சுழலும் வேகம் - 9.87 Km /s.
வளிமண்டல வெப்பநிலை - -130 ⁰ C லிருந்து - 190 ⁰ C வரை.
நடு மைய (உட்கரு ) வெப்பநிலை - 12,000 ⁰ C.
வளிமண்டல அழுத்தம் - 140 KPa.
துருவங்களில் வெப்பநிலை - 122 ⁰ C. துருவங்களில் உருவாகும் அதிகப்படியான காற்று சுழற்சியால் இந்த வெப்பம் உருவாகிறது.
சனிக்கிரகத்தின் சராசரி ஆரம் - 58,232 கி . மீ.
நடுக்கோட்டு விட்டம் - 120,536 Km.
துருவங்களின் விட்டம் - 108,728 Km.
விடுபடு திசைவேகம் - 35.49 Km/s.
சுழல் அச்சு சாய்வு கோணம் -26.73 ⁰.
சனிக்கிரகத்தின் எடை - 5.688 x 10²⁶Kg.
சனிக்கிரகத்தின் சராசரி அடர்த்தி -0.69 g /cm ³.
புற மேற்பரப்பு - 4.38 x 10¹⁰Km ²
மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 8.96 m/s².
துணைக்கோள்கள்.
82 துணைக்கோள்கள் உள்ளன. இவைகளில் மிகப் பெரியது "டைட்டான்'' (Titan). (இது புதன் கோளைவிட அளவில் பெரியது. நமது சூரிய மண்டலத்திலுள்ள துணைக்கோள்களில் இரண்டாவது பெரிய துணைக்கோள் இது).
சனிகிரகத்தில் அடங்கியுள்ள பொருட்கள்.
இதன் மையப்பகுதி இரும்பு, நிக்கல், சிலிக்கன் அடங்கிய பாறைகளால் ஆனது.
சனி கிரகத்தின் சிறப்பு.
சூரிய குடும்பத்திலுள்ள ஆறாவது கோள். அதேவேளையில் சூரியகுடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள். இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.
அழகிய வண்ணங்களில் பல வளையங்களை கொண்டுள்ள அழகிய கோள். பூமியை போலவே இங்கும் பருவகால மாற்றங்கள் நடக்கின்றன.
வளிமண்டலம்.
96.3% ஹைட்ரஜன், 3.25% ஹீலியம், 0.05 % மீத்தேன் (Methene) நிறைந்துள்ளன. மேலும் மிக குறைந்த அளவில் அமோனியா (Ammonia), அசிட்டிலீன் (Acetylene), ஈத்தேன் (Ethane) ப்ரொப்பேன் (Propane), பாஸ்பைன் (Phosphine) போன்ற வாயுக்களும் அடங்கியுள்ளன.
சனிக்கிரகத்தின் வளையங்கள்.
சனியின் நடுக்கோட்டு பகுதியில் உள்ள இந்த வளையங்கள் மிகவும் ரம்மியமானவை. இது நடுப்பகுதியில் 6,630 கி. மீ லிருந்து 1,20,700 கி. மீ தூரம் வரை பரவி காட்சியளிக்கின்றன.
இந்த வளையத்தின் உயரம் 23 மீடடர். இந்த வளையங்கள் பனித்துகள்கள், பாறைத்துகள்கள் மற்றும் மீத்தேன் தூசுகளால் ஆனவை.
உயிரின வாழ்க்கை.
மணிக்கு 1800 கி . மீ வேகத்தில் சூறாவளியுடன் கூடிய புயல் வீசுகிறது. நமது சூரிய குடும்பத்தில் அதிக வேகத்துடன் காற்று வீசும் ஒரே கோள் சனி கிரகம் மட்டுமே. இங்கு உயிர்கள் வாழமுடியுமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்ல நமது பூமியிலுள்ளது போல இங்கும் இடிமின்னல்கள் உண்டு. ஆனால் இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் பூமியில் ஏற்படும் இடி, மின்னல்களோடு ஒப்பிடும்போது இது பலகோடி மடங்கு அதிகம்.
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.