Pluto Planet - biodata.
பெயர்க் காரணம் - ரோமானியர்களின் பாதாள உலக கடவுள் ''புளூட்டோ''. அவரின் பெயரையே இக்கோளுக்கு சூட்டியுள்ளனர்.
புளூட்டோ கிரகத்தின் சிறப்பு - 2006 ம் ஆண்டிற்கு முன்பு வரை சூரியனை சுற்றிவரும் கோள்களில் இது 9 வது கோள் என்ற அந்தஸ்திலிருந்தது.
அதன் பின் கோள்களுக்கான சில சிறப்புகள் அதனிடம் இல்லை என்று காரணம் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
தற்போது, சூரியனை சுற்றி வரும் ''குறுங்கோள்கள்'' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. (MP சீட் பறிபோனாலும் MLA சீட்டாவது கிடைச்சேன்னு சந்தோசப்பட்டுக்க தல).
MLA சீட்டில் புளூட்டோ மட்டுமல்ல செரஸ், மேக் மேக், ஏரிஸ், ஹவ்மியே என்று பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களும் பிறகோள்களைப் போல சூரியனை சுற்றி வருபவர்கள்தான். ஆனால் நம் சந்திரனை விட அளவில் சிறியவர்கள். எனவேதான் இவர்களுக்கு MLA சீட். (பின்ன MP சீட்டிற்கு போட்டியிட ஒரு கெத்து வேண்டாமா).
புளூட்டோ - பயோடேட்டா.
தன்மை.
கரும்பாறைகளையும் அதன்மேல் பனிப்பாறைகளையும் கொண்ட குறுங்கோள். இது நம்முடைய சந்திரனைவிட அளவில் சிறியது. அதாவது 3 ல் 1 பங்கு பருமனையும் 6 ல் 1 பங்கு எடையையும் கொண்டுள்ளது.
Biodata.
சூரியனிடமிருந்து தொலைவு - 5,906,376,200 Km.
எதிரொளி திறன் - 0.3.
சூரியனை சுற்றும் வேகம் - 4.7490 Km /s.
சூரியனை சுற்றும் கால அளவு -248 வருடம் 197 நாள் 5 மணி.
தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 6 நாட்கள் 9 மணி 6 நிமிடம்.
புளூட்டோவின் வெப்பநிலை - -235 ⁰ to -170 ⁰
விடுபடு திசைவேகம் - 1.229 Km/s.
புளூட்டோவின் சராசரி ஆரம் -2,035 Km.
சுழல் அச்சு சாய்வு கோணம் -சூரியனை 17 ⁰ சாய்வு கோணத்தில் சுற்றி வருகிறது.
புளூட்டோவின் எடை - 1.305 × 10 ²² Kg.
பருமன் - 15.1 mag.
புளூட்டோவின் சராசரி அடர்த்தி - 2.05g /cm ³.
மேற்பரப்பு - 17 மில்லியன் Km².
மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 0.6 m/ s ².
மேற்பரப்பு அழுத்தம் - 0.01Kpa.
துணைக்கோள்.
இதற்கு 5 நிலவுகள் உள்ளன. அவையாவன சரோன், எஸ்2012 , நிக்சு , எஸ்2011 , ஐடுரா ஆகியன. இந்த 5 நிலவுகளில் '' சரோன் '' (Charon) என்னும் நிலவே மிகப்பெரியது.
வளிமண்டலம்.
வளிமண்டலத்தில் 90 % நைட்ரஜன், 10 % மீத்தேன் அடங்கியுள்ளன.
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.