"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நெப்டியூன் - பயோடேட்டா - Neptune bio data.

நெப்டியூன் - பயோடேட்டா - Neptune bio data.

Neptune biodata.

பெயர்க் காரணம் - ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயர் ''நெப்டியூன்''. கடலை போல் இதுவும் நீல நிறத்தைப் பெற்றுள்ளதால் கடல் கடவுளின் பெயரை இதற்கும் சூட்டிவிட்டனர்.


நெப்டியூன் - பயோடேட்டா.

நெப்டியூன் கிரகத்தின் சிறப்பு.

இது நமது சூரிய மண்டலத்திலுள்ள கடைசி கோள். அதாவது 8 வது கோள். முன்பு கடைசி கோளாக '' புளூட்டோ '' இருந்தது. தற்போது ஒழுங்கு நடவடிக்கைமூலம் விஞ்ஞானிகளால் புளூட்டோ தகுதிநீக்கம் செய்யப்பட்டு விட்டதால் கடைசி கிரகம் என்ற சிறப்பை நெப்டியூன் பெறுகிறது. 

இது சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் நான்காவது பெரிய கோளாகும். நீல நிறத்தை கொண்டுள்ளது.

தன்மை.

சனி கிரகத்தைப்போல் இதற்கும் ஓரளவு மெல்லிய வளைய அமைப்பு உண்டு. எல்லாக்கிரகங்களும் நீள்வட்டப்பாதையில் சுற்றிவர இதுமட்டும் ஏறத்தாழ வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.

இது 13 துணைக்கோள்களைப் பெற்றுள்ளது. இதனுடைய துணைக்கோளில் முக்கியமானது '' ட்ரைட்டன் '' (Triton).

Triton

எல்லாத்துணைக்கோள்களும் முன்பக்கமாக சுற்றிவரும்போது இதுமட்டும் ''என்வழி தனி வழி '' என்று சொல்லிக்கொண்டு ரிவர்ஸ் கியரில் பின்பக்கமாக சுற்றுகிறது. ம்ம்ம்.. சரியான குசும்பனா இருப்பான் போல..

Biodata.

சூரியனிடமிருந்து தொலைவு  - 4,498,252,900.கி.மீ . (30.07AU ).

சூரியனை சுற்றும் வேகம்  - 5.4778 Km /s.

சூரியனை சுற்றும் கால அளவு - ஒருமுறை சூரியனை சுற்றிவர 164 ஆண்டுகளும் 288 நாட்களும் 13 மணி நேரமும் எடுத்துக்கொள்கின்றன.

தன்னைத்தானே சுற்றும் கால அளவு  - 16 மணி 6.5 நிமிடம்.

நடுக்கோட்டில் பகல் நேர வெப்பநிலை -  -201⁰ C .

விடுபடு திசைவேகம் - 23.71 Km /s .

நெப்டியூனின் சராசரி ஆரம்   - 24,622 ± 19 Km.

நிலநடுக்கோட்டு ஆரம் - 24,764 ± 15 Km.

துருவ ஆரம் - 24,341 ± 30 Km.

நெப்டியூனின் மைய விட்டம் - 49,572 Km.

சுழல் அச்சு சாய்வு கோணம் -29 ⁰

வழி மண்டல அமுக்கம் - 100 - 300KPa

நெப்டியூனின் எடை  - 1.0243×10 ²⁶ Kg. (இது பூமியைவிட 17 மடங்கு அதிக எடை கொண்டது).

கன அளவு -  6.254 × 10¹³ Km.

நெப்டியூனின் சராசரி அடர்த்தி  -1.64 g /cm ³.

மேற்பரப்பு  - 7.65×10 ⁹ Km ².

ஈர்ப்பு விசை - 11m /s ².


Neptune_orbit

துணைக்கோள்கள்.

13 துணைக்கோள்களை கொண்டுள்ளன. இந்த துணைக்கோளில் மிக முக்கியமானது '' ட்ரைட்டன் ''.

வளிமண்டலம்.

84% ஹைட்ரஜன், 12 % ஹீலியம், 2% மீத்தேன், 0.01% அமோனியா ஆகிய வாயுக்களுடன் மேலும் சில பொருட்க்களும் அடங்கியுள்ளன.

உயிரின வாழ்க்கை.

இங்கு உயிரினங்கள் வாழ்வதற்களான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனெனில் இங்கு மணிக்கு 2000 கி . மீ வேகத்தில் புயல்கள் வீசிக்கொண்டிருக்கின்றன. புயல்களோடு சூறாவளியும் சேர்ந்து இதன் வளிமண்டலத்தைப் புரட்டி எடுக்கின்றன.

【】【】【】【】【】

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.