"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" பொது அறிவு துளிர் - Pothu arivu thulir - general knowledge.

பொது அறிவு துளிர் - Pothu arivu thulir - general knowledge.

Pothu Arivu Thulir.

General Knowledge.

பொது அறிவு என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவசியம் இருக்க வேண்டிய அடிப்படையான அதே வேளையில் தவிர்க்கமுடியாத அடிப்படை தகுதி.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படையான பொது அறிவு பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாருங்கள்!


பொது அறிவு துளிர்.

  • மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள உயர்ந்த சிகரம் - தொட்ட பெட்டா. 

  • இமயமலை தொடரின் நீளம் - 2560 கி.மீ.

  • எவெரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8848 மீட்டர்கள்.

  • ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு - 1945.

  • லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்க ரூபாய் நோட்டில் தடவப்படும் வேதிப்பொருள் - ஃபினோப்தலீன்.
  • கானல்நீர் தோன்ற காரணம் - முழு அக எதிரொளிப்பு.

  • இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் உள்ள இடம் - பெங்களூர் (Bangalore).

  • உலர் மின்கலங்கள் தயாரிக்க பயன்படும் பொருள் - மாங்கனீசு டை ஆக்ஸைடு.

  • அணுக்கரு உலையில் எலக்ட்ரான் கசிவை தடுக்க பயன்படும் தனிமம் - பெரிலியம். (Beryllium).

  • ஒலியை விட 6 மடங்கு வேகமாக செல்லும் விமானத்தின் பெயர் - சூப்பர் சானிக் வேவ்ரைமர்.

  • மிகப்பெரிய நட்சத்திரமான ஐ . ஆர் . எஸ் 5 நம்முடைய சூரியனைவிட எத்தனை மடங்கு பெரியது - 10,000 மடங்கு.

  • பூமிக்கு மேல் எத்தனை கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ளது - 410 கிலோ மீட்டர்.

Pothu_arivu_thulir

  • உலகின் இரண்டாவது மிக பெரிய சிகரம் - மவுண்ட் காட்வின் ஆஸ்டின். (Mount Godwin austen). 

  • பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பாலம் கட்டியுள்ள நாடு - ஸ்காட்லாந்து.(Scotland).

  • சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள் - வியாழன்( Jupiter ).

  • சுமோ என்னும் மல்யுத்த விளையாட்டு தோன்றிய நாடு - ஜப்பான். (Japan).

  • நமது சூரிய மண்டலத்தில் மிகவும் வெப்பமான கிரகம் - வீனஸ் (Venus).

  • நம் சூரிய குடும்பத்திலுள்ள திட கோள்கள் - புதன் Mercury) , வெள்ளி (Venus) , பூமி (Earth), செவ்வாய் (Mars) .

  • சூரிய குடும்பத்திலுள்ள வாயுக்கோள்கள் - வியாழன் (Jupiter) , சனி (Saturn) , யுரேனஸ் (Uranus)நெப்டியூன் (Neptune).

  • தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சுக்கருவியின் பெயர் என்ன - ஸ்கியூபா. (SCUBA - Self Contained Underwater Breathing Apparatus).

  • அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு - பிரான்ஸ்.(France).

  • 22 காரட் தங்கத்தில் தங்கத்தின் சதவீதம்  - 91.67%.

  • பட்டாசு தயாரிக்கப் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட். (Potassium nitrate).

  • பாலைவனம் இல்லாத கண்டம் - ஐரோப்பா. (Europa).

  • உலகின் மிகப்பெரிய தீவு - கிரீன்லாந்து. (Greenland).

  • கண்ணீர் புகையில் பயன்படுத்தப்படும் வாயு - குளோரோ அஸட்டோஃபினான்.

  • நிக்கல் உலோகத்தை கண்டறிந்தவர் - கிரான்ஸ்டட்.

  • ஒரு மின்னலின் சராசரி நீளம் - 6 கி . மீ.

  • கொடியில் தேச வரைபடத்தை கொண்ட நாடு - சைப்ரஸ். (Cyprus).

general_knowledge_Pothu_arivu_thulir

  • தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்ட மார்பிள் வகை - மக்ரானா. (Makrana).

  • சூரியனின் வயது - சுமார் 500 கோடி ஆண்டுகள்.

  • அலைநீளம் அதிகம் கொண்ட ஒளி அலை  - சிகப்பு.

  • காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன - சராசரியாக 70,000.

  • பைசா கோபுரம் கட்ட பயன்படுத்தியுள்ள கற்கள் - சலவைக்கல் (Marble).

  • இந்தியாவின் முதல் அணுஉலை - அப்சரா. (Apsara).

  • தாமிர சல்பைடின் நிறம் - கருப்பு.

  • இரும்பு கறைகளை போக்க பயன்படுவது - ஆக்சாலிக் அமிலம். (Oxalic Acid).

Pothu_arivu_thulir

  • கனிம எண்ணெய்  என்று அழைக்கப்படுவது - பெட்ரோல். (Petrol).

  • குளிர்சாதனப்பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு - பிரியான்.

  • சமையல் கேஸ் - ல் அடங்கியுள்ள வாயுக்கள் - பியுட்டேன் மற்றும் புரோப்பேன்.

இது மாதிரியான அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அருகிலுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>>"உணவுகளும் கரிம அமிலங்களும் - அறிந்து கொள்ள சில."<<

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்