Andrew john wiles.
வரலாற்று நாயகன்
ஆண்ட்ரூ வைல்ஸ்.
முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.
திரைகள் விலக்கப்பட்டன.
மர்மங்கள் உடைக்கப்பட்டன.
புதிர்கள் புரியவைக்கப்பட்டன.
எங்கே ? எப்போது ? யாரால்?
முன்னூறு வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த கணித புதிருக்கு அண்மையில் தீர்வுகண்டு உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பிய ஒரு கணித மேதையைப்பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
வரலாற்று நாயகன்.
ஆண்ட்ரூ வைல்ஸ்.
வாழ்க்கை குறிப்பு.
பெயர் :- ஆண்ட்ரூ ஜோன் வைல்ஸ். (Andrew john wiles).
பிறப்பு :- 1953 ஆண்டு, ஏப்ரல் 11.
தாயகம் :- பிரிட்டிஷ் (England).
தொழில் :- கணித மேதை.
சாதனை :- ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்தை (Fermat's Last Theorem) நிரூபித்தது.
விருதுகள் :- ஃபெர்மட் பரிசு (Fermat Prize), ராயல் பதக்கம் (Royal Medal), ஷா பரிசு (Shaw Prize) மற்றும் 10 க்கும் மேற்பட்ட விருதுகள்.
''பியர் தி ஃபெர்மா'' (Pierre de Fermat) என்பவர் 17 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சுக்காரர். அப்போது ஐரோப்பாவில் கணித மறுமலர்ச்சி நடந்து கொண்டிருந்த கால கட்டம். அச்சமயத்தில் இரண்டு முக்கியமான கணித புத்ததகங்கள் ஐரோப்பிய கணித மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன.
அவற்றில் ஒன்று ''யூக்ளிடு'' எழுதிய ஜியோமெட்ரி. மற்றொன்று ''டயோஃபாண்டஸ்'' எழுதிய அரிதமெடிகா என்ற புத்தகம். இது பல சமன்பாடுகளை உள்ளடக்கிய புத்தகம். அதில் ''பிதாகோரஸ் சமன்பாடு"ம் (Pythagoras Theorem) இடம்பெற்றிருந்தன.
பியர் தி ஃபெர்மா தினந்தோறும் டயஃபேண்டஸ் எழுதிய அரிதமெடிகா என்னும் நூலுடன் தான் தன் பொழுதை கழித்தார்.
பின்னாளில் கணித நூல் ஓன்றை பியர் தி ஃபெர்மா எழுதினார். அவர் எழுதிய நூலில் பிதாகோரஸ் சமன்பாட்டில் பல சமன்பாடுகளுக்கு தீர்வு உள்ளன. ஆனால் x ⁿ + y ⁿ = z ⁿ என்ற சமன்பாட்டில் n ≥ 3 என்ற கட்டத்தில் முழு எண்களின் தீர்வுக்கு சாத்தியமே இல்லை. அதற்கான அழகான நிரூபணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளேன் என்று எழுதினார்.
ஆனால் அதற்கான சமன்பாடு எதையும் சொல்லாமல் மனிதர் கண்ணை மூடிவிட்டார்.
இவரின் நூலை ஆராய்ந்த கணித உலகம் பரபரப்பானது. ஃபெர்மா சொன்னது உண்மைதானா? அல்லது சும்மாதான் சொல்லிவைத்து விட்டு போனாரா? அவரிடமே கேட்கலாம் என்றால் மனிதர் வேறு கண்ணைமூடி விட்டாரே... அவர் சொல்வது உண்மையென்றால் மனிதனால் கண்டுபிடிக்கும் அளவிற்கு இந்த தேற்றம் அவ்வளவு எளிதானதா? என்று கணித அறிஞர்கள் குழம்பித்தான் போனார்கள்.
இந்த குழப்பம் 300 வருடங்கள் நீடித்தது. இதையே ''ஃபெர்மா இறுதி தேற்றம்'' (Fermat's Last Theorem) என்று கணித உலகம் சொல்லி வந்தது.
எனவே 300 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த கணித புதிருக்கு யாராவது தீர்வு கண்டுபிடித்தால் அவர்களுக்கு ''ஏபல் பரிசு"டன் (Abel prize) ஆயிரம் பொற்காசுகள். இல்லை இல்லை 1 மில்லியன் டாலர் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்கள். 1 மில்லியன் டாலர் (1 million dollar) என்றால் எவ்வளவு தெரியுமா? சுமார் 5.6 கோடி ரூபாய் (5.6 crore rupees).
அண்மையில் 2016 ம் வருடம் இந்த ஏபல் பரிசு ஒரு வரலாற்று நாயகரான கணித மேதைக்கு வழங்கப்பட்டது. கூடவே 1 மில்லியன் டாலரும்தான்.
அடடே, யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்கிறீர்களா?. ஆம் அவர்தான் ஆண்ட்ரூ வைல்ஸ் - Andrew john wiles.
யார் இந்த ஆண்ட்ரூ வைல்ஸ் ?....
இவர் ஒரு மிக சிறந்த கணித மேதை. மற்றும் ஜீனியஸ்.
ஆண்ட்ரூ வைல்ஸ் 1953 ம் ஆண்டு, ஏப்ரல் 11 ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பிறந்தார். இவரது தந்தை மாரிஸ் (Maurice F.Wiles).
ஆண்ட்ரூ சிறுவயதிலேயே கணிதத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார். கடினமான கணக்கீடுகளுக்கு தானே விடை தேடும் முயற்சியில் தீவிர ஈடுபாடு செலுத்தினார். நூலகத்திற்கு சென்று கணிதம் சம்பந்தமான நூல்களை தேடி தேடி படிப்பதில் ஆர்வம் செலுத்தினார்.
இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கேம்பிரிட்ஜில் உள்ள ''கிங்ஸ்'' (King's) மற்றும் ''தி லேஸ்'' (The Leys) ல் தொடர்ந்தார்.
இவர் ஒருமுறை நூலகத்தில் கணித நூல்களின் தேடுதலில் இருந்த போது இவர் கையில் ''ஃபெர்மா இறுதி தேற்றம்'' (Fermat's Last Theorem) என்னும் நூல் சிக்கியது.
இது பல கணித சூத்திரங்களை கொண்டிருந்ததோடு இதில் ''ஃபெர்மா இறுதி தேற்றம்'' என்னும் சுமார் 300 ஆண்டு காலமாக விடைகாணமுடியாத கணித தேற்றத்தையும் கொண்டிருந்தன. இந்த நூல் ஆண்ட்ரூக்கு ஆவலை தூண்டின.
10 வயதே நிரம்பிய ஆண்ட்ரூ ''ஃபெர்மா இறுதி தேற்றம்'' (Fermat's Last Theorem) என்னும் இந்நூலிலுள்ள விடைகாண முடியாத கணிதத்திற்கு விடைகாணுவதே தன் வாழ்வின் முக்கிய லட்சியம் என முடிவு செய்தார்.
இவர் தன் கல்லூரி படிப்பை 1971 ல் ஆக்ஸ்போர்டில் உள்ள மெர்டன் (Merton) கல்லூரியில் பயின்றார். கணிதத்திற்கான இளங்கலை பட்டமும் பெற்றார். 1980 ல் கிளேர் (Clare) கல்லாரியில் தன்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பை முடித்தார்.
1981 ம் ஆண்டில் ஆண்ட்ரூ பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.
1988 ல் வைல்ஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் ராயல் சொசைட்டி ஆராய்ச்சி பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார். 1991 ல் மீண்டும் பிரின்ஸ்டன் பல்கலை கழகத்தில் பணியாற்றினார். 2011 ல் மீண்டும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
தனது 33வது வயதில் சிறுவயதில் ஆர்வத்தை தூண்டிய ஃபெர்மா இறுதி தேற்றத்தில் உள்ள சிக்கல்களுக்கு விடைகாணும் பொருட்டு மீண்டும் அதில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
1986 முதல் 1993 வரையான காலக்கட்டத்தில் இதற்காக அவர் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். 1993 ம் ஆண்டின் முற்பகுதியில் அவரின் கடின உழைப்புக்கு விடை கிடைத்தது.
1993 ல் இவர் தன் ஆராய்ச்சி முடிவை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டார். ஆனால் அவரது முடிவில் சில பிழைகள் இருப்பது சில மாதங்களில் கண்டறியப்பட்டதால் அவரது ஆராய்ச்சி முடிவுகள் நிராகரிக்கப்பட்டன.
ஏமாற்றமடைந்த அவர் மீண்டும் முழுமையான தீர்வு கண்டறியும் பொருட்டு மிக கடுமையாக உழைத்தார். சதா சர்வகாலமும் இதைப்பற்றிய சிந்தனையாகவே இருந்தார். அதற்கான பலன்1 வருடத்தில் அவருக்கு கிடைத்தது.
1994 செப்டம்பரில் முழுமையாக கண்டறிந்த தீர்வினை அறிஞர்கள் மத்தியில் வெளியிட்டார். அறிஞர்கள் உலகம் அதை ஏற்றுக்கொண்டது.
உலகின் தலை சிறந்த கணித அறிஞர்களால் கூட இவருடைய தேற்றத்தில் எந்தவித தவறுகளையும் கண்டறிய முடியவில்லை. எனவே இவர் புகழ் உலகெங்கும் வேகமாக பரவியது. இது இவரது விடா முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.
ஃபெர்மா இறுதி தேற்றத்தில் இவர் படைத்த சாதனையை பாராட்டி இவருக்கு 2016 ம் ஆண்டில் "ஏபல் பரிசு" (Abel prize) வழங்கி கவுரவிக்கப்பட்டது. கூடவே 1 மில்லியன் டாலரும்தான். இங்கிலாந்தின் அரச குடும்பமும் இவருடைய சாதனையை பாராட்டி இவருக்கு ''சர் '' பட்டம் கொடுத்து கவுரவித்தது.
ஏபல் பரிசு (Abel prize) என்பது நோபல் பரிசுக்கு (Nobel Prize) இணையானது. 19 ம் நூற்றாண்டில் நார்வே (Norway) நாட்டில் வாழ்ந்த மிக சிறந்த கணிதவியலரான '' நீல்ஸ் ஹென்றிக் ஏபெல்'' (Niels Henrik Abel) என்பவரின் நினைவாக நார்வே மன்னரால் (King of Norway) ஆண்டுதோறும் கணித மேதைகளுக்கு வழங்கப்படும் உயரிய விருது.
இவ்விருது 2003 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இதுவரையில் 25 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் கட்டுரையின் வரலாற்று நாயகனான ஆண்ட்ரூ வைல்ஸ் (Andrew john wiles) ஏபல் பரிசு மட்டுமல்லாமல் வெவ்வேறு காலகட்டங்களில் பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். அவையாவன.
Tamil | English | Year |
---|---|---|
ஒயிட்ஹெட் பரிசு | Whitehead Prize | 1988 |
ரோல்ஃப் ஷாக் பரிசு | Rolf Schock Prize | 1995 |
ஆஸ்ட்ரோவ்ஸ்கி பரிசு | Ostrowski Prize | 1995 |
ஃபெர்மட் பரிசு | Fermat Prize | 1995 |
ஊல்ப் பரிசு | Wolf Prize | 1996 |
ராயல் பதக்கம் | Royal Medal | 1996 |
NAS விருது | NAS Award in Mathematics | 1996 |
தேசிய அறிவியல் அகாடமி | National Academy of Sciences | 1996 |
கோல் பரிசு | Cole Prize | 1997 |
மேக் ஆர்தர் பெல்லோஷிப் | Mac Arthur Fellowshio | 1997 |
வொல்ஃப்ஸ்கெல் பரிசு | Wolfskehl Prize | 1997 |
IMU சில்வர் பிளெக் பரிசு | IMU Silver Plaque | 1998 |
கிங் பைசல் பரிசு | King Faisal International Prize in Science | 1998 |
ஷா பரிசு | Shaw prize | 2005 |
ஏபெல் பரிசு | Abel prize | 2016 |
கோப்லி பதக்கம் | Copley Medal | 2017 |
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.