"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" உலக பொது அறிவு தகவல்கள் - General Knowledge - Tamil.

உலக பொது அறிவு தகவல்கள் - General Knowledge - Tamil.

World General Knowledge Information.

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது அறிவியல் யுகம். நாம் இதுவரையில் அறியாத பல விஷயங்களுக்கும், புரியாத பல புதிர்களுக்கும் அறிவியலானது நுணுகி ஆராய்ந்து அதற்கான விடைகளை  கண்டறிந்து நமக்கு கொடுத்துள்ளது.


இன்றைய காலகட்டத்தில் அறிவியல் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்வும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டே நகர்த்தப்படுகின்றன என்றால் அது மிகையில்லை.

அவ்வாறான தனித்தன்மை வாய்ந்த அறிவியலின் சில புரிதல்களை பொது அறிவு பதிவுகளாக இப்பகுதியில் பார்ப்போம்.

உலக பொது அறிவு தகவல்கள்.

  • மிக லேசான தனிமம் - ஹைட்ரஜன். (Hydrogen). 

  • பழங்களை செயற்கை முறையில் பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் வாயு - எத்திலீன். (Ethylene).

  • நவீன விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் - சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய். (Kerosene).

  • நிலவில் அதிக அளவில் காணப்படும் தாதுப்பொருள் - டைட்டானியம். (Titanium).

General Knowledge - titanium

  • கார்பன் பிளாக் ( carbon black ) செய்யப் பயன்படுவது - மீத்தேன். (Methane).

  • கொள்ளிவாயு ( சதுப்புநில வாயு ) என அழைக்கப்படுவது - மீத்தேன். (Methane).

  • கிராபைட்டின் உருகுநிலை - 3700 ⁰ C.
  • ஆல்கஹாலின் கொதிநிலை 79 ⁰ C.

  • இரும்பை தங்கமாக மாற்றும் தொழில் நுட்பம் - அல்கெமி ( Alchemy )

  • பூமிக்கு மிக அருகாமையிலுள்ள அண்டம் - அன்ட்ரோமேடா. (Andromeda Galaxy).

  • பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் போது வெளிப்படும் வாயு - டையாக்சின். (Dioxin).

  • டிரான்சிஸ்டர்கள் தயாரிக்கப் பயன்படும் தனிமம் - சிலிக்கான். (Silicon).

  • பெயிண்ட் தயாரிக்க பயன்படும் உலோகம் - அலுமினியம். (Aluminum).

  • சூரியனில் பெருமளவில் காணப்படும் வாயு - ஹீலியம். (Helium).

  • குழாய் மின்விளக்கில் பயன்படுத்தப்படும் வாயு - பாதரசம் ஆவி. (Mercury Vapour lamp).

  • திரைப்பட சுருளில் ஒலி எந்த வகையில் பதிவு செய்யப்படுகிறது - ஒளி குறீயீடுகளாக.

General Knowledge Tamil

  • சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் - 27.32 நாட்கள்.

  • கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து. (Plaster of Paris).

  • உலர் பேட்டரி தயாரிக்க உதவும் ரசாயன பொருள் - அமோனியம் குளோரைடு. (Ammonium Chloride).

  • அணுகுண்டு வேலை செய்யும் தத்துவம் - அணுக்கரு பிளவு. (Nuclear fission).

இதுமாதிரியான அறிவியல் சார்ந்த பொது அறிவு தகவல்களை அறிந்துகொள்ள விருப்பமா? அருகிலுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>> "தகவல் களஞ்சியம் - விருதுகள் - general knowledge - Awards."<<

💦💦💦💦💦💦💦

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்