ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தத்துவங்கள்.
Albert Einstein thathuvangal.
இவ்வுலகில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக வலம் வந்தவர் என்பது நாம் அறிந்ததே. இவருடைய ஒளியைப் பற்றிய சார்பு நிலை கோட்பாடு என்னும் "ரிலேட்டிவிட்டி தியரி" (Theory of relativity) உலகப்புகழ் பெற்றது.
அவருடைய தியரி மட்டுமல்ல அவ்வப்போது அவருடைய அதரத்திலிருந்து உதிர்ந்த சில வார்த்தைகள்கூட வாழ்க்கைத் தத்துவங்களாக மாறி உலகப்புகழ் பெற்றுள்ளன. அவ்வாறான சில தத்துவங்களைத்தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
பெயர் :- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்- Albert Einstein.
பிறப்பு :- 1879 ம் ஆண்டு, மார்ச் 14 - உல்ம், ஜெர்மனி.
தாயகம் :- ஜெர்மன் - Germany.
தொழில் :- அறிவியல் ஆராய்ச்சி.
துறை :- இயற்பியல் - Physics.
சாதனை :- விஞ்ஞானி, அணுயுகத்தின் தந்தை என போற்றப்பட்டவர்.
விருதுகள் :- இயற்பியலுக்கான நோபல் பரிசு (1921).
குழந்தைகள் :- மூன்று குழந்தைகள்.
இறப்பு :- 1955 ம் ஆண்டு, ஏப்ரல் 18. தன்னுடைய 76 வது வயதில் நியூ ஜெர்சியில் (New Jersey) காலமானார்.
Albert Einstein thathuvangal.
- ஒருவன் வேகமாக முன்னால் உள்ள தடைகளை தாண்டிக் குதிக்க நினைத்தால் அவன் கண்டிப்பாக சிறிது பின்னோக்கி சென்றால் மட்டுமே அது சாத்தியமாகும். அதுபோல ஒருவன் வாழ்வில் சிறப்பான வெற்றியை அடைய விரும்பினால் அவன் அதற்கு முன்னால் சிறிதேனும் தோல்விகளை சந்தித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
- தோல்விகளுக்கு மத்தியில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
- என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை... என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே.
- என்னால் எதுவுமே சாதிக்க முடியாது என்று ஏளனம் பேசியவர்களுக்கு நன்றி. ஏனெனில் அந்த ஏளனமான பேச்சுக்கள்தான் என்னை சாதிக்க தூண்டின.
- ஒருவர் இதுவரை வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கவில்லை என்றால் அவர் வாழ்க்கையில் முயற்சி செய்வது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்றே பொருள்.
- ஒரு விஷயத்தை பிறருக்கு புரியும்படி உங்களால் விளக்கமுடியவில்லை என்றால் அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியவில்லை என்பதே உண்மை.
- பிறருடைய உரிமைகளை மதிக்கத்தெரியாதவன் கற்ற கல்வியால் அவனுக்கோ அல்லது அவன் சமுதாயத்திற்கோ எந்த பயனும் இல்லை.
- சிந்திக்கத்தெரியாதவன் கற்ற கல்வியால் எந்த பயனும் இல்லை. அறிவின் ஆணிவேர் நீ கற்கும் கல்வி அல்ல. மாறாக உனக்குள் எழும் உயர்வான சிந்தனைகளும், கற்பனை வளங்களும் மட்டுமே.
- உன் முயற்சிகளை நீ கைவிடாதவரை, தோல்விகள் உன்னை வெற்றிகொள்வதில்லை.
- தவறு செய்பவர்களைவிட அதை வேடிக்கை பார்ப்பவர்களே உண்மையில் கொடூரமானவர்கள்.
- நம்முடைய எல்லைகளை நாம் முதலில் அறிய முற்பட வேண்டும். அப்போதுதான் அதை தாண்டி செல்லவேண்டும் என்னும் எண்ணத்தையும் அதற்கான வலிமையையும் நாம் பெறுவோம்.
2 கருத்துகள்
தத்துவங்கள் அருமை.
பதிலளிநீக்குKILLERGEE Devakottai .. நன்றி நண்பரே!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.