Prime Minister of India.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரத பிரதமர்களாக இந்திய தேசத்தை அரசாண்டுள்ளனர். அவ்வாறு பதவி வகித்த தேசிய தலைவர்களைப்பற்றி இந்த பதிவில் விரிவாகக் காண்போம்.
பாரதம் கண்ட பாரதப் பிரதமர்கள்.
திரு. ஜவஹர்லால் நேரு.
பிறப்பு :- 1889 ம் ஆண்டு நவம்பர் 14 ல் உத்திரபிரதேச மாநிலம் - அலகாபாத்தில் (Allahabad) பிறந்தார்.
கட்சி :- இந்திய தேசிய காங்கிரஸ் - Indian National Congress.
பதவிக்காலம் :- 1947ஆகஸ்ட்15ல் முதன் முதலாக பிரதமராகப் பதவி ஏற்றார். 1964 மே 27 வரையில் தொடர்ந்து பிரதமராக நீடித்தார். இவர் பதவிவகித்த மொத்த நாட்கள் 6,131.
சாதனை :- இந்தியாவின் முதல் பிரதமர். பஞ்சசீல கொள்கையை (Panchsheel Agreement) வகுத்தவர். அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கியவரும் இவரே. ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்படாத அதே வேளையில் பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதான கோவா (Goa), புதுச்சேரி (Puducherry) பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது இவரது ஆட்சிக்காலத்தில்தான்.
இவர் எழுதிய ''டிஸ்கவரி ஆஃப் இந்தியா'' (The discovery of India) என்னும் நூல் உலகப்புகழை எட்டியது.
மறைவு :- 1964 ம் ஆண்டு.
திரு. குல்சாரி லால் நந்தா.
பெயர் :- குல்சாரி லால் நந்தா - Gulzarilal Nanda.
பிறப்பு :- 1898 ஜூலை 4 ம் தேதி பஞ்சாப்பில் உள்ள ''சியல்கோட்'' (Punjab - Sialkot) என்னும் இடத்தில் பிறந்தார். தற்போது இவ்விடம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக (Pakistan place) உள்ளது.
கட்சி :- இந்திய தேசிய காங்கிரஸ் - Indian National Congress.
பதவிக்காலம் :- 1964 ல் பிரதமர் ஜவகர்லால் மறைவின் போது இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1964மே 27 முதல் ஜூன் 9 வரை வெறும் 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் அமர்த்தப்பட்டார். அதன் பின் லால் பகதூர் சாஸ்திரி (Lal Bahadur Shastri) பிரதமரானார்.
1966 ல் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி மறைவின்போது மீண்டும் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போதும் 1966 ஜனவரி 11 முதல் ஜனவரி 24 வரை வெறும் 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
அதன் பின் இந்திராகாந்தி (Indira Gandhi) பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பிரதமராக பதவி வகித்த மொத்த நாட்கள் 26.
சாதனை :- சுதந்திர போராட்ட வீரர். 1946 முதல் 1950 வரை மும்பை மாகாண அரசவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் நேரு அமைச்சரவையில் நீர்பாசனத்துறை, மின்சாரத்துறை முதலியவைகளில் அமைச்சராக பணியாற்றினார்.
விருதுகள் :- பாரத ரத்னா - Bharat Ratna award.
மறைவு :- 1998 ம் ஆண்டு ஜனவரி மாதம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் (Gujarat - Ahmedabad) காலமானார்.
திரு. லால் பகதூர் சாஸ்திரி.
பெயர் :- லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri.
பிறப்பு :-1904 ம் ஆண்டு அக்டோபர் 2 ல் உத்திரபிரதேசம் மாநிலம் - முகல்சராய் என்னும் ஊரில் பிறந்தார்.
கட்சி :- இந்திய தேசிய காங்கிரஸ்.
பதவிக்காலம் :- 1964 ம் ஆண்டு ஜூன் 9 முதல் 1966 ஜனவரி 11 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் பிரதமராக பதவி வகித்த மொத்த நாட்கள் 582.
சாதனை :- இந்திய பசுமைப்புரட்சி மற்றும் தேசிய பால்துறை வளர்ச்சி வாரியம் உருவாக்கியது.
மறைவு :- 1966 ம் ஆண்டு மறைந்தார். இவர் சோவியத் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட்டில் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது காலமானார்.
திருமதி. இந்திரா காந்தி.
பெயர் :- இந்திரா காந்தி - Indira Gandhi.
பிறப்பு :- 1917 ம் ஆண்டு நவம்பர் 19 ல் உத்திரப் பிரதேசத்திலுள்ள அலகாபாத்தில் பிறந்தார்.
கட்சி :- காங்கிரஸ்.
பதவிக்காலம் :- 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலும், 1980 ஜனவரி 14 முதல் 1984 அக்டோபர் 31 வரையிலும் பிரதமராகப் பதவிவகித்தார். இவர் பிரதமராகப் பதவிவகித்த மொத்த நாட்கள் 5,831.
சாதனை :- முதல் இந்தியப் பெண் பிரதமர். இவரது ஆட்சியில் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. பாகிஸ்தானிலிருந்து ''வங்காள தேசம்'' என்னும் தனி நாடு உருவாக காரணமாக இருந்தார். ''சிம்லா'' ஒப்பந்தம் கையெழுத்தானதும் இவர் ஆட்சியில்தான். இவரது ஆட்சியில்தான் 1974 ல் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
மறைவு :- 1984 ம் ஆண்டு மறைந்தார்.
திரு. மொரார்ஜி தேசாய்.
பிறப்பு :- 1896ம் ஆண்டு பிப்ரவரி 29 அன்று குஜராத்திலுள்ள "பதேலி" கிராமத்தில் பிறந்தார்.
கட்சி :- ஜனதா கட்சி.
பதவிக்காலம் :- 1977 மார்ச் 24 முதல் 1979 ஜுலை 15 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் 2 ஆண்டுகள் 126 நாட்கள் பதவியில் இருந்தார்.
சாதனை :- பாகிஸ்தான், சீனா, சோவியத் ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதலியவைகளுடன் நல்லுறவை மேம்படுத்தினார்.
விருதுகள் :- இந்தியாவின் உயரிய விருதான ''பாரத ரத்னா'', மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான ''நிஷான்-இ-பாக்கிஸ்தான்'' விருது.
மறைவு :- 1995 ம் ஆண்டு மறைந்தார்.
திரு. சரண் சிங்.
பெயர் :- சரண் சிங் - Charan Singh.
பிறப்பு :- 1902 ம் ஆண்டு டிசம்பர் 23 ல் உத்திரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்திலுள்ள "நூர்பூர்" என்னும் கிராமத்தில் பிறந்தார்.
கட்சி :- ஜனதா கட்சி.
பதவிக்காலம் :- 1979 ஜூலை 28 முதல் 1980 ஜனவரி 14 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் பதவியிலிருந்தது மொத்தம் 170 நாட்கள்.
சாதனை :- இஸ்ரேலுடன் தூதரக உறவை ஆரம்பித்து வைத்த பெருமை இவரைச்சேரும்.
மறைவு :- 1987 ம் ஆண்டு மறைந்தார்.
திரு. ராஜீவ் காந்தி.
பெயர் :- ராஜீவ் காந்தி - Rajiv Gandhi.
பிறப்பு :- 1944 ம் ஆண்டு ஆகஸ்ட் 20 ல் மும்பையில் பிறந்தார்.
கட்சி :- இந்திய தேசிய காங்கிரஸ்.
பதவிக்காலம் :- 1984 அக்டோபர் 31 முதல் 1989 டிசம்பர் 2 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் மொத்தம் 5 ஆண்டுகள் 32 நாட்கள் பதவி வகித்தார்.
சாதனை :- இந்தியா - இலங்கை ஒப்பந்தம் இவருடைய ஆட்சியில்தான் கையெழுத்தானது. மேலும் இவருடைய ஆட்சியில்தான் இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை அபார வளர்ச்சியைக் கண்டது.
விருதுகள் :- பாரத ரத்னா.
மறைவு :- 1991 ம் ஆண்டு மே 21 ல் மறைந்தார்.
திரு. வி. பி. சிங்.
பெயர் :- விஷ்வநாத் பிரதாப் சிங் - Vishwanath Pratap Singh.
பிறப்பு :- 1931 ம் ஆண்டு ஜூன் 25 ல் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள "அலகாபாத்" என்னும் இடத்தில் பிறந்தார்.
கட்சி :- ஜனதா தளம்.
பதவிக்காலம் :- 1989 டிசம்பர் 2 முதல் 1990 நவம்பர் 10 வரை பிரதமராக பதவி வகித்தார்.
சாதனை :- இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படையை திரும்ப பெற்றது. பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் நிலையான இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவர முயற்சி எடுத்தது.
மறைவு :- 2008 ம் ஆண்டு நவம்பர் 27 ல் மறைந்தார்.
திரு. சந்திர சேகர்.
பிறப்பு :- 1927 ம் ஆண்டு ஜூலை 1 ல் உத்திரப்பிரதேச மாநிலம் - பாலியா மாவட்டத்தில் "இப்ரா" என்னும் ஊரில் பிறந்தார்.
கட்சி :- சமாஜ்வாதி ஜனதா கட்சி.
பதவிக்காலம் :- 1990 நவம்பர் 10 முதல் 1991 ஜூன் 21 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் மொத்தம் பதவியிலிருந்த நாட்கள் 223 நாட்கள்.
மறைவு :- 2007 ம் ஆண்டு ஜூலை 8 ல் டில்லியில் காலமானார்.
திரு. பி. வி. நரசிம்ம ராவ்.
பெயர் :- பமுலபர்ட்டி வெங்கட்ட நரசிம்ஹ ராவொ - P.V. Narasimha Rao.
பிறப்பு :-1921 ம் ஆண்டு ஜூன் 28 ல் ஆந்திர மாநிலம் "கரீம்" என்னும் நகரில் பிறந்தார்.
கட்சி :- காங்கிரஸ்.
பதவிக்காலம் :- 1991 ஜுன் 21 முதல், 1996 மே 16 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் மொத்தம் பதவியிலிருந்த காலஅளவு 4 ஆண்டுகள் 330 நாட்கள்.
சாதனை :- இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவர முயன்றது இவரது சாதனை எனலாம். மேலும் 'செபி' மற்றும் இந்திய தேசிய பங்குசந்தை உருவாக்கியது.
மறைவு :- 2004 ம் ஆண்டு டிசம்பர் 23 ல் மறைந்தார்.
திரு. வாஜ்பாய்.
பிறப்பு :- 1924 ம் ஆண்டு டிசம்பர் 25 ல் மத்தியபிரதேச மாநிலம் "குவாலியர்" என்னும் இடத்தில் பிறந்தார்.
கட்சி :- பாரதீய ஜனதா கட்சி.
பதவிக்காலம் :- இவர் 3 முறை பிரதமராக பதவியேற்று உள்ளார். முதல் முறையாக 1996 மே 16 முதல் 1996 ஜூன் 1 வரையில் 16 நாட்கள் மட்டுமே பிரதமராக பதவி வகித்தார். மீண்டும் தொடர்ச்சியாக இருமுறை பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரையில் பிரதமராக சிறப்பாக பணியாற்றினார். மொத்தம் 6 ஆண்டுகள் 64 நாட்கள் பதவியிலிருந்தார்.
சாதனை :- இவர் உலகம் முழுவதும் அறிந்த ஒரு தலைவராக விளங்கினார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் குமரி முதல் காஷ்மீர் வரையிலான "தங்க நாற்கரசாலை" என்னும் பெயரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. சாலை மேம்பாட்டு துறையும் தகவல் தொழில்நுட்ப துறையும் வேகமாக வளர்ச்சி கண்டது. மேலும் "போக்ரான் அணுகுண்டு சோதனை" வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதும் இவரது ஆட்சியில்தான் .
விருதுகள் :- பாரத ரத்னா.
மறைவு :- 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ல் மறைந்தார்.
திரு. தேவ கௌடா.
பிறப்பு :-1933 ல் மே 18 ல் கர்நாடக மாநிலம் - ஹர்டன ஹள்ளி.
கட்சி :- ஜனதா தளம்.
பதவிக்காலம் :- 1996 ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் மொத்தம் 324 நாட்கள் பதவியில் இருந்தார்.
திரு. I . K . குஜ்ரால்.
பிறப்பு :-1919 ம் ஆண்டு டிசம்பர் 4 ல் பஞ்சாப் மாநிலம் - ஜீலம் என்ற ஊரில் பிறந்தார். இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது.
கட்சி :- ஜனதா தளம்.
பதவிக்காலம் :-1997 ஏப்ரல் 21 முதல் 1998 மார்ச் 19 வரை பிரதமராக பதவி வகித்தார். இவர் பிரதமராக பதவியிலிருந்தது மொத்தம் 332 நாட்கள்.
திரு. டாக்டர். மன்மோகன் சிங்.
பிறப்பு :- 1932 ம் ஆண்டு செப்டம்பர் 26 ல் பஞ்சாப்பிலுள்ள ''கா'' என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது.
கட்சி :- இந்திய தேசிய காங்கிரஸ்.
பதவிக்காலம் :- 2004 மே 22 முதல் 2014 மே 26 வரை தொடர்ந்து பதவியில் நீடித்தார். இவர் மொத்தம் 10 ஆண்டுகள் 4 நாட்கள் பதவியில் நீடித்தார்.
சாதனை :- உலகப்புகழ்பெற்ற பொருளாதார மேதை. இவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மற்றும் தகவல் பெறும் உரிமை சட்டம் கொண்டுவந்தது ஆகியன இவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனை எனலாம்.
திரு. நரேந்திர மோதி.
பிறப்பு :- 1950 ம் ஆண்டு செப்டம்பர் 17 ல் குஜராத் மாநிலம் - வாட் என்னும் நகரில் பிறந்தார்.
கட்சி :- பாரதீய ஜனதா கட்சி.
பதவிக்காலம் :- 2014 மே 26 முதல் பிரதமராக பதவி ஏற்று இன்று வரை ஆட்சியில் நீடிக்கிறார்.
சாதனை :- இந்திய அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து அரியணை ஏறிவரும் பிரதமர்.
மிகச் சிறந்த தேச பற்றாளர். அனைத்துலக மக்களின் அன்பையும் சம்பாதித்துக் கொண்டவர். உலகின் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என அனைத்துலக தலைவர்களால் பாராட்டப்படுபவர்.
தேசத்துரோகிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் தூக்கத்தை கெடுத்தவர்.
தேசத்துரோகிகளையும், பிரிவினைவாதிகளையும், வெளிநாட்டு கைக்கூலிகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.
இந்தியாவின் உள் கட்டமைப்பை மிக சிறப்பாக மேம்படுத்தி வருபவர். ''ஜெய் பாரத் மாதா கி'' என்கிற முழக்கத்துடன் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக கொண்டு வருவதையே தன் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகக்கொண்டு 2014 முதல் தற்போது வரை பிரதமராக இயங்கி வரும் ஒரு தலை சிறந்த நிர்வாகி.
4 கருத்துகள்
சிறப்பான தகவல்கள்.
பதிலளிநீக்குஸ்ரீராம்...நன்றி!
நீக்குஆயிரத்து தொள்ளாயிரத்து அன்று வரலாறு பாடநூல் படித்த உணர்வுகள் வந்து போனது....
பதிலளிநீக்குபூந்தோட்ட கவிதைக்காரன் ... உங்கள் உணர்வுகளும், கருத்துகளும் மனதிற்கு புத்துணர்ச்சியை அளித்தன நண்பரே.... நன்றி! ...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.