யுக புருஷர் மோடி ஜி !!!.
உலகின் நாயகனாக திகழும் அதேவேளையில் பாரதத்தாயின் வெற்றித் திருமகனாகவும் திகழும் ''மோடிஜி'' (Modiji) அவர்களின் அளப்பரிய வெற்றிக்கு இச்சிறிய பதிவை காணிக்கையாக்குகிறோம்.
பாரத் மாதாகி ஜே !!!
இந்திய அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் அமோக ஆதரவுடனும் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடனும் தொடர்ந்து அரியணை ஏறிவரும் பெருமைமிகு பிரதமர்.
அனைத்துலக மக்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்ட உன்னத தலைவர். மிகச்சிறந்த தேச பற்றாளர். வசீகரிக்கும் தன்மை கொண்ட மிகச்சிறந்த பேச்சாளர். உலகின் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் என உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
நம் பாரத தேசத்தின் புல்லுருவிகளான தேச துரோகிகளையும், பிரிவினைவாதிகளையும், வெளிநாட்டு கைக்கூலிகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.
''ஜெய் பாரத் மாதா கி'' என்கிற முழக்கத்துடன் இந்தியாவின் உள் கட்டமைப்பை மிக சிறப்பாக மேம்படுத்தி வருபவர்.
இந்தியாவை உலகின் முன்னணி நாடாக கொண்டு வருவதையே தன் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகவும், இலட்சியமாகவும் கொண்டு 2014 முதல் தற்போது வரை பிரதமராக இயங்கி வரும் ஒப்பற்ற தலை சிறந்த நிர்வாகி.
பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திக்காட்டி ஒவ்வொரு இந்தியனையும் கர்வம் கொள்ளச்செய்த பாரதத்தின் ஒப்பற்ற தலைவனின் நல்லாட்சி மேன்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்!
6 கருத்துகள்
இணைந்து வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம்.... நன்றிகள் பல!...
நீக்குவாழ்த்துகள் ...!!!
பதிலளிநீக்குபூந்தோட்ட கவிதைக்காரன் ... நன்றி!
நீக்குஇவரது ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் மக்களுக்கு நல்லது.
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறோம் நண்பரே. ஆனால் ... வீட்டிற்குள் கோவணத்தைக் கட்டிக்கொண்டு எளிமை என்கிற பெயரில் வாழ்ந்து விடலாம் என்பது உண்மைதான். ஆனால் வெளியுலக வாழ்க்கையில் சில விஷயங்களை சாதித்துக் கொள்வதற்கு எளிமை மட்டுமல்ல சிறிதளவு ஆடம்பரமும் அவசியமாகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நண்பரே... என் கருத்து தவறென பட்டால் மன்னிக்கவும்.
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.