"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" தகவல் களஞ்சியம் - Takaval Kalanciyam - General knowledge.

தகவல் களஞ்சியம் - Takaval Kalanciyam - General knowledge.

Takaval kalanciyam.

General knowledge.

தொழில்துறையில் ரசாயனத்தின் பங்கு மிக முக்கியமானது. அறிவியல் ஆய்வுகளுக்கும் இதன் பங்களிப்பு மிக அவசியம். நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இரசாயனத்தின் மாறுபட்ட வடிவமே.

எனவே சில இரசாயனப்பொருள்களின் தன்மையையும், அது நமக்கு பயன்படும் விதத்தையும் பொதுஅறிவு துணுக்குகளாக அறிந்துகொள்வோம் வாருங்கள்.

தகவல் களஞ்சியம்.

  • நெருப்பை அணைக்கப் பயன்படுத்தும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு. [carbon dioxide].

  • மின்சாரக்  கசிவால் ஏற்படும் தீயை அணைக்கப் பயன்படும் வேதிப்பொருள் - டெட்ரா குளோரைடு.[tetra chloride].

  • மணலின் அறிவியல் பெயர் - சிலிகான் டை ஆக்ஸைடு. [Silicon Dioxide].

  • உலோகங்களை பற்றவைக்க பயன்படுத்தப்படும் வாயு - அசிட்டிலின். [Acetylene].

  • கேண்டி திரவம் என சொல்லப்படுவது - பொட்டாசியம் பர்மாங்கனேட்.

  • ஐஸ் தயாரிக்கும் கூடங்களில் குளிர்விப்பானாக பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்.

  • எரி பொட்டாஷ் - ன் வேதி பெயர் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

  • இனிய மணத்தைக் கொண்ட வாயு - நைட்ரஜன் ஆக்ஸைடு.

  • குளோரின் வாயுவின் நிறம் - பச்சை கலந்த மஞ்சள்.

  • சிறுநீரகத்தில் கற்களாக உருவாகும் பொருள் - கால்சியம் ஆக்சலேட்.

  • மெர்க்குரியின் (பாதரசம் ) முக்கிய தாது -  சின்னபார்.

  • கம்போஸ்ட் உரம் என்பது எதை குறிக்கிறது - ஒன்றிற்கு மேற்பட்ட உரங்கள் ஒன்றாக கலக்கப்பட்ட கலவை உரம்.

  • சூரியனில் அதிகமாக காணப்படும் மூலப்பொருள் - ஹைட்ரஜன்.
  • அணுக்களில் மிகவும் லேசானது - ஹைட்ரஜன் அணு. [Hydrogen atom].

  • வெள்ளை துத்தம் என அழைக்கப்படுவது - ஜிங்க் சல்பேட்.

  • காஸ்டிக் சோடாவின் வேதி பெயர் - சோடியம் ஹைட்ராக்சைடு.

  • வேதிப்பொருள்களின் அரசன் - கந்தக அமிலம். [Sulfuric acid].

  • அமில நீக்கியாக பயன்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு. 

  • காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

  • காற்று மண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு - நைட்ரஜன். [Nitrogen].

Nitrogen

  • குளியல் சோப்பில் பயன்படுத்தப்படும் காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு. 

  • மயில் துத்தம் என்பதின் வேதி பெயர் - காப்பர் சல்பேட்.

  • எப்சம் உப்பின் வேதி பெயர் - மெக்னீசியம் சல்பேட்.

  • மோர்ஸ் உப்பின் வேதி பெயர் - சோடியம் சல்பேட்.

  • குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு - அமோனியா.[Ammonia].

  • எரிசோடாவின் வேதி பெயர் -  சோடியம் ஹைட்ராக்ஸைடு.

  • ''மார்ஷ் வாயு'' என அழைக்கப்படுவது - மீத்தேன்.

  • கண்ணாடியில் ரசம் பூச பயன்படுத்தப்படும் கரிம சேர்மம் - அஸிட்டால்டிஹைடு.

  • சமையல் சோடாவுடன் டார்டாரிக் அமிலம் கலந்தால் கிடைக்கும் கலவை - ரொட்டி சோடா.

  • ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் மற்றொரு பெயர் - மியுரியாடிக் அமிலம் [Muriatic Acid].

  • சோடா பானம் தயாரிக்க பயன்படுத்தும் வாயு - கார்பன் டைஆக்சைடு.
  • தாவரங்கள் வளர மிகவும் இன்றியமையாத வாயு - நைட்ரஜன்.

  • குழாய் மின்விளக்கில் பயன்படுத்தப்படும் வாயு - பாதரசம் ஆவி.

  • கடினநீரை மென்னீராக்கப் பயன்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்.

  • பூமியில் அதிக அளவில் உள்ள வாயு - நைட்ரஜன்.

  • இரும்பைவிட கனமான வாயு - ராடான்.
  • கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் அமிலம் - நீர்த்த கந்தக அமிலம்.

  • அதிக காரத்தன்மையுடைய சேர்மம் - எத்தில் அமின்.

  • அதிக எலக்ட்ரானை கவரும் தனிமம் -  ஃபுளூரின்.

  • விளம்பர விளக்குகளில் பயன்படுத்தப்படும் வாயு - நியான்.[ Neon ].

Neon

  • காரங்கள் நீரில் கரைவதால் கிடைக்கும் அயனி - ஹைடிராக்ஸைடு அயனி.

  • கடினநீரை மெந்நீராக மாற்றப் பயன்படுவது - சலவை சோடா.

  • சமையல் சோடாவின் வேதியியல் பெயர் - சோடியம் பை கார்பனேட்.[Sodium bicarbonate ].

  • கண்கள் மற்றும் சுவாச பாதைகளில் எரிச்சலை உண்டாக்கும் வாயு - சல்பர் டை ஆக்ஸைடு.

  • பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தும் வாயு - எத்திலின்.

  • செயற்கை மழை பொழிவதற்கு பயன்படுத்தப்படும் பொருள் - சில்வர் அயோடைடு. (Silver Iodide).

Silver Iodide

  • சுண்ணாம்புக்கல்லின் வேதியியல் பெயர் - ''கால்சியம் கார்பனேட்''. [Calcium Carbonate].

  • நீரில் கரையாத பொருள் - கந்தகம்.  

  • நீரில் கரையாத வாயு - நைட்ரஜன்.

  • குளிர்பானங்களில் அடைக்கப்படும் வாயு - கரியமில வாயு. [Carbon dioxide].

  • சிரிப்பூட்டும் வாயு எனப்படுவது - நைட்ரஸ் ஆக்ஸைடு.

இதுபோல் இன்னும் பல அறிவுசார்ந்த விஷயங்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

>> "தகவல் பெட்டகம் - மனித உடலியல் - general knowledge."<<

💞💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.