"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" பொது அறிவு தகவல்கள் - General knowledge information.

பொது அறிவு தகவல்கள் - General knowledge information.

General knowledge information.

உறவுகளைத் தெரிந்துகொள்வதில் துறவுகொள்ளக் கூடாது. மனிதர்கள் மட்டுமே நம் உறவுகள் அல்ல. நம்முடைய மூச்சுக்காற்றை பகிர்ந்துகொண்டு வாழும் அத்தனை உயிரினங்களும் நம் உறவுகளே! 

எனவே அவைகளைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள முற்படாவிட்டாலும் சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்துகொள்ள ஆர்வம் கொள்வது அடிப்படையான பண்பு. வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

பொது அறிவு தகவல்கள்.

  • நியூஸிலாந்தில் காணப்படும் வால் இல்லாத பறவை - கிவி.

  • ஒரு நத்தையால் எத்தனை ஆண்டுகளை தொடர்ச்சியாக தூக்கத்தில் கழிக்க முடியும் - மூன்று ஆண்டுகள்.

  • வாலில்லா குரங்குகளில் மிகப் பெரியது எது - கொரில்லா.

  • அதிக வேகமாக பறக்கும் பறவை - உழவாரன் என்னும் ''ஸ்விப்ட்'' [Swift] பறவை.

  • மிகச் சிறிய முட்டைகளைக் கொண்ட பறவை - ஹம்மிங் பறவை.

  • ஒட்டகப் பறவை என்று அழைக்கப்படும் பறவை - நெருப்புக்கோழி.

  • உலகிலேயே மிக மெதுவாக பறக்கும் பறவை - ''உட்காக்''.

  • நிலத்தில் மிக மெதுவாக  செல்லும் விலங்கு - ஸ்லோத்.
  • தேரையின் ஆயுள் காலம் எவ்வளவு - 35 வருடங்கள்.

  • வெட்டுக்கிளியின் இரத்தத்தின் நிறம் - ''வெள்ளை''.

  • கூடுகட்டி வாழும் விலங்கு - "வைல்ட் போயர்" என்னும் ஒருவகை காட்டுக்கரடி.

  • கழுகுகளின் ஆயுட்காலம் - 40 ஆண்டுகள்.

  • குரங்கு இனங்கள் அதிகம் வாழும் நாடு - பிரேசில்.

  • காண்டாமிருகம் அதிக அளவில் வாழும்நாடு - ஆப்பிரிக்கா.

  • மிக வேகமாக வளரும் உயிரினம் - நீல திமிங்கலம்.

  • மூன்று இதயங்களைக் கொண்ட மீன்கள் - கட்டில் பிஷ்.[கணவாய் மீன்], ஆக்டோபஸ் மற்றும் ஸ்குவிட்.

General knowledge information

  • ஒட்டக சிவிங்கி தினமும் தூங்கும் கால அளவு - சுமார் அரை மணி நேரம் மட்டுமே.

  • எலிக்குட்டிகள் பிறந்த பின் கண்விழிக்க ஆகும் நாட்கள் - 14 நாட்கள்.

  • சுறா மீனின் கருப்பையின் எண்ணிக்கை எத்தனை - இரண்டு.

  • திமிங்கலம் மீனின் மூளையின் நிறை - சுமார் 7 கிலோ.

  • நான்கு இதயங்களைக் கொண்ட மீன் - ஹாக்மீன் [Hagfish].

  • ஒருகண்ணை திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பிராணி -  ''டால்பின்''. 

  • உலகில் உள்ள விலங்குகளில் அதிக எடை கொண்ட உயிரினம் - நீல திமிங்கலம்.
  • நான்கு மூக்குகளை கொண்ட உயிரினம் - நத்தை.

  • வான்கோழியின் பூர்வீகம் எது - அமெரிக்கா.

  • கங்காரு ஓரு தடவை தாண்டும் தூரம் எவ்வளவு தெரியுமா - 13 மீட்டர். 

  • உலகின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி - ''மோனார்க் பட்டர்பிளை''.

  • கருப்பு சிலந்திகளின் ஆயுள் - சுமார் 25 ஆண்டுகள்.

  • குட்டிபோடும் தேள் இனம் - அரக்னிடா.

  • கொசுக்களை கட்டுப்படுத்த நீர்தேக்கங்களில் வளர்க்கப்படும் மீன் - கம்பூசியா. (gambusia).

Swift_Hagfish_gambusia

  • மீன் இனங்களில் கூடு கட்டி வாழும் மீன் இனம் - ஸ்டிக்ஸ் பேக்.

  • நம் வீடுகளில் காணும் ஈக்களின் ஆயுட்காலம் எத்தனை நாட்கள் தெரியுமா - சுமார் 2 வாரங்கள்.

  • தோல்கள் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - மண்புழு. (Earthworm).

  • கடல் ஆமை ஒரு தடவை இடும் முட்டைகளின் எண்ணிக்கை - சுமார் 200.

  • இந்தியப் பறவைகளில் மிகவும் உயரமான பறவை - சாரஸ் கொக்கு. சுமார் ஆறு அடிகள் வரை உயரம் இருக்கும்.

  • முன்னங்கால்களில் காதுகளை கொண்ட உயிரினம் எது - வெட்டுக்கிளி.

  • மனிதனுக்குப் போட்டியாக குறட்டைவிட்டு உறங்கும் விலங்கு - யானை.

மேலும் இதைப்போல் இன்னும் பல பொது அறிவு விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டுமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.


💞💞💞💞💞💞

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.