"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" பூமி - பயோடேட்டா - Earth biodata.

பூமி - பயோடேட்டா - Earth biodata.

Earth biodata.

நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிலிருந்து இது மூன்றாவது கோளாக அமைந்துள்ளது. இதன் மேற்பகுதி மூன்று பங்கு நீர் பரப்பையும், ஒருபங்கு நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.

பூமி - பயோடேட்டா.

நம் சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும், சூழ்நிலை மற்றும் பருவ நிலை மாற்றங்களையும் கொண்ட ஒரே கோள் இதுவே.

இது சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இது ஒரு துணைக்கோளினை கொண்டுள்ளது.

இனி பூமியை பற்றிய முக்கியமான விபரங்களை மட்டும் பார்ப்போம்.

சூரியனிடமிருந்து தொலைவு 14,96,00,000 கி . மீ. 

சூரியஒளி பூமியை வந்தடையும் கால அளவு - 8 நிமிடங்கள்.

சந்திரனிடமிருந்து தொலைவு - 240,000 கி . மீ .

சூரியனை  சுற்றி வரும் கால அளவு - 365. 256 நாட்கள்.

சுழலும் முறை - வலமிருந்து இடம் (மேற்கிலிருந்து கிழக்கு).

சூரியனை சுற்றும் வேகம் 1 செகண்டிற்கு 29.783 k .m .

தன்னைத்தானே சுற்றும் கால அளவு - 23 மணி 56 நிமிடங்கள்.


Earth_biodata

பூமியின் சராசரி (ஆரை ) விட்டம் - 6371 கி . மீ

பூமியின் கிடை அச்சு சுற்றளவு - 40,076 கி.மீ.

பூமியின்  துருவ (ஆரை) விட்டம் - 6356.8 கி . மீ

பூமியின் விட்டம் (நில நடு கோடு  வழியாக) - 12,756 கி .மீ .

பூமியின் விட்டம் (வட தென் துருவம் வழியாக) - 12,713 கி . மீ .

சாய்வு கோணம் - 23. 439281 பாகை

பூமியின் வயது ஏறக்குறைய  4,550 பில்லியன். [4,55,00,00,000 ஆண்டுகள்] 

பூமியின் எடை - ஏறக்குறைய 6,000 மில்லியன் மில்லியன் டன்கள்.

வளி மண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் - 101.3pa.

வாயு மண்டல உயர அளவு - 1000 k .m .

earth bio data

பூமியின் மைய அழுத்தம் - 360 ஜிகா பேஸ்கல்ஸ்.

பூமியின் மைய பகுதி வெப்பம் - 7000 கெல்வின்.

பூமியின் மைய ஈர்ப்பு விசை - 0.99732 கிராம்.

பூமியின் சராசரி அடர்த்தி - 5.5351g /cm3.

பூமியின் மொத்த பரப்பளவு - 510 மில்லியன் சதுர கி.மீ

நீரின் பரப்பளவு - ஏறக்குறைய 362 மில்லியன் சதுர கி.மீ. [71 % ]

பூமியின் நிலப்பரப்பளவு - ஏறக்குறைய 148 மில்லியன் சதுர கி.மீ. [29%]

பெருங்கடலின் சராசரி ஆழம் - கடல் மட்டத்திலிருந்து 3,795 மீ.

துணைக்கோள் - 1 (சந்திரன்).

மேலும் பூமியைப்பற்றிய முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை தட்டுங்க..

>> பூமி அறிவியல் - Earth Science <<

〖〗〖〗〖〗〖〗

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்