Aristotle Thathuvangal.
Aristotle - Philosophy
அரிஸ்டாட்டில் - Aristotle. என்பவர் கி . மு 384 முதல் கி . மு 322 வரை வாழ்ந்த ஒரு தலைசிறந்த கிரேக்க தத்துவ ஞானி.
மாசிடோனியாவின் மன்னராக விளங்கிய "அமெண்டா" (Amyntas) வின் மகன்தான் அரிஸ்டாட்டில். தாயாரின் பெயர் "ஸ்நிக்கோ மாக்கஸ்". ஆக மொத்தத்தில் நம்முடைய அரிஸ்டாட்டில் ராஜ பரம்பரை.
தன்னுடைய சுயவிருப்பம் மற்றும் ஆர்வத்தின் காரணமாக சாக்ரடீஸின் மாணவரான "பிளாட்டோ" (Plato) விடம் தத்துவம் பயின்றார். பின்னாளில் ஒரு தலைசிறந்த தத்துவ இயல் ஆய்வாளராகவே மாறிப்போனார்.
அரிஸ்டாட்டில்.
வாழ்க்கை குறிப்பு.
பெயர் :- அரிஸ்டாட்டில் - Aristotle.
பிறப்பு :-கி.மு 384.
வாழ்க்கை :-தத்துவஞானி.
பிரகாசித்தது :- இசை (Music) நாடகம் (Drama), கவிதை (Poem), அரசியல் (Politics), அறிவியல் (Science).
இறப்பு :- கி.மு 322.அரிஸ்டாட்டில் உதிர்த்த தத்துவ முத்துக்கள்.
- கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். பகைவனை அடக்குபவனை விட ஆசைகளை அடக்குபவனே வீரன் எனலாம்.
- நம்முடைய நற்பண்புகளுக்கும், அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தின் அளவும், மகிழ்ச்சியின் அளவும் இருக்கும்.
- அனைவருக்கும் நண்பனாக இருக்க விருப்பப்படுபவன் இறுதியில் யாருக்கும் நண்பனாக இருக்க முடியாமல் துயரப்படுவான்.
- மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளும் அல்ல, இடையூறுகளும், துன்பங்களுமே... இடர்பாடுகளே ஒரு மனிதனுக்கு உண்மையான நண்பனை எடுத்துக்காட்டும்.
- உன் தவறுகளை சுட்டிக்காட்டி உன்னை விமர்சனம் பண்ணுபவனே உண்மையான நண்பன், வெறும் முகஸ்துதி செய்கிறவன் உன் முதல் எதிரி என்பதை நினைவில் கொள்.
- மனிதன் தனிமனித சிந்தனை கொள்ளாமல் சமூக சிந்தனையோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும். எவனொருவன் சமூக சிந்தனையோடு வாழ்கிறானோ அவனே மனிதன் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் தகுதியை அடைகிறான்.
- தெரிந்து கொண்டவர்கள் செய்து முடிப்பார்கள், புரிந்து கொண்டவர்கள் பிறருக்கு அதைக் கற்றுக் கொடுப்பார்கள்.
- அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
- மகிழ்ச்சியாக தொடங்கப்படும் செயல்கள் யாவும் முழுமையான முடிவுகளைத் தரும்.
- நல்ல ஆரம்பம் உங்களின் கடின வேலையை பாதியாக குறைத்துவிடும். எனவே எவ்வளவு கடின வேலையாயினும் அதனை மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள்.
- அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ அல்லது சிலரிடமோ, அல்லது பலரிடமோ இருக்கலாம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காக பாடுபட வேண்டும்.
- நம்முடைய மகிழ்ச்சியும், துக்கமும் நம்முடைய மனதிலுள்ள எண்ணங்களை சார்ந்தே இருக்கும்.
- கோபம் கொள்வது எந்த மனிதனும் செய்யக்கூடிய மிக எளிதான செயல்தான், ஆனால் சரியான நேரத்தில் சரியான நபரிடம், சரியான காரணத்திற்காகக் கோபப்படுவது என்பது எளிய செயல் அல்ல.
- உன் மனதில் உள்ள ஆற்றலே உன் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அடிப்படை சாரம்.
- பெருந்தன்மையான குணம் ஒருவருக்கு இருப்பின் அது அவரிடம் உள்ள அனைத்து நற்குணங்களுக்கும் மகுடம் சூட்டியது போன்ற பெருமையை தரும்.
- கல்வியின் வேர்களோ கசப்பானவை... ஆனால் பின்னால் பலன் தரும் அதன் கனிகளோ மிகவும் இனிப்பானவை.
- பார்வையாளனாக அமைதியாக இருப்பதை விட போட்டியில் பங்கு பெற்று தோற்பது சிறந்தது.
- தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள், ஆனால் நல்ல சிந்தனை கொண்ட மனிதர்களோ அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்.
- தன் அச்சங்களிலிருந்து எவனொருவன் மீண்டு வருகிறானோ அவனே உண்மையில் சுதந்திரம் அடைந்தவனாகிறான். விழுவதெல்லாம் எழுவதற்குதானே தவிற அழுவதற்கு அல்ல.
- சமமற்ற இரண்டை சமமாக்க முயற்சி மேற்கொள்வது சமத்துவம் அல்ல. அது சமத்துவமின்மையின் மோசமான வடிவம்.
- முனிவரின் மூளையில் கூட ''முட்டாள்தனம்'' என்பது ஒரு மூலையில் இருக்கும்.
❤❤❤❤❤❤
2 கருத்துகள்
௮௫மை...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.